இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது.

ஹோட்டல்கள்
 

ஹோட்டல்கள்

இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். பத்மாவதி படத்தில் வரும் ஷாகித் கபூருமிந்த மேவார் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர் தான். மொகலாயர்கள் அதிக பாடுபட்டு பிடித்த கோட்டையும் இந்த மேவார் கோட்டையைத் தான் என வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

கட்டுமானம்

கட்டுமானம்

அத்தனை பிரசித்தி பெற்ற பகுதியை ஆண்ட மகராணா உதய்சிங் கி.பி. 1559-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினார். ராஜஸ்தானில் குஜராத் எல்லையையொட்டி அமைந்துள்ள உதய்பூரை தார் பாலைவனத்தில் இருந்து ஆரவல்லி மலைக்குன்றுகள் பிரிக்கிறது. இங்கு பேசப்படும் மொழியை மேவாரி மொழி என்று அழைக்கிறார்கள்.

 இஷா அம்பானி கல்யாணம்

இஷா அம்பானி கல்யாணம்

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரமல் குழுமத்தின் வாரிசான ஆனந்த் பிரமலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்கு முன்னதாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரண்டு நாட்கள் சில சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக, உதய்பூரில் பிரமாண்ட செயற்கை மேடைகள் அமைக்கப்பட்டு கண் கவரும் அலங்காரத்துடன் மின்னுகின்றன.

அழைப்பிதழ்
 

அழைப்பிதழ்

இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பித மன்னிக்கவும் பெட்டியின் விலையே ரூ.3 லட்சம். இவ்வளவு விலை மதிப்பில் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களைத் தான் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாசலபதியின் பாதங்களைல் வைத்துச் சிறப்பு பூஜை நடத்தினார் முகேஷ் அம்பானி. என்ன இருந்தாலும் தகப்பன் இல்லையா...? என்ன தான் பெரிய பணக்காரராக இருந்தாலும், மகளின் வாழ்கையில் பயம் கலந்த பக்தி இருக்கத் தானே செய்யும்

அஜய் பிரமல் பரிசு

அஜய் பிரமல் பரிசு

திருமணத்துக்குப் பிறகு மும்பையின் ஒர்லி பகுதியில், கடலைப் பார்த்த படிக்கு கட்டப்பட்டு வரும் ஒரு பெரிய சொகுசு வீட்டில் வாழ இருக்கிறார். அந்த வீட்டை கட்டுவதற்கான செலவுகள் மட்டும் ரூ.450 கோடியாம். இந்த சொகுசு பங்களாவில் இஷா கணவருடன் வசிக்கப் போகின்றார். வீட்டுக்கு வரும் மருமகளுக்காக ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிரமால் வீட்டைப் பார்த்து பார்த்துக் கட்டியுள்ளார்.

வீட்டுக்கு போட்டி

வீட்டுக்கு போட்டி

இந்த சொகுசு வீட்டை முதலில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பயிற்சிப் பட்டறை இருந்தது. 2012-ல் இந்த குலிதா (Gulita) கட்டிடம் ஏலத்துக்கு வந்த போது அதை வென்றவர் அஜய் பிரமல் தான்.

வீட்டின் பிரமாண்டம்

வீட்டின் பிரமாண்டம்

இந்த குலிதா வீடு சுமார் 50,000 சதுர அடி பரப்பு கொண்ட ஐந்து அடுக்கு மாளிகை. நீச்சல் குளம், ஜிம், மல்டி பர்பஸ் ஹால், லைப்ரரி என மினி உலகத்தையே உள்ளே வைத்திருக்கிறார்களாம். இதை கடந்த 2015-ல் இருந்து பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் மாப்பிள்ளையின் அப்பா அஜய் பிரமல். உலகின் இரண்டாவது பிரமாண்ட வீடான அம்பானியின் அண்டிலா வீட்டில் வாழ்ந்த பெண் நம் வீட்டுக்கு வந்து வசதி குறைபாடோடு இருக்கக் கூடாது என அத்தனை கவனத்துடன் செய்கிறாராம்.

தேர்தல்

தேர்தல்

ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் இருந்து அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் தனி விமானங்களில் உதய்பூர் செல்கின்றனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் உதய்பூர் செல்ல 80 முதல் 100 தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாராம் அம்பானி.

விமான நெரிசல்

விமான நெரிசல்

பொதுவாக உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் 19 டேக் ஆஃப்தானாம். இப்போது அம்பானி குடும்பத்தினர் வருகையால், அடுத்த 5 நாள்களுக்குத் தனியார் விமானங்கள் 200 முறை டேக் ஆஃப் மற்றும் 200 லேண்டிங் செய்யும் வகையில் ஷெட்யூல்கள் தயாரிக்கச் சொல்லி இருக்கிறாராம். அம்பானி.

டாக்ஸி சேவைகள்

டாக்ஸி சேவைகள்

தன் செல்ல மகளின் திருமணத்துக்கு உலகின் பல நாடுகளில் இருந்து வரும் 1000 சிறப்பு விருந்தினர்கள் வர இருக்கிறார்கள். இதனால், உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் அம்பானி ஒற்றை செக்கில் வாடகைக்கு எடுத்திருக்கிறாராம்.

விருந்தினர்களை நிறைவாக கவனிக்க தனிக்குழு நியமித்து கவனிக்கச் சொல்லி அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்.

போக்குவரத்து

போக்குவரத்து

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வருவது, ஹோட்டலில் இருந்து இஷாவின் வைபவ நிகழ்சிகளுக்கு வருவது போன்ற சாலை போக்குவரத்து சேவைகளுக்கு மட்டும் சுமார் 1000 கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். அதற்கும் ஒரு செக் தானாம்.

எல்லாம் ஆடி, ஜாகுவார்

எல்லாம் ஆடி, ஜாகுவார்

அப்படி வாடகைக்கு எடுத்த கார்கள் எல்லாமே காஸ்ட்லியான ஆடி, பெண்ட்லி, பி.எம்.டபிள்யூ, ஜாகுவர் ரக சொகுசு கார்கள் தானாம். வரும் விருந்தினர்களுக்கு ஒரு நொடி கூட தங்களை கவனிக்கவில்லை என நினைக்க கூடாது என இத்தனை செலவுகளாம். கார் வாடகைக்கு மட்டும் ச்ய்னார் 250 கோடி வரை செலவு செய்திருப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

பெருந்தலைகள்

பெருந்தலைகள்

அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அம்பானி வீட்டு திருமணத்தில் கை நனைக்க இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் வேற லெவலில் களை கட்டப் போகிறது.

கல்யாணம்

கல்யாணம்

உதய்பூரில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் முடிந்த பிறகு மும்பையில் வரும் 12-ம் தேதி அம்பானியின் பிரமாண்ட அண்டிலா வீட்டிலேயே இஷா, ஆனந்த் பிரமல் திருமண நிகழ்வு நடைபெற இருக்கிறதாம். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அதற்குத் தான் இந்த பிரமாண்ட ரிசப்ஷன் நிகழ்சிகளாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

on her daughters function ambani booked 1000 audi, jaguar, benz cars

on her daughters function ambani booked 1000 audi, jaguar, benz cars
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more