ஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓயோ ஹோட்டல்ஸ் நிறுவனம் தன்னுடைய இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய தலைமைச் செயல் அதிகாரியாக ஆதித்ய கோஷ் நியமித்துள்ளது. சொல்லப் போனால் ஓயோவின் முதல் தலைமைச் செயல் அதிகாரியும் இவர் தான் (இந்தியப் பிராந்தியத்துக்கு).

 

இது புதுசு

இது புதுசு

இந்திய ஸ்டார்ட் அப்புகள் எல்லாம் தற்போது வாயப் பிழந்து ஓயோவைப் பார்க்கிறார்கள். காரணம் இப்படிப்பட்ட பெரிய ப்ரொஃபசனல்களை வளரும் கட்டத்திலேயே அழைத்து தலைமை பொறுப்பு கொடுப்பது எல்லாம் இந்திய ஸ்டார்ட் அப்-களில் முற்றிலும் புதிய நடவடிக்கைகள்.

அனுபவம்

அனுபவம்

இவர் ஏற்கெனவே இண்டிகோ ஏர்லைன்ஸின் தலைவராக இருந்து அதை வெற்றிகரமாக வழி நடத்திக் காட்டியவர். டிசம்பர் 1-ம் தேதி அவர் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

இந்தியா மட்டுமின்றி தெற் காசிய பிராந்தியத்தில் ஓயோ ஹோட்டல் வர்த்தக வளர்ச்சிக்கு இவர் வழிநடத்துவார் என ஓயோ ஹோட்டல் குழுமம் தெரிவித்து இருக்கிறது.

விரிவாக்கமும் முதலீடுகளும்
 

விரிவாக்கமும் முதலீடுகளும்

நேபாளத்தின் வர்த்தக விரிவாக்கப் பணிகளும் இவரது பொறுப் பின் கீழ் வரும். நிறுவனம் வளர்ந்து வரும் சூழலில் மிகவும் பிரபலமான, திறமையானவர்கள் தலைமைப் பொறுப்பேற்றது வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு முதலீடுகளும் வரும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆதித்ய கோஷ் இப்பொறுப்புக்கு தேர்வு செய்ததாக குழுமத்தின் நிறுவனர் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 மதிப்பீடுகள்

மதிப்பீடுகள்

ஓயோ இந்தியாவில் நல்ல மதிப்பீடுகள் உடன் இருக்கும் ஒரு பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்தியாவில் நல்ல வேகத்தில் தன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. தற்போது 3.3 லட்சம் அறைகளை ஓயோ விரல் நுனியில் வைத்திருக்கிறது.

படை

படை

ஏழு நாடுகள், 500-க்கும் மேற்பட்ட நகரங்கள், 12,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் என்று பெரிய படையையே சில அங்குள நீள அகலத்தில் (மொபைல் போனில்) கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அது ஓயோ தான் என்று நிச்சயம் சொல்லலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ceo oyo ஓயோ indigo
English summary

aditya ghosh appointed as a new ceo for oyo

aditya ghosh appointed as a new ceo for oyo
Story first published: Friday, November 16, 2018, 15:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X