ஆர்பிஐ கிட்ட காசு இல்லங்குறத்துக்கு இது தாங்க ஆதாரம், இனியாவது தொல்லை பண்ணாம இருக்குமா மோடி அரசு.?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்பிஐ, சிபிஐ என அனைத்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை காலி செய்து அரசு சொல்வதைக் கேட்கும் கிளிப் பிள்ளைகளாக மாற்ற முயன்றது மோடியின் மத்திய அரசு. அதில் ஆர்பிஐ தான் நம்பர் 1. காரணம் அந்த 3.6 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் பணம்.

ரிசர்வ்

ரிசர்வ்

இந்திய மத்திய வங்கியான ஆர்பிஐ-யிடம் தனக்குத் பல்வேறு ரிசர்வ்களாக சுமார் 3.6 லட்சம் கோடி ரூபாய் இருப்பது உண்மை தான். அதை குறி வைத்து தான் மத்திய அரசு ரகுராம் ராஜன் காலத்தில் இருந்தே காய் நகர்த்தியது, உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது எல்லாம்.

ரிசர் என்றால் என்ன..?

ரிசர் என்றால் என்ன..?

ஆர்பிஐ-க்கு ஒரு ஆண்டில் வரும் லாபத்தை, முதலில் அவசரத் தேவைக்கான ரிசர்வ்வாக ஒதுக்கி வைக்கும். அந்த தொகையை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆர்பிஐ சட்ட திட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கும் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே அந்த ரிசர்வ் நிதியில் இருந்து பயன்படுத்தலாம். மற்ற எந்த காரியத்துக்கு அந்தப் பணத்தை பயன்படுத்த முடியாது. அந்த ஆர்பிஐ ரிசர்வ் தொகையைத் தான் மத்திய அரசு தானமாக கேட்கிறது.

ஒரு அறிக்கை

ஒரு அறிக்கை

தற்போது மத்திய அரசு காசு கேட்டு ஆர்பிஐ-யை நச்சரிப்பது தவறு என அமர்த்தியா லஹிரி என்பவர் தலைமையில் செய்யப்பட்ட ஆய்வு சொல்கிறது. மேற் கொண்டு அரசு வற்புறுத்தி வாங்கினால் நாளை ஆர்பிஐ-யில் ஒரு பணப் பிரச்னைக்கு காசு இல்லாமல் போய்விடும். மீண்டும் ஆர்பிஐ அரசிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் வரும் இதனால் ஆர்பிஐ-ன் தன்னாட்சிக்கு பங்கம் ஏற்படும் என விளக்கி இருக்கிறார்.

45 நாடுகள்

45 நாடுகள்

சர்வதேச அளவில் 45 நாடுகளின் மத்திய வங்கிகளை ஆய்வு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எனப் பிரித்தும் இந்தியாவின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

Capital to Asset Ratio

Capital to Asset Ratio

அதில் முக்கியமாக Capital to Asset Ratio (கையில் இருக்கும் முதலுக்கும், சொத்துக்களுக்குமான ஒப்பீடு) இந்தியாவுக்கு கொஞ்சம் பற்றாக் குறையாகத் தான் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள். 45 நாடுகளுக்கும் சராசரியாக 6.56% Capital to Asset Ratio இருக்கிறது. வளரும் நாடுகளில் இந்த Capital to Asset Ratio 6.96 சதவிகிதமாக இருக்கிறது. வலர்ந்த நாடுகளில் Capital to Asset Ratio 5.67 சதவிகிதமாகைருக்கிறது.

இந்தியாவின் ஆர்பிஐ

இந்தியாவின் ஆர்பிஐ

இந்தியாவின் Capital to Asset Ratio 6.6 சதவிகிதமாக இருக்கிறது. 45 நாடுகளோடு ஒப்பிடும் போது போதுமானதாகவும், வளரும் நாடுகளோடு ஒப்பிடும் போது 0.36 சதவிகிதம் குறைவாகவும் இருக்கிறதாம். எனவே ஆர்பிஐ இடமிருந்து காசு வாங்க வேண்டாம் என வலியுறுத்தி இருக்கிறார் அமர்த்தியா லஹிரி.

அரசே பலவீனமாக இருந்தால்

அரசே பலவீனமாக இருந்தால்

ஆர்பிஐ சட்டப்படி தன்னாட்சி என்றாலும் அதற்கு ஒரு பிரச்னை என்றால் அரசு தான் கை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசுக்கே நிதிப் பற்றாக்குறையில் தான் பட்ஜெட் போடுகிறார்கள். எனவே அரசால் ஆர்பிஐ-க்கு பணம் கொடுத்து உதவ முடியாது. ஆகையால் தான் ஆர்பியின் தன்னாட்சியை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டி இருக்கிறது என்கிறார் லஹிரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ
English summary

reserve bank of india doesnt have enough money to give dividend to government amartya lahiri report

reserve bank of india doesnt have enough money to give dividend to government amartya lahiri report
Story first published: Friday, January 25, 2019, 11:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X