எப்பவுமே கடன் வாங்குறதுல நாங்கதாங்க டாப்பு... தமிழ்நாடா கொக்கா...!

By Sooranamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எது நடந்ததோ இல்லையோ தமிழகத்தில் முத்ரா திட்டம் முழுமையாகப் பயன்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் பெரும்பாலோனோர் முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ளனர். நான் கார்ப்பரேட்டை வகையைச் சேர்ந்த சிறிய தொழில் நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தில் எந்த நன்மையும் ஏற்படவில்லை.

 

முத்ரா திட்டம்

முத்ரா திட்டம்

முத்ரா திட்டம் 2015-2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது சிறு, குறு மற்றும நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கப்படுகிறது..50,000 ரூபாய் முதல் 10,00000 லட்சம் ரூபாய் வரை 3 பிரிவுகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.. பொதுத்துறை, தனியார், கூட்டுறவு, வங்கிகளின் மூலமும், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மூலமும் கடன் வழங்கப்படுகிறது.

 டாப்ல தமிழ்நாடு

டாப்ல தமிழ்நாடு

Credit-Deposit (C-D ratio )வளர்ச்சியுள்ள மாநிலங்கள் முத்ராவில் பயன்பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் இதுவரை 6.82 லட்சம் கோடி ரூபாய் தொழில் முனைவோருக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு விழுக்காடு அளவுக்குக் கூட முத்ராவில் கடன் பெறவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முத்ரா திட்டத்தில் அதிக அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

 சிக்கலில் சிறு நிறுவனங்கள்
 

சிக்கலில் சிறு நிறுவனங்கள்

நான் கார்ப்பரேட் வகையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு போதிய நிதி உதவிகள் கிடைக்காமல் நலிவடைந்துள்ளன. 90 சதவீதத்துக்கும் அதிகமான இந்த நிறுவனங்கள் அடிப்படை நிதிநிலையைக் கூடத் திரட்ட முடியாததாக இருப்பதாக முத்ராவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விழுக்காடு கடன்

ஒரு விழுக்காடு கடன்

தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் 10 சதவீதம் கடனை முத்ராவில் பெற்றுள்ளனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் முத்ரா கடன் வழங்கப்பட்டு டாப் 2 வில் இடம்பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்துடன் பீகார் மாநிலமும், தமிழகம், கர்நாடகாவுக்கு இணையாக 50 விழுக்காடு முத்ரா கடகை பெற்றுள்ளது.. உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் ஜம்மு காஷ்மீரில் முத்ரா மூலம் ஒரு விழுக்காடு கடனே வழங்கப்பட்டுள்ளது.

எது கடன்கார மாநிலம்

எது கடன்கார மாநிலம்

தமிழகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் (C-D) ratio நூறு சதவீதத்துக்கும் அதிகமாக வைத்துள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சி.டி .ரேஷியோ அதிகம் இருந்தும் முறையே 4 மற்றும் 2 சதவீத அளவுக்கே முத்ரா கடனை பெற்றுள்ளனர்.

 பொதுப்பிரிவினரின் கடன்

பொதுப்பிரிவினரின் கடன்

முத்ரா வங்கிக் கடனை பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 23 விழுக்காட்டினர் முத்ரா திட்டத்தில் கடனை பெற்றுள்ளனர்., ஷெட்யுல்டு வகுப்பினர் 18 விழுக்காட்டினரும், மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 6 சதவீதம் பேரும் கடன் பெற்றுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu hane received more and more MUDRA loan

Tamilnadu hane received more and more MUDRA loan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X