மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் வல்லரசு நாடுகள் தொடங்கும் வாழ வழி தேடும் நாடுகள் வரை அனைவரையும் இணைக்கும் ஒரு பொருள் அல்லது பண்டம் எரிசக்தி. எரிசக்திக்காக நடந்த போர்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்று சொல்வார்கள்.

 

 சிலிண்டர்

சிலிண்டர்

உலக அளவில் சமையல் எரிவாயுவுக்கு அதிகம் பயன்படுத்தும் முறை இந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் முறை தான். பொருளாதார அளவில் முன்னேறிய அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகள் தான் பைப்லைன் அமைத்து வீட்டுக்கு வீடு கேஸை சப்ளை செய்கிறார்கள். இதில் இந்தியாவும் ஒன்று. சிலிண்டர் விலையை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல் மற்றும் உணவுத் துறை தயாரிக்கும், பொருட்களைன் விலை அமையும்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

நேற்றைய தினம் (நவம்பர் 30) இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளது. கடந்த ஜூன் 2018-ல் இருந்து பெட்ரோல் டீசலைப் போல ஏறு முகத்திலேயே இருந்த விலை இப்போது தான் கொஞ்சம் கருணை காட்டி இறக்கம் கண்டிருக்கிறது சிலிண்டர் விலை. இதற்கு முக்கிய காரணம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு தானாம்.

கச்சா எண்ணெய் விலை
 

கச்சா எண்ணெய் விலை

அக்டோபர் 03, 2018-ல் 86 டாலருக்கு ஒரு பேரல் விற்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விலை நவம்பர் 30, 2018-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலருக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. சுமார் 30 சதவிகித விலை சரிவில் கச்சா எண்ணெய் இருப்பதால் தான் மோடி அரசும் தற்போது விலை குறைப்பில் இறங்கி இருக்கிறது.

 

 

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில்

நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுனமான இந்தியன் ஆயில் மானியத்தோடு வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலையை ரூ.6.52 குறைத்துள்ளது. இதனால் 507.42 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டரின் விலை இன்று முதல் 500.90 ரூபாய் ஆகக் குறைந்துள்ளது.

 முந்தைய நிலவரம்

முந்தைய நிலவரம்

தற்போது நடந்துள்ள விலை குறைப்புக்கு முன்னர் சுமார் 14.13 வரை ஒரு சிலிண்டரின் விலை ஏற்றப்பட்டது. கடைசியாக நவம்பர் 1-ல் அதிகரித்த விலை ரூ.2.94.

சந்தை விலை சிலிண்டர்

சந்தை விலை சிலிண்டர்

இந்தியன் ஆயில் அறிக்கையில் மானியமல்லாட்த சிலிண்டரின் விலையை அதிரடியாக 133 ரூபாய் குறைத்துள்ளது. இதனால் ஒரு 14.2 கிலோ சிலிண்டரின் விலை இந்த விலை குறைப்புக்கு பின் ரூ.809.50 விற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்புக்கு முன் ஒரு சிலிண்டரின் விலை 942.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மானியம்

மானியம்

வருடத்திற்கு ஒவ்வெரு வீட்டிற்கும் 12 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும். மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும். இந்த விலை குறைப்பு பின்னர் ஒரு சிலிண்டருக்கு ரூ.308.60 மானியமாகக் கிடைக்கும்.

மானியக் குறைப்பு

மானியக் குறைப்பு

சொல்லப் போனால் அரசுக்கு மக்களுக்கு வழங்கும் மானியத்தின் தொகையும் குறைந்திருக்கிறது. ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 433.66 வழங்கிக் கொண்டிருந்த அரசு, தற்போது ஒரு சிலிண்டருக்கு 308.60 ரூபாய் மட்டுமே வழங்கும். ஆக அரசுக்கும் இந்த விலை குறைப்பினால் லாபம் இருக்கிறது.

நெட்டிசன்கள் கேள்வி

நெட்டிசன்கள் கேள்வி

மோடிஜி எல்லாம் சரி கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் 2018-ல் ஒரு பேரல் பிரண்ட் கச்ச எண்ணெய் விலை 76 டாலர். இப்போது ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60 டாலர் ஆக 21 சதவிகிதம் விலை குறைந்திருக்கிறது. இப்போது விலை குறைப்புக்கு முன் சந்தை விலை யில் ஒரு சிலிண்டர் 942.50 ரூபாய். விலை குறைப்புக்கு பின் 842.50 ரூபாய். வெறும் 14 சதவிகிதம் தானே குறைந்திருக்கிறது மோடிஜி என தாளிக்கிறார்கள்.

 உச்ச விலை பிரச்சனை

உச்ச விலை பிரச்சனை

இதை எல்லாம் விட, அக்டோபர் 2018ல் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 86 டாலர். இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலர். ஆக சுமார் 30 சதவிகித விலை சரிவு. ஆனால் உங்கள் ராம ராஜ்ஜியத்தில் சிலிண்டர் விலை என்னவோ 14 சதவிகிதம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறதே...
பாத்துயா நம்மால் உடனே "நான் ஒரு ஏழைத் தாயின் மகன்..."-ன்னு டயலாக் விட ஆரம்பிச்சிருவாரு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

oil price slashed by 30% but modi regime lpg cylinder slashed only by 14%

oil price slashed by 30% but modi regime lpg cylinder slashed only by 14%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X