நாங்க எதுக்கு மக்களவையில இந்தியப் பொருளாதாரத்தப் பத்தி பேசணும்...? சொல்வது பாஜக அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது ஒரு இடைக்கால பட்ஜெட். வழக்கம் போல ஆளும் காட்சி சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டு வெளியே வரும் சாதா பட்ஜெட் அல்ல. பதவி காலம் முடியும் போது, தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் எப்போதுமே இப்படி இடைக்கால பட்ஜெட்டாகத் தான் இருக்கும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு தான் 2019 - 20 நிதி ஆண்டுக்கான இறுதி பட்ஜெட்டை வடிவமைக்கும்.

எதற்கிடையில் இந்த பட்ஜெட்

எதற்கிடையில் இந்த பட்ஜெட்

மோடி அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தல் காரணங்களால் மக்களை மகிழ்விக்கும் அம்சங்கள் அதிகம் இருக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 01-ம் தேதி புதிய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்ய இருக்கிறார்.

உலகப் பிரச்னைகள்

உலகப் பிரச்னைகள்

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பெரிய பயன்களைக் காணவில்லை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் கொஞ்சம் தணிந்திருக்கிறதே தவிர முழுமையாக ஒரு தீர்வு காணப்படவில்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகம் மட்டுபட்டிருக்கிறது. இப்படி இன்னும் பல சர்வதேச பிரச்னைகள் இருக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடர்

பட்ஜெட் கூட்டத் தொடர்

2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31, 2019 தொடங்கி 13 பிப்ரவரி 2019 வரை நடை பெற இருக்கிறது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் தான் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

பட்ஜெட் குறித்த பேச்சு

பட்ஜெட் குறித்த பேச்சு

புதிதாக இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய மாற்றங்களையும் கொண்டு வர முடியாது. அப்படிக் கொண்டு வந்தால் கூட அதை சட்டமாக நிதிச் சட்டத்தில் (Finance Bill)-ல் கொண்டு வர முடியாது என்பதால் விரைவிலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்து விடுவார்கள். அதிகபட்சம் 2 மணி நேரத்துக்குள் பட்ஜெட் தாக்கல் செய்துவிடலாம் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மரபு உடைப்பு

மரபு உடைப்பு

பாஜக அரசு பொறுப்பேற்ற பின் தான் ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட் உடன் இணைத்தது. இப்போது மீண்டும் அதே போல் ஒரு மோசமான செயலைச் செய்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேச மாட்டோம் எனச் சொல்லி இருக்கிறது

Economic survey

Economic survey

ஆம் ஒவ்வொரு ஆண்டும், மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முந்தைய நாள் கடந்த 12 மாதங்களில் இந்தியப் பொருலாதாரத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, எதிர் கொள்ளும் பிரச்னைகள் என இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் விவரிப்பார். இப்போது இந்த இடைக்கால பட்ஜெட்டின் போது விவரிக்கப் போவதில்லை என அருண் ஜெட்லியே சொல்லிவிட்டார்.

எதிர்கட்சிகள்

எதிர்கட்சிகள்

ஆளும் கட்சி தான் ஆட்சி செய்த கடந்த காலங்களின் பொருளாதார வளர்ச்சியையே பார்க்காது என்றால், இந்தியப் பொருளாதாரம் அத்தனை மோசமாக இருக்கிறதா என்ன..? எனக் கேள்வி கேட்டிருக்கிறது காங்கிரஸ். வழக்கம் போல் மோடி கட்சியினர் மௌனமே பதிலாகக் கொடுத்திருக்கிறார்கள்.

 நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

மக்களவையில் மக்களுக்குத் தெரிய வேண்டிய பொருளாதார விவரங்களைக் கூட வெளிப்படையாக சொல்லாத அரசைத் தான் நாம் இத்தனை நாள் நம்பி இருந்திருக்கிறோம் என நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bjp said that they wont speak about indian economy in parliament

bjp said that they wont speak about indian economy in parliament
Story first published: Thursday, January 24, 2019, 15:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X