Vijay Mallya கடனை வசூலித்த வங்கிகள்..? மத்திய அரசு பாராட்டு, மக்கள் கொந்தளிப்பு..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் வங்கிக் கடன் புகழ் Vijay Mallya ஒரு 10,000 கோடி ரூபாய் மற்றும் நீரவ் மோடி ஒரு 14,000 கோடி ரூபாயை வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்று அல்வா கொடுத்துவிட்டு வெளிநாட்டில் சொகுரு வாழ்கை வாழ்ந்து வருகிறார்கள்.

ஆர்பிஐ அழுத்தம்

ஆர்பிஐ அழுத்தம்

இதற்கு முன் இருந்த ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் இருவரும் வங்கிகளின் வாராக் கடனை மிக சீரியஸாக எடுத்து கையாண்டார்கள். அதனால் வாராக் கடன்களை வசூலித்தே ஆக வேண்டும் என நெருக்கினார்கள். விளைவு வேறு விதமான வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

யாரிடம் வசூலிக்க வேண்டும்

யாரிடம் வசூலிக்க வேண்டும்

ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் இருவரும் கடனை வசூலிக்க வேண்டும் எனச் சொன்னார்களே ஒழிய, மல்லையா மற்றும் நீரவ் மோடி என தெளிவாகச் சொல்லவில்லை போல. இப்போது ஆண்டுக்கு 2500 கோடி ரூபாயை மக்களிடம் இருந்தே வசூலித்துவிட்டார்கள். வங்கிகள். ஆக மொத்தம் கடந்த 2015 - 16 தொடங்கி 2018 - 19 வரை 10,391 கோடி ரூபாயை மக்களிடம் இருந்து வெறும் கட்டணங்கள், அபராதங்களாக மட்டும் வசூலித்துவிட்டார்கள்.

காரணங்கள்

காரணங்கள்

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதது, ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டும் கடந்த 3 ஆண்டு மற்ரும் 6 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரத்து 391 கோடியை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

2018 - 19

2018 - 19

அதிலும் நடப்பு நிதியாண்டான (2018-19) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1,861 கோடி ரூபாய் சூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.871 கோடி ரூபாய் ஏடிஎம்களை அதிகமாக பயன்படுத்தியதற்காக மட்டும் அபராதம் விதித்து சம்பாதித்திருக்கிறது வங்கிகள்.

இதிலும் எஸ்பிஐ தான்

இதிலும் எஸ்பிஐ தான்

வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக அபராதத் தொகையை வசூலித்த பெருமை விஜய் மல்லையாவுக்கு அள்ளிக் கொடுத்த எஸ்பிஐ வங்கியையே சேரும். வசுலித்த அபராதத் தொகை 2,894 + 1554 = 4,448 கோடி ரூபாய். இதில் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களிடம் இருந்து 1554 கோடி ரூபாயும், ஏடிஎம்மை அதிகம் பயன்படுத்தியதற்கு 2894 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறார்கள்.

அதற்கடுத்து

அதற்கடுத்து

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களிடம் அதிகம் வசூலித்த வங்கிகள் பட்டியலில் பஞ்சாப் நேஷனல் பேங்க் 493 கோடி ரூபாய், கனரா வங்கி 352 கோடி ரூபாய், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 348 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் பரோடா 328 கோடி ரூபாய் என போட்டி போட்டு வசூலித்திருக்கிறார்கள்.

ஏடிஎம்

ஏடிஎம்

ஏடிஎம்மை அதிகம் பயன்படுத்தியதற்கு அபராதம் வசூலித்தவர்களில் பேங்க் ஆஃப் இந்தியா 464 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் பேங்க் 323 கோடி ரூபாய், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 241 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் பரோடா 183 கோடி ரூபாய் என இதிலும் சலைக்காமல் போட்டி போட்டிருக்கிறார்கள்.

விலக்கு

விலக்கு

ஆனால், ஜன்தன் வங்கிக்கணக்குக்கு மட்டும் அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு இன்னும் இருக்கிறது. ஆக ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை தொடங்கியவர்கள் தப்பித்தார்கள்.

பிரேக் விட்ட எஸ்பிஐ

பிரேக் விட்ட எஸ்பிஐ

கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி அபராதம் வசூலிப்பதை நிறுத்தி இருந்தது. இப்போது வருமானப் பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் அபராதத்தை வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் அபராதம் விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால் அபராதத்தொகையை அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி குறைத்ததே ஒழிய முற்றிலும் நீக்கவில்லை. முதலில் ரூ.5 ஆயிரம் குறைந்த இருப்பு என்றும் எதிர்ப்புக்குப் பின் ரூ.3 ஆயிரமாகவும் குறைத்தது.

ஏடிஎம்-க்கும் போடு

ஏடிஎம்-க்கும் போடு

இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்தும், ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளுக்கு மேல் பணம் எடுத்த காரணங்களுக்காகவும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பதில்

நாடாளுமன்றத்தில் பதில்

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 2015-16-ம் ஆண்டில் இருந்து 2019-19-ம் ஆண்டுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,246 கோடியை அரசு வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன. கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்து வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தல் மற்றும் குறிப்பிப்ப எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களுக்கு அபராதம் மூலம் ரூ.4,145 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தனியார் இல்லை

தனியார் இல்லை

அரசு வங்கிகள் வசூலித்த அபராதங்களின் மதிப்புகள், விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்துவசூலித்த அபராத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இப்படி மக்களிடம் பணம் வசூலித்து மல்லையா கடனை சரிகட்டிக் கொண்டிருப்பதை வங்கிகள் தரப்பு நிம்மதியாகப் பார்க்கிறது. நிதி அமைச்சகம் கூட பரவாயில்லை, எப்படியோ பணத்தை தேற்றி விட்டோம் என பெருமூச்சு விடுகிறது. ஆனால் மக்களோ வழக்கம் போல ஏமாளிகளாக நொந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வருத்தத்தையும், வெறுப்பையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: vijay mallya fine minimum balance
English summary

vijay mallya loan recovered from common man of india

vijay mallya loan recovered from common man of india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X