பட்ஜெட் 2019: 80சி பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அறிவிப்பு வெளியாகுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்குகின்ற இந்த நேரத்தில் பாஜக ஆட்சியின் இறுதி பட்ஜெட் கூட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டினை மக்கள் மட்டுமின்றி ஓட்டு அறுவடை செய்ய தயாராக உள்ள ஆளும் பாஜகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. லோக்சபா பொதுத்தேர்தல் முடிவுகள் இந்த பட்ஜெட்டினைப் பொருத்தும் மாற்றம் அடையலாம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மேலும் பல சலுகைகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

 

2019-20ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தாக்கல் செய்யும் கடைசி இடைக்கால பட்ஜெட் இதுவாகும். சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும். அடுத்து ஆட்சியமைக்கும் அரசுதான் முழு நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, மத்தியில் ஆளும் அரசு தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அடுத்துவரும் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களுக்கு அதிகமான சலுகைகளுடன், திட்டங்களுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம். குறிப்பாக நடுத்தர வர்கத்தினர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பட்டியலிடப்பட்ட பிரிவினர், ஏழை மக்கள் ஆகியோரின் வாக்குகளை கவரும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடும். அதிலும் வேலைக்குச் சென்று மாத ஊதியம் பெறும் பிரிவினரை ஈர்க்கும் வகையில் சலுகைகளை ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவித்து வருகின்றன. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

தனிநபர் வருமானவரி

தனிநபர் வருமானவரி

தனிநபர் வருமான வரி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். தற்போது வரை 10 லட்சம் அல்லது அதற்கு மேல், வருடாந்திர வருமானம் உடையவர்கள் 30 சதவிகித வரியாக செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக 20 லட்சம் என வருவாய் வரம்பினை விதிக்கலாம் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வருமானவரி எவ்வளவு

வருமானவரி எவ்வளவு

2017ம் ஆண்டில் தான் முதன் முறையாக வருமான வரியின் அளவு குறைக்கப்பட்டது. 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையில் வருமானம் பெறுபவர்கள் அதற்கு முந்தைய காலம் வரை 10 சதவிகிதம் வரை வருமான வரை கட்டி வந்தனர். 2017ம் ஆண்டு பட்ஜெட்டிற்கு பிறகு 5சதவிகிமாக குறைக்கப்பட்டது. 20 சதவிகித வரியானது 5 முதல் 10 லட்சம் வரையில் வருமானம் வாங்குபவர்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. 10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் தற்போது 30 சதவிகித வரி கட்டி வருகின்றனர்.

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி
 

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி

2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள் வருமானவரி எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சீனியர் சிட்டிசன்களுக்கான வருமான வரியிலும் மாற்றங்கள் வேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 60 முதல் 80 வயது உள்ளவர்களுக்கும் இதே வருமான வரி தான். ஆனால் 3 லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. அதே போல் 80 வயதிற்கு மேல் 5 லட்சம் வரை வருமானம் பெரும் சீனியர் சிட்டிசன்களுக்கும் வருமான வரி கிடையாது. மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம். அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்து இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்

வரிவிலக்கு அதிகரிக்குமா?

வரிவிலக்கு அதிகரிக்குமா?

இப்போதுள்ள வருமான வரி செலுத்துபவர்கள் விலக்கு பெற ரூ.1.5 லட்சம் வரை சேமிப்புகளை கணக்கு காட்டலாம் என்ற விதிமுறை இருக்கிறது. அதாவது வரி விலக்கு தரும் சேமிப்பு திட்டம், இபிஎப், பிபிஎப், வாழ்நாள் காப்பீடு, தேசிய சேமிப்பு பத்திரம், இஎல்எஸ்எஸ் ஆகியவற்றில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம். இந்நிலையில், நாட்டில் பணவீக்கத்தின் அளவு அதிகரிப்பு, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதிய அளவு உயர்த்தப்பட்டு இருப்பதால் சேமிப்பை அதிகப்படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் உயர்த்தி ரூ. 2 லட்சம் வரை 80சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஒருவேளை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் பட்சத்தில் 10சதவிகிதம் வரிவிதிப்பில் இருப்பவர்கள் மாதத்துக்கு ரூ.2,575 வரையிலும், 20 மற்றும் 30 சதவீதம் வரி விதிப்புக்குள் இருப்பவர்கள் ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.

வீட்டுக்கடன் விலக்கு

வீட்டுக்கடன் விலக்கு

மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் இருந்து ரூ. 40,000 வரை நிரந்த கழிவு வழங்கப்படும். போக்குவரத்து, மருத்துவ செலவினங்களுக்கு கழிவு பெறலாம். இதில் ஏதேனும் மாற்றம் வருமா என்று எதிர்பார்க்கின்றனர். அனைவருக்கும் சொந்த வீடு என்பது கனவாக இருக்கிறது. அவ்வாறு வங்கியில் கடன் பெற்று புதிய வீட்டு கட்டும்போது, ரூ.2லட்சம் வரை கடனுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதை ரூ.3.50 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகள் அறிவிக்கப்படுமா

சலுகைகள் அறிவிக்கப்படுமா

பெறுவோருக்கும் மேலும் பல சலுகைகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான எல்.ஐ.சி வகை வீடுகளின் அளவு தற்போது இருக்கும் 60 சதுர மீட்டர் பரப்பளவை 80 சதுர மீட்டராக அதிகரிக்கக் கூடும். கடன் வட்டிக்கான சலுகை ரூ. 6 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை அதிகரிக்கலாம். கடந்த சில நாட்களாக நாட்டில் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து உள்ளது. இதற்கான காரணம் மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறைந்த வருமானம் பெறும் நபர்கள் வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியம் கிடைக்கும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: Will the exemption limit under Section 80C be increased

Budget 2019 is the current regime's last one ahead of the general elections in summer, speculation is rife that it will be a populist one. The wishlists of the common man and industry bodies have one thing in common A demand for an increase in the maximum deduction limit under Section 80C.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X