பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் இன்கம்மிங் கால் சேவை துண்டிப்பதற்கு எதிராக நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

புகார்
டெலிகாம் நிறுவனங்களின் இந்தச் சேவை துண்டிப்பு குறித்து அதிகளவிலான புகார்கள் டிராய் நோக்கிச் சென்றதை அடுத்து இதில் ஒழுங்கு முறை ஆணையம் தலையிட்டுள்ளது.

குறைந்தபட்ச பேலனஸ்
வங்கி கணக்கு போல ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச பேலன்ஸ் மற்றும் ரீசாஜ் செய்யவில்லை என்றால் டெலிகாம் சேவையினைத் துண்டிப்போம் என்று வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர்.

டிராய் உத்தரவு
டெலிகாம் நிறுவனங்கள் வழங்கியுள்ள கால அளவிற்கு வாடிக்கையாளர்கள் ரீசாஜ் செய்யவில்லை என்றால் சேவையினை முழுமையாகத் துண்டிக்கக் கூடாது என்று மட்டும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

எதிர்ப்பில்லை
ஆனால் டெலிகாம் நிறுவனங்கள் இந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து குறித்து எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே வோடாபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்யக் கூறி வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைக்கலாம் ஆனால் சிம் கார்டினை செயலிழக்க வைக்கக் கூடாது என்றும் மட்டும் தெரியவந்துள்ளது.

கட்டணம்
ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் குறைந்தது ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றன. இதனால் உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஏற்று வந்த முதியவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவின் வணிக ரீதியான சேவை பயன்பாட்டிற்கு வந்தது முதல் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நட்டத்தினைக் குறைக்கவே இதற்கு டிராய் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.