உங்க ரயில் டிக்கேட்டை மற்றவர்களுக்கு மாற்றலாம்..! இப்படிக்கு irctc..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவர் தான் முன் பதிவு செய்த ரயில் டிக்கேட்டை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுகு மாற்றலாம். உதாரணமாக சென்னை முதல் பெங்களூரூ வரைக்கான பயணத்துக்கு அடுத்த வாரம் டிக்கெட் முன் பதிவு செய்திருக்கிறீர்கள். திடீரென அலுவலகத்தில் விடுப்பு கிடைக்கவில்லை, உங்களுக்கு பதிலாக உங்கள் மனைவியோ அல்லது மகனோ கட்டாயம் போயே ஆக வேண்டும்... என்ன செய்யலாம்.

 

 குடும்பத்தினருக்கு

குடும்பத்தினருக்கு

ஒருவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே டிக்கேட்டை மாற்றம் செய்து கொடுக்கலாம். இதற்கு முதன்மை முன் பதிவு கண்காணிப்பாளருக்கு (Chief Reservation Supervisor) அதிகாரம் இருக்கிறது. இதை ஆன்லைனில் செய்ய முடியாது.

சமர்பித்தல்

சமர்பித்தல்

Chief Reservation Supervisor -இடம் உங்கள் முன் பதிவு செய்த டிக்கேட்டோடு, உங்கள் அடையாள அட்டைகளில் ஒன்றை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதோடு எந்த குடும்ப உறுப்பினருக்கு மாற்ற இருக்கிறீர்களோ, அந்த குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

 உறவினர் ஆதாரம்

உறவினர் ஆதாரம்

முக்கியமாக இவர் உங்கள் குடும்ப உறுப்பினர் என்பதற்கு ஏதாவது சான்றைக் கொடுக்க வேண்டும். கணவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில் திருமணச் சான்று, தந்தை மகன் என்றால் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை போன்றவைகளில் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்
 

குடும்ப உறுப்பினர்

மதுரை மற்ரும் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் ஊரில் உள்ள அனைவருமே மருகன், மச்சான், மாப்பிள்ளை உறவாகத் தான் இருக்கும். ஆகவே ரயில்வே ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறது. அந்த உறவு முறைகளுக்கு மட்டுமே டிக்கேட்டை மாற்ற முடியும்.

 உறுப்பினர் பட்டியல்

உறுப்பினர் பட்டியல்

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகள், கணவன், மனைவி அவ்வளவு தான். இந்த 10 உறவு முறைகளில் வருபவர்களுக்கு மட்டுமே முன் பதிவு செய்த டிக்கேட்டை மாற்றம் செய்ய முடியும். மருமகள், மருமகனுக்குக் கூட மாற்றம் செய்து கொடுக்க முடியாது என்பதை கவனிக்கவும்.

எப்போதுக்குள்

எப்போதுக்குள்

ரயில் திட்டமிட்ட இடத்தில், திட்டமிட்ட நேரத்தில் இருந்து புறப்பட 24 மணி நேரத்துக்கு முன் Chief Reservation Supervisor-ஐ பார்த்து டிக்கேட் மாற்றம் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் chart preparation-ல் பிரச்னைகள் எழும்.

எடுத்துக் காட்டு

எடுத்துக் காட்டு

நீங்கள் விஜயவாடாவில் இருந்து தில்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 12621 ரயிலில் 30-11-2018 பயணம் செய்ய இருக்கிறீர்கள். இன்று தேதி 27-11-2018. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது.

 புறப்படும் நேரம்

புறப்படும் நேரம்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் 29-11-2018 அன்று மாலை 5.15க்கு புறப்படும். எனவே நீங்கள் உங்கள் டிக்கெட்டை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் 28-11-2018 அன்று மாலை 5.00 மணிக்குள் செய்ய வேண்டும். அப்போது தான் Chart preparation இறுதியாக ரயிலில் பயணிக்க இருக்கும் பயணிகள் பட்டியலில் உங்கள் பெயர் எந்த சிக்கலும் இல்லாமல் இடம் பெறும்.

இனி ரயிலில் முன் பதிவு செய்த காசு வீணாகாது தானே...?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how to transfer confirmed rail tickets to our family members guidelines by irctc

how to transfer confirmed rail tickets to our family members guidelines by irctc
Story first published: Tuesday, November 27, 2018, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X