பியுஷ் கோயலை நிதி அமைச்சராக்கியது இதற்குத் தானா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த பத்து நாளில் இந்திய நிதித் திருவிழாவான ப்ட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது மத்திய அரசு. அதுவும் தன் இடைக் கால பட்ஜெட்டைத் தான் தாக்கல் செய்ய முடியும். இந்த நேரத்தில் ஒரு புதிய திருப்பமாக பியுச் கோயல் மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

காரணம்

காரணம்

அருண் ஜெட்லிக்கு கடந்த ஜனவரி 13 -ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். இருப்பினும் பட்ஜெட் தாக்கல் செய்ய அவர் இந்தியா வருவார் என்று தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால் தற்போது ஜெட்லியால் வர இயலாது என்பதை உறுதி செய்த பின் இப்போது ஜெட்லியின் இடத்தை, ரயில்வே துறை அமைச்சர் மற்றும் நிலக்கரி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயலிடம் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறையை கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

கடந்த மே 2018 முதல் ஆகஸ்ட் 2018 வரையான நான்கு மாதங்கள்

நிதி அமைச்சக பொறுப்பில் இருந்தவர் சில விஷயங்களை நன்றாகவே கையாண்டிருக்கிறார். இவர் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 80 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டன. பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களுக்கான வரி குறைக்கப்பட்டது இவர் காலத்தில் தான்.

வீட்டுப் பிரச்னை
 

வீட்டுப் பிரச்னை

ஒரு ரியல் எஸ்டேட் பில்டர் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போனால், வங்கி உடனடியாக பில்டர்களின் திட்டத்தின் கீழ் வாங்கிய் வீடுகளை கைப்பற்ரி ஏலத்தில் விட்டு கடனை மீட்கும். இப்போது அந்த திட்டத்தில் காசு கொடுத்து வீடு வாங்கியவர்கள் என்ன் அசெய்வார்கள்..? எனவே அந்த பில்டரின் திட்டத்தில் வீடு வாங்கியவர்களை , பில்டருக்கு கடன் கொடுத்தவர்களாக (Sundry Creditors) கருதி, வங்கி ஏலத்தில் விட்டு மீட்கும் பணத்தை முதலில் வீடு வாங்கியவர்களுக்கு செட்டில் செய்யும் மிக முக்கிய முடிவை எடுத்தது பியுஷ் கோயல் தான்.

வங்கியைக் காப்பாற்றியது

வங்கியைக் காப்பாற்றியது

ஐடிபிஐ வங்கி பிரச்னையில் தத்தளித்துக் கொண்டிருந்த போது எல்ஐசி நிறுவனத்தின் மூலம் ஐடிபிஐ நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க வைத்து ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்ரியவர். அதோடு வங்கிகளுக்கு இடையில் தரமான கடனாளிகளைத் தேர்வு செய்து கடன் வழங்க "சஷக்த்" என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் கோயல் தான்.

பிரதமர் பரிந்துரை

பிரதமர் பரிந்துரை

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் பரிந்துரைப்படியே, பியுஷ் கோயலுக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கி இருக்கிறார்களாம். பிப்ரவரி 1 -ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். மேலும், அருண் ஜெட்லி குணமடையும் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி நிதியமைச்சராகப் பொறுப்பு ஏற்கும் வரையில் நிதித்துறை பியூஷ் கோயல் வசம் இருக்கும்.

கோயல் அனுபவம்

கோயல் அனுபவம்

பியுஷ் கோயல் ஒரு பட்டயக் கணக்காளர், அதோடு சட்டமும் படித்தவர். அகில இந்திய அளவில் டாப் ரேங்குகளில் தேர்வானவர். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கி மிகப் பெரிய கார்ப்பரேட்டுகள் வரை, பல தளங்களில் பணியாற்றிய இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர். இவர் குடும்பமே ஒரு பாஜக குடும்பம் தான். இவர் தந்தை தாய் அனைவருமே பாஜகவில் பெரிய பொறுப்புகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள்.

அரசியல்

அரசியல்

மோடி ஆட்சியில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும்சேவை வரி போன்ற அதிரடி திட்டங்களை நிறைவேற்றும் போது ஜெட்லி தான் நிதி அமைச்சர். எனவே கடைசி பட்ஜெட்டில் ஜெட்லி தாக்கல் செய்வதை விட மக்களுக்கு சாதகமான விஷயங்களைச் செய்த ஒருவர் தாக்கல் செய்தால் பாஜக மீதான கோபம் குறையலாம் என கட்சி மேலிடம் எதிர் பார்க்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

what is the reason behing piyush goyal appointed as finance minister?

what is the reason behing piyush goyal appointed as finance minister?
Story first published: Thursday, January 24, 2019, 10:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X