ரூ.200 கோடி to ரூ.2,00,000 கோடி, 4 ஆண்டில் ஒரு பாஜக MLA-ன் வளர்ச்சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-ம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் வருமானம் 27% அதிகரித்திருக்கிறதாம். இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் மொத்த வருமானம் 2018-ல் 2.37 லட்சம் கோடியாம். இப்படி அதிகரித்திருப்பதன் பின்னனியில் இருக்கும் சில கறுப்பு, வெள்ளைப் பக்கங்களைப் பார்ப்போம். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயமும் இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஒரு MLA. ஆம் மும்பை தெற்க் பகுதியின் சட்ட அம்ன்ற உறுப்பினர். முழுமையாகப் படிங்களேன்.

 

ராஜிவ் சிங்

ராஜிவ் சிங்

சொத்து: 17,690 கோடி ரூபாய்

பதவி: துணைத் தலைவர்,

நிறுவனம்: DLF Limited

வாழும் நகரம்: தில்லி

இவர் இந்தியாவின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் துனைத் தலைவர். இவருடைய தந்தை தான் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த கேபி சிங். 1942-ல் தொடங்கி இன்று வரை இயங்கும் 75 வயது பழைமையான ரியல் எஸ்டேட் நிறுவனம்.

பிசினஸ் டல்

பிசினஸ் டல்

இன்று வரை இந்திய பங்குச் சந்தைகளில் அதிக சந்தை மதிப்புடன் இருக்கும் நிறுவனம் DLF தான். ஒரு வருடத்துக்கு சுமார் 3000 கோடி ரூபாய்க்கு மேல் கட்டடங்களை விற்கும் நிறுவனம். ஒரு காலத்தில் ஐபிஎல்- போட்டிகளையே மொத்தமாக குத்தகைக்கு எடுத்து நடத்தும் அளவுக்கு பணத்தில் விளையாடிய வலுவாக இருந்த நிறுவனம் இன்று ரியல் எஸ்டேட் பிசினஸ் டல்லாக இருப்பதால் தன்னை காத்துக் கொள்வதற்கே கொஞ்சம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

Redefining
 

Redefining

இந்த நிறுவனம், தான் ரியல் எஸ்டேட் என்கிற சொல்லுக்கு இந்தியாவில் சில புதிய அர்த்தங்களைக் கொடுத்தது. கட்டிடங்களை மட்டும் கட்டிக் கொடுக்காமல், மெட்ரோ, சாலை அமைப்பு, கோல்ஃப் மைதானம் என்று பல திட்டங்களை கையில் எடுத்து வேலை பார்த்தது.

நிறைய பிராஜெக்டுகள்

நிறைய பிராஜெக்டுகள்

ஏகப்பட்ட டெக் பார்க்குகள், DLF சிட்டி, DLF சைபர் ஹப், DLF சைபர் சிட்டி, மால்கள் என்று பல்வேறு வணிக வளாகங்களை கட்டி வாழ்ந்து வரும் நிறுவனம் இது. கடந்த 2008 - 09 காலகட்டத்தில் இருந்து ரியல் எஸ்டேட் மிக மிக மந்தமான நிலையில் இருக்கும் போதும் இந்த நிறுவனம் மட்டும் மார்ச் 2018 நிலவரப்படி 365 கோடி லாபம் பார்த்திருக்கிறது என்றால் எல்லாம் இவர்கள் வைத்திருக்கும் டெக் பார்க்குகள் மற்றும் DLF சிட்டிகளின் வருமானம் தானாம். குறிப்பாக எம்போரியோ மால்கள் DLF-ன் தனி படைப்புகள் தான். சாதாரண குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களுக்கு கோல்ஃப் கோர்ட் அமைத்து கட்டிக் தந்த முதல் நிறுவனமும் இது தானாம்.

விதிமீறல்கள்

விதிமீறல்கள்

குருகுராமில் அனுமதி இல்லாமல் 157 கூடுதல் வீடுகளைக் கட்டியது, கேரளத்தில் கடற்கரையில் முறையான அனுமதி பெறாமல் வீடுகளை கட்டி விட்டது, அந்த வீடுகளை இடிக்க கேரள நீதிமன்றம் உத்தரவிட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது, குருகிராமில் குடியிருப்பு வீடுகள் எனச் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு வணிக பயன்பாட்டுக்கு விற்து என பல்வேறு புகார்களை அடிக்கிக் கொண்டே போகலாம். DLF violation என தேடினால் அத்தனை வழக்குகள் வந்து விடையாக நிற்கின்றன.

ஜிதேந்தர் விர்வானி

ஜிதேந்தர் விர்வானி

சொத்து: 23,160 கோடி ரூபாய்

பதவி: தலைவர்

நிறுவனம்: Embassy Group

வாழும் நகரம்: பெங்களூரூ

இன்று இந்தியாவில் official complex, office work space என்கிற வார்த்தைகளை அதிகம் கேட்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜிதேந்தர் தான்.

இந்தியாவின் 71-வது பணக்காரர், உலகில் 1103-வது செல்வந்தர்.

முதல் முறையாக

முதல் முறையாக

இந்தியாவிலேயே முதல் முறையாக REIT ரக ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவரும் இவரே. கூடிய விரைவில் இவரின் எம்பஸி நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட இருக்கிறார்கள். அப்படி பட்டியல் இட்டால் தெளிவாக இந்தியாவில் பட்டியல் இடப்பட்ட முதல் REIT நிறுவனம் எம்பஸியாகத் தான் இருக்கும்.

அதென்ன REIT

அதென்ன REIT

Real Estate Investment Trust என்பது ஒரு வகையான நிறுவனமே. இந்த நிறுவனம் வீடுகளை கட்டி விற்பதோடு நின்று கொள்ளாது. உதாரணமாக: தானே முதல் போட்டு ஒரு பெரிய அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை கட்டி பராமரித்து நல்ல வாடகைக்கு விடும். வரும் வாடகை தான் வருமானம். இப்படி வேறு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டங்களிலும் முதலீடு செய்யும். வரும் வருமானத்தில் பங்கு போட்டுக் கொள்ளும். இப்படி ரியல் எஸ்டேட் துறையில் எப்படி எல்லாம் காசு பார்க்க அமுடியுமோ அப்படி எல்லாம் வளைந்து நெளிந்து காசு பார்க்கும் ஒரு விதமான நிறுவனம் தான் இந்த REIT. இது இந்தியாவுக்கு புதுசு தான். அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் ஜிது.

கூகுளே வந்தாலும்

கூகுளே வந்தாலும்

இவர் பெங்களூரூவில் கட்டி விட்டிருக்கும் கட்டிடங்களில் தான் கூகுள், ஐபிஎம், ஜேபி மார்கன் ஸ்டான்லி என்று பல்வேறு பெரிய கார்பப்ரேட் நிறுவனங்கள் ஒத்திக்கு தங்கி வேலை பார்க்கின்றன. இவர் கட்டும் வீடுகள் எல்லாம் அமேஸானின் அலெக்ஸா enabled ஆகவே இருக்குமாம். அதை அவர் வலைதளங்களும் உறுதி செய்கின்றன. இப்படி டெக்னாலஜியையும், ரியல் எஸ்டேட்டையும் ஒரு விதமாக குழைத்து வியாபாரம் செய்வதில் இவர்கள் மன்னர்கள்.

இன்னும் இருக்குப்பா

இன்னும் இருக்குப்பா

1993-ல் தொடங்கிய எம்பஸி நிறுவனம் தற்போது வரை 53 கோடி சதுர அடிக்கு மேல் கட்டுமானம் செய்து கொடுத்திருக்கிறது, இவர்கள் இடத்தில் வாடகைக்கோ அல்லது ஒத்திக்கோ சுமார் 20 லட்சம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இன்னும் கைவசம் 4,35,60,000 சதுர அடி இருக்கின்றனவாம். இன்னும் பல புதிய ஆச்சர்யமான திட்டங்களுடன் களம் இறங்க இருக்கிறார்களாம்.

மங்கள் பிரபாத் லோதா

மங்கள் பிரபாத் லோதா

சொத்து: 27,150 கோடி ரூபாய்

பதவி: நிறுவனர்

நிறுவனம்: Lodha Group

வாழும் நகரம்: மும்பை

பிசினஸ் சைட்

பிசினஸ் சைட்

2018 நிலவரப்படி இந்தியாவின் 52-வது பெரிய பணக்காரர். உலகில் 606-வது பணக்காரர். இவருக்கு அநேகமாக ரியல் எஸ்டேட் சைட் பிசினஸ் தான், ஏன் என்றால் இவர் ஒரு அரசியல்வாதி. அதுவும் வலது சாரி. மகாராஷ்டிர பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்.

சட்ட மன்ற உறுப்பினர்

சட்ட மன்ற உறுப்பினர்

தெற்கு மும்பையின் மலபார் ஹில் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் வேறு. ஒரு முறை இரண்டு முறை அல்ல... ஐந்து முறை ஒரே தொகுதியில் நின்று தொடர்ந்து வ்ற்றி பெற்று வரும் வலுவான சட்ட மன்ற உறுப்பினர். ஒரு முக்கியமான விஷயம், இவர் அரசியலில் ஜொலிக்க, பசு வதை தடை சட்டத்தை மகாராஷ்டிரத்தில் கொண்டு வந்து ஹிந்துக்களின் வோட்டுக்களை கொள்ளை அடித்தவர். இவருக்கு 2014 தேர்தல் சமயத்தில் இருந்த சொத்து மதிப்பு வெறும் 198.62 கோடி தானாம். இப்போது 27,160 கோடி ரூபாயாம். கொஞ்சம் ஓவர் தான் இல்ல.

வரலாறு

வரலாறு

சுதந்திர போராட்ட தியாகி மற்றும் முன்னாள் கெளஹாதி உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி குமன் மால் லோதாவின் மகன் தான் மங்கள் பிரபாத் லோதா. இன்றைக்கு போலவே இன்ஜினியரிங் படித்து விட்டு பல வேலைகளைப் பார்ப்பது போல, மங்கள் பிரபாத் லோதாவும் வக்கீலுக்கு படித்து விட்டு 1981-ல் லோதா குழும நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார்.

 அரசியல் தான் ரைட்டு

அரசியல் தான் ரைட்டு

அப்பாவின் பதவி, அரசியல் ஈடுபாடு, கல்லா கட்டும் பிசினஸ் என்று ஒரு நல்ல காம்போ அமைந்ததால் கம்பெனி எங்கேயோ வளர்ந்து விட்டது. இவருக்கு நடுத்தர மக்களுக்கான குடியிருப்புகளை கட்டி விற்கத் தான் ஆசை. ஆனால் அபிஷேக் மற்றும் அபிநந்தன் இரு மகன்கள் தான் "பெருசா பண்ணலாம்பா, நல்லா காசு இருக்கு" என இவரை டைவர்ட் செய்தது. விளைவு "World One"

சிக்கல்கள்

சிக்கல்கள்

உலகின் உயரமான சிலை மட்டும் அல்ல உலகின் உயரமான குடியிருப்புக் கட்டடமும் இந்தியாவில் தான் வர இருக்கிறது. மும்பையின் பரேல் பகுதியில். உபயம் லோதா குழுமம். கடந்த எட்டு வருடங்களாக லோதா குழுமம் "World One" என்று ஒரு residential project-ஐ முறையான அனுமதிகள் இல்லாமலேயே கட்டி வருகிறது. இந்த "World One" கட்டிடத்தின் உயரம் 423 மீட்டர். சுமார் 1300 அடி. இவ்வளவு உயரத்துக்கு கட்டிடம் கட்டும் போது இந்திய விமான ஆணையத்திடம் (Airports Authority of India (AAI) சரியான அனுமதிகள் வாங்காமலேயே 117 மாடி குடியிருப்பைப் கட்டத் தொடங்கிவிட்டார்கள்.

அட பாரேன்

அட பாரேன்

சமீபத்தில் லோதா குழுமம் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிட முயற்சித்த போது, மேற்சொன்ன விதி முறை மீறல்களைச் சுட்டிக் காட்டியது. அதோடு Roselabs நிறுவனத்தை கையகப்படுத்தும் போது செய்த சில முறைகேடுகளைப் பற்றியும் விசாரித்து வருகிறது செபி. இவர்களிடம் தற்போதைக்கு 4 கோடி சதுர அடி நிலத்துக்கு, லண்டன், முன்பை, பெங்களூரூ, ஹைதராபாத் என்று பல்வேறு நகரங்களில் 30 ப்ராஜெக்ட்கள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். இது போக இவர்கள் கை வசம் 35 கோடி சதுர அடி நிலமும் வைத்திருக்கிறார்கள்.

கதறல்

கதறல்

ஒரு ஓரத்தில் "World One" திட்டத்தில் காசு போட்டவர்கள் "ஐயா எங்க வீட்டக் கட்டிக் கொடுத்துடுங்க இல்லன்னா காசையாவது திருப்பிக் கொடுங்க என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். காசு கொடுத்து வீடு புக் செய்தவர்கள் எல்லாம் ஏழைகளும் அல்ல... கார்ப்பரேட்டில் செழிக்கும் கம்பெனி பெரும்தலைகள் தான்... ஆனால் அவர்களாலேயே பேசி தங்கள் பணத்தைத் திரும்ப வாங்க முடியவில்லையாம்... பாவம். ஏற்கனவே 8 வருடங்களாக கட்டுமானம் நடக்கிறது... இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ஒரு கட்டடத்தைக் கட்ட இருக்கிறார்கள், பணம் கொடுத்தவர்களைக் கதற விடப் போகிறார்களோ.... அது மங்கள் பிரபாத் லோதாவுக்குத்தான் தெரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bharatiya janata party mla is in the list of wealthiest person in india with asset worth rs 27000 crore

bharatiya janata party mla is in the list of wealthiest person in india with asset worth rs 27000 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X