656 கோடீஸ்வரர்கள் போட்டி இடும் தேர்தல்... வாய் பிழந்த தேர்தல் ஆணையம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் 2018 நவம்பர் 28-ம் தேதி நாளை நடைபெற உள்ள நிலையில் அதிகப்படியான கோடீஸ்வர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கோடீஸ்வரர்கள்

கோடீஸ்வரர்கள்

தேர்தலில் 2,716 நபர்கள் போட்டியிட்டுள்ள நிலையில் அதில் 656 நபர்கள் அதாவது 24 சதவீதத்தினர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதுவே 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2,494 நபர்கள் போட்டியிட்ட போது 472 நபர்கள் தாவது 19 சதவீதத்தினைக் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

வழக்குகள்

வழக்குகள்

மேலும் 2,716 வேட்பாளர்களில் 464 நபர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2013-ம் ஆண்டு 407 நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாப் 3 கோடீஸ்வரர்கள்

டாப் 3 கோடீஸ்வரர்கள்

கோடீஸ்வர்கள் வேட்பாளர் பட்டியலில் கதானி மாவட்டத்தினைச் சேர்ந்த பாஜக வேட்பாளரான சஞ்சய் சத்யேந்திரா பதாக்கின் சொத்து மதிப்பு 226 கோடி ரூபாயாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான சஞ்ய் சுக்லாவின் சொத்து மதிப்பு 139 கோடி ரூபாய், மூன்றாம் இடத்தில் நர்சிங்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சஞ்ய் ஷர்மாவின் சொத்து மதிப்பு 130 கோடி ரூபாயாக உள்ளது.

வேட்பாளர் சொத்து விவரங்கள்

வேட்பாளர் சொத்து விவரங்கள்

மத்திய பிரதேச தேர்தலில் ரூ. 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை 7 சதவீதத்தினரும், 2 முதல் 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை 8 சதவீதத்தினரும், 50 லட்சம் முதல் 2 கோடி மதிப்பிலான சொத்து மதிப்பினை 20 சதவீதத்தினரும், 10 லட்சம் முதல் 50 லட்சம் மதிப்பிலான சொத்து மதிப்பினை 27 சதவீதத்தினரும், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகச் சொத்து மதிப்புள்ள வேட்பாளர்களாக 38 சதவீதத்தினரும் உள்ளனர்.

கட்சி வாரியான கோடீஸ்வரர்கள்

கட்சி வாரியான கோடீஸ்வரர்கள்

பாஜக வேட்பாளர்களில் 78 சதவீதத்தினர் என 173 நபர்கள் கோடீஸ்வர்களாகவும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களில் 24 சதவீதத்தினர் என 52 நபர்கள் கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர்.பிஎஸ்பி வேட்பாளர்களில் 18 சதவீதத்தினை என 38 சதவீதத்தினரும், ஆம் ஆத்மி கட்சியில் 35 சதவீதத்தினர் என 17 நபர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் சொத்து மதிப்புக் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்க்கும் குறையாமல் உள்ளது.

சராசரி

சராசரி

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சராசரியை எடுத்தாலும் 1.73 கோடி ரூபாய் வருகிறது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இந்தப் பட்டியலில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் 7 வேட்பாளர்களின் சொத்து மதிப்புப் பூஜ்ஜியம் என்பது ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crorepati’s In Madhya Pradesh Poll. Check Out The Assets Of BJP, Congress Candidates

Crorepati’s In Madhya Pradesh Poll. Check Out The Assets Of BJP, Congress Candidates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X