A to Z சந்தா கோச்சார் மீதான 3250 கோடி வாராக் கடன் வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று வேணுகோபால் தூத்-ன் வீடியோகான் நிறுவனம் மற்றும் சந்தா கோச்சாரின் கணவரின் தீபக் கோச்சாரின் NuPower Renewables Pvt Ltd (NRPL) ஆகிய நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த திருட்டை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி போவோமே.

 

2008-ம் ஆண்டு

2008-ம் ஆண்டு

டிசம்பர் 2008 - தீபக் கோச்சார், வேனுகோபால் தூத், செளரப் தூத் NuPower Renewables Pvt Ltd (NRPL) நிறுவனத்தின் இயக்குநர்களாக பதவி ஏற்கிறார்கள்.

ஜூலை 2008 - வேணுகோபால் தூத் தனியாக சுப்ரீம் எனர்ஜி என்கிற நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

டிசம்பர் 2008 - தீபக் கோச்சார் மற்ரும் வேணுகோபால் தூத் இருவரும் இணைந்து NuPower Renewables Pvt Ltd (NRPL) என்கிற நிறுவனத்தை தொடங்குகிறார்கள்.

 

2009 ஜனவரி முதல் மார்ச் வரை

2009 ஜனவரி முதல் மார்ச் வரை

ஜனவரி 2009 - வேணுகோபாக் தூத் பதவி விலகி தன் 20 லட்சம் NuPower Renewables Pvt Ltd (NRPL) நிறுவன பங்குகளை தீபக் கோச்சாருக்கு அலாட் செய்கிறார்.

ஜனவரி 2009 - சுப்ரீம் எனர்ஜி நிறுவன பங்குகளை பினாக்கிள் எனர்ஜி டிரஸ்டு என்கிற நிறுவனத்துக்கு வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு மாற்றம் செய்துவிடுகிறார். பினாக்கில் எனர்ஜி டிரஸு தீபக் கோச்சாருடையது.

 

 

 2009 ஏப்ரல் முதல் ஜூன் வரை
 

2009 ஏப்ரல் முதல் ஜூன் வரை

மே 2009 - இப்போது தீபக் கோச்சாரிடம் தன்னுடைய பங்கு மட்டும் இன்றி வேணுகோபாக் தூதின் பங்குகளும் கையில் இருக்கின்றன. இந்த இருவரின் பங்குகளையும் சுப்ரீம் எனர்ஜி என்கிற நிறுவனத்துக்கு மாற்றுகிறார் தீபக் கோச்சார். இந்த சுப்ரீம் எனர்ஜி நிறுவனம் நம் தீபக் கோசாருடையது என்பது தான் ட்விஸ்டே.

 

 

2009 ஜூலை முதல் செப்டம்பர் வரை

2009 ஜூலை முதல் செப்டம்பர் வரை

ஆகஸ்டு 2009 - Videocon International Electronics Ltd (VIEL) என்கிற நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து வங்கிகளின் விதிகளுக்கு முரண்பட்டு 300 கோடி ரூபாய் கடன் கிடைக்கிறது. இந்த 300 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய ஐசிஐசிஐ வங்கிக் குழுவில் சந்தா கோச்சாரும் இருக்கிறார்.

செப்டம்பர் 2009 - சொன்ன படி 300 கோடி கடன் ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து Videocon International Electronics Ltd (VIEL) வங்கிக் கணக்குக்கு வந்துவிட்டது. இப்போது வீடியோகான் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து தீபக் கோச்சாரின் NuPower Renewables Pvt Ltd (NRPL) நிறுவனத்துக்கு சுப்ரீம் எனர்ஜி நிறுவனம் மூலமாக 64 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது.

 

ஜனவரி 2010 முதல் அக்டோபர் 2011 வரை

ஜனவரி 2010 முதல் அக்டோபர் 2011 வரை

இப்படி ஐந்து முறை ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து 2325 கோடி ரூபாய் Videocon International Electronics Ltd (VIEL) நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. 2012 காலத்தில் எஸ்பிஐ தலைமையில் 20 வங்கிகள் இணைந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 40,000 கோடி கடன் கொடுக்கிறார்கள். அதில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 3,250 கோடி ரூபாய்.

ஒருங்கிணைப்ப்பு

ஒருங்கிணைப்ப்பு

ஏப்ரல் 26, 2012-ல் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த கடன் கணக்குகளும் ஒரே கணக்காக ஒருங்கிணைக்கப்படுகிறது. ஜூன் 30, 2017-ல் வீடியோகான் நிறுவனத்தின் Videocon International Electronics Ltd (VIEL)-ன் கணக்கு வாராக் கடனாக அறிவிக்கப்படுகிறது.

சிபிஐ வழக்கு

சிபிஐ வழக்கு

சிபிஐ தொடுத்திருக்கும் வழக்குக்கான முதல் தகவல் அறிக்கையில் கே வி காமத், சந்தீப் பக்‌ஷி, ராம் குமார், சஞ்ஜொய் சட்டர்ஜி, கண்ணன், சரின் தாருவாலா, ராஜிவ் சபர்வால், ஹோமி குஸ்ருகான் எனப் பல அதிகாரிகள் மற்றும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களைச் சேர்த்திருக்கிறது. அதோடு
வீடியோகானின் Videocon International Electronics Ltd (VIEL), தீபக் கோச்சாரின் சுப்ரீம் எனர்ஜி, பினாக்கில் எனர்ஜி ஆகிய அனைத்து நிறுவனங்களையும் துருவத் தொடங்கி இருக்கிறது சிபிஐ.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: chanda kochhar videocon
English summary

chanda kochhar icici bank loan to her husband issue complete details

chanda kochhar icici bank loan to her husband issue complete details
Story first published: Friday, January 25, 2019, 13:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X