முன்பதிவு செய்த டிக்கெட்டை சொல்லாமல் ரத்து செய்த ஐஆர்சிடிசி.. ரூ. 45,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியன் ரயில்வேஸ் கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷன் நிறுவனம் தங்களது தளத்தின் மூலம் புக் செய்த பயனரின் டிக்கெட்டினை சொல்லாமல் ரத்து செய்ததை அடுத்துத் தொடரப்பட்ட வழக்கில் ஐஆர்சிடிசி மீது 45,000 ரூபாய் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தவறான மின்னஞ்சல்

தவறான மின்னஞ்சல்

ரோஹித் ஷர்மான என்ற மூன்றாம் நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் கோரிக்கையினை ஏற்றுச் சூஷ்வான் குப்தா ரே என்பவர் தனது குடும்பத்துடன் ரயில் பயணம் செய்ய இருந்த டிக்கெட்டினை ஐஆர்சிடிசி நிர்வாகம் ரத்துச் செய்து 3,450 ரூபாயினைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. அதுவும் ரயில் புறப்பட இருந்த அன்று காலை.

விமானப் பயணம்

விமானப் பயணம்

இந்த எஸ்எம்எஸ்-ஐ கண்டு அதிர்ச்சி அடைந்த குப்தா உடனே ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்தப் பயணத்தினை அவர் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக 20,000 ரூபாய் செலவு செய்து விமானம் மூலம் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வழக்கு
 

வழக்கு

இதனால் மன உலைச்சல் அடைந்த குப்தா ஐஆர்சிடிசி நிர்வாகம் மீது வழக்கு தொடர்நதை அடுத்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்து இந்த வழக்கில் இருந்து உன்மையில் புரிந்துகொண்டு 45,000 ரூபாயினை அபராதமாக விதித்துள்ளது.

அபராதம் குறித்த விவரம்

அபராதம் குறித்த விவரம்

விமானத்திற்காக அவர் செலவு செய்த 20,000 ரூபாய், இழப்பீடு 15,000 ரூபாய் மற்றும் அவருக்குக் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மன உலைச்சலுக்காக 10,000 ரூபாய் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC told to pay man ₹45,000 for cancelling 3 reserved tickets

IRCTC told to pay man ₹45,000 for cancelling 3 reserved tickets
Story first published: Thursday, November 22, 2018, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X