“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை காலி செய்து, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது ஜியோ.

 

 செல் போன்

செல் போன்

இந்தியாவில் 119.14 கோடி தொலை பேசி இணைப்புகள் இருக்கின்றன. அதில் 116.92 கோடி இணைப்புகள் செல்போன்கள். இதில் 37.20% இணைப்புகளை வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், 29.38% இணைப்புகளை ஏர்டெலும், 21.57% இணைப்புகளை ரிலையன்ஸ் ஜியோவும் வழங்குகின்றன.

 லேண்ட் லைன்

லேண்ட் லைன்

மொத்த 2.22 கோடி லேண்ட் லைன் ரக இணைப்புகளில், எர்ர்டெல் 18.07% இணைப்புகளையும், வொடாஃபோன் 1.16% இணைப்புகளையும் வழங்குகிறது.

பிராட்பேண்ட் சேவை

பிராட்பேண்ட் சேவை

இந்தியாவின் 48.17 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதில் 52.37% இணைப்ப்புகளை ரிலையன்ஸ் ஜியோ வைத்திருக்கிறது. 20.61% இணைப்புகளை பார்தி ஏர்டெல்லும், 20.70% இணைப்புகளை வொடாஃபோன் ஐடியா வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று விஷயங்களுக்குத் தான் சாகாத குறையாக அடித்துக் கொள்கிறார்கள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள்.

பிரச்னை
 

பிரச்னை

இப்போது பிரச்னை எத்தனை வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறார்கள் அல்லது இணைப்புகளை வழங்குகிறார்கள் என்பதில் இல்லை. இருக்கும் வாடிக்கையாளர்கள் வைத்து ஒருங்காக சம்பாதிக்க முடிகிறதா என்பது தான் கேள்வி...? அதற்கு விடையளிக்கும் விதமாக ஏர்டெல் ஒரு புதிய திட்டத்துடன் களம் இறங்கி இருக்கிறது.

ஒரு நிறுவனம்

ஒரு நிறுவனம்

வொடாஃபோன் ஐடியா நிறுவனம் இணைந்தது போல, இப்போது வொடாஃபோன் ஐடியா என்கிற நிறுவனமும், பார்தி ஏர்டெல்லும் இணைந்து தங்கள் ஃபைபர் நெட்களை பயன்படுத்திக் கொள்ள ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இது தான் ஏர்டெல்லின் பெரிய திட்டத்தின் தொடக்கம்.

சரிந்த லாபம்

சரிந்த லாபம்

ஜியோவின் வரவால் அனைத்து நிறுவனங்களின் வருவாயே பெரிய அளவில் சரிந்தது. வருவாயே போதுமான அளவு இல்லாத போது லாபத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம். எல்லாம் செலவுகள் போக கையில் ஒன்று நிற்காமல் நஷ்டத்தை பதிவு செய்தார்கள்.

 கணக்கு

கணக்கு

மார்ச் 2016-ல் ஜியோ வருவதற்கு முன், ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 60,473.20 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் 7,780.30 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு அதாவது ஜியோ வந்து ஏழே மாதத்தில் ஏர்டெல்லுக்கு நஷ்டம் தான் ம்ஞ்சியது. மார்ச் 2017-ல் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 62,460.60 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் -9,925.60 கோடி ரூபாய். அதாவது 9000 கோடி ரூபாய் நஷ்டம். மார்ச் 2018-ல் ஏர்டெல்லின் வருவாய் 53,898.60 கோடி ரூபாய், நிகர லாபம் 79.20 கோடி ரூபாய்.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

ஏர்டெல் நிறுவனத்தின் துனை நிறுவனமான பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகளை விற்று வரும் பணத்தின் தான் அதன் ஆப்பிரிக்க பிசினஸ்களை நடத்தி வருகிறதௌ. தற்போது ஆப்பிரிக்க பங்குச் சந்தைகளில் ஐபிஓ சென்று பணம் திரட்ட இருப்பதும் கூடுதல் தகவல். அதோடு ரூ 15,000 கோடியை ரைட்ஸ் இஸ்ஸூ (Rights Issue) முறையில் ஏர்டெல் பங்குகளை விற்று திரட்ட இருக்கிறது. இந்த ஒரு பத்தியில் ஏர்டெல் எப்படி காசுக்கு தவிக்கிறது என்பது புரிந்திருக்கும்.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

சமீபத்தில் ஏர்டெல் தான் இன்கமிங் கால்களுக்கு கட்டனம் வசூலிக்க இருப்பதாக அறிவித்து செயலிலும் இறங்கியது. ஏர்டெல்லின் 99 ரூபாய் திட்டம் தற்போது 120 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அத்தனை பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை விலை உயர்த்த இருப்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

RMS

RMS

RMS - Revenue Market Share என்பது அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் அடிப்படையில் கணக்கிடுவது. உதாரணமாக ஐந்து டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து 100 கோடி வருவாய் ஈட்டுகிறார்கள். அதில் அ நிறுவனம் 29 கோடி, ஆ நிறுவனம் 22 கோடி, இ நிறுவனம் 19 கோடி, ஈ நிறுவனம் 16 கோடி, உ நிறுவனம் 14 கோடி என்றால் தற்போது RMS அடிப்படையில் அ நிறுவனத்துக்கு தான் முதலிடம்.

RMS கணக்கு

RMS கணக்கு

தற்போது சந்தையில் RMS - Revenue Market Share அடைப்படையில் வொடாஃபோன் ஐடியா நிறுவனம் 32.8% சந்ஹையையும், பார்தி ஏர்டெல் 30.9% சந்தையையும், ஜியோ 26.1 % சந்தையையும் வைத்திருக்கிறார்கள்.

ARPU

ARPU

ARPU - Average Revenue Per User என்பது ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு இணைப்பு மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாய். இந்த ARPU மாதத்துக்கு 200 ஆக உயர்த்திக் கொள்ளத் தான் இந்த இணைப்புத் திட்டங்கள் எல்லாமாம். மீண்டும் பழைய படி அதிக வருவாய் ஈட்டும் இந்திய டெலிகாம் நிறுவனமாக மாறும் லட்சியத்தில் இருக்கிறது ஏர்டெல்.

இழப்பு

இழப்பு

ஏர்டெல்லின் இந்த பைசா வசூல் திட்டத்தால் சுமாராக 6 - 7 கோடி வாடிக்கையாளர்கள் வேறு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறுவார்கள் என ஏர்டெல்லே கணித்திருக்கிறது. ஆனால் இந்த வாடிக்கையாளர் இழப்பை விட தனக்கான வருவாய் தான் முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறது ஏர்டெல்.

வீட்டு சேவைகள்

வீட்டு சேவைகள்

தற்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்துக்கு 22 லட்சம் டிடிஹெச் மற்றும் பிராட்பேண்ட், ஹாட் ஸ்பாட் போன்ற சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சேவைகள் மூலம் ஏர்டெல் நிறுவனத்துக்கு 800 ரூபாய் ARPU கிடைக்கிறதாம். எனவே இந்த வீட்டு சேவை துறைகளில் ஜியோ வந்தாலும் தங்கள் சந்தை பாதிக்கப்படாது என தில்லாகச் சொல்லி இருக்கிறது ஏர்டெல்.

ஜியோ வீட்டு சேவைகள்

ஜியோ வீட்டு சேவைகள்

ஆனால் ஜியோவோ, ஏற்கனவே வீட்டு சேவைகளான டிடிஹெச், கேபிள் டிவி, பிராட் பேண்ட் போன்ற சேவைகளில் வலுவாக கால் பதித்திருக்கும் டென் நெட்வொர்க்ஸ், ஹதவே கேபிள்ஸ், டேட்டா காம் போன்ற நிறுவனங்களுடன் கை கோர்த்து ஹல்கைப் போல வேலை செய்கிறது. ஜியோ வீட்டு சேவைகளில் வந்த பின் தான் ஏர்டெல்லின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ARPU விவரம் போன்றவைகளைப் பற்றிப் பேசவே முடியும் என அனலிஸ்டுகளும் வாய மூடிக் கொள்கிறார்கள்.

ஏர்டெல் கருத்து

ஏர்டெல் கருத்து

மேலே சொன்ன கணக்குகள் எல்லாம் போகட்டும், ஜியோவுக்கு தற்போது நல்ல வாடிக்கையாளர் எண்ணிக்கை இருக்கிறார்கள். இப்போது ஜியோவின் திட்டங்களுக்கு இன்னும் கட்டணம் குறைக்கப் பட்டாம் ஜியோவும் நிச்சயம் நஷ்டத்தை தானே சந்திக்கும். எனவே இனியும் தொலை பேசி திட்டங்களுக்கான விலையை ஜியோ அதிகரிக்காது, ஆனால் நாங்கள் அதிகரித்து, ஜியோவை வென்று காட்டுவோம் என அசால்டாக மீசையை முறுக்கிறது ஏர்டெல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

airtel master plan to overcome jio in indian telecom industry

airtel master plan to overcome jio in indian telecom industry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X