1.5 லட்சம் கோடி ரூபாய் இன்னும் வரல, வருத்தத்தில் மோடி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு ஆண்டு கடந்த ஆண்டில் சொன்ன பட்ஜெட்டை ஒட்டி வருவாமன் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து வராத வருமானங்களை வசூலிக்க வேண்டும்.

இந்த நிதி ஆண்டு

இந்த நிதி ஆண்டு

2018 - 19 நிதி ஆண்டுக்கு அரசு நிர்ணயித்திருந்த தொகையில் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் குறைவாக வரும் என நிதி அமைச்சக வட்டாரங்களே சொல்கின்றன. இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். எனவே செய்யும் செலவுகளில் மத்திய அரசு கவனமாக மிச்சம் பிடித்து வருகிறதாம்.

ஜிஎஸ்டி வருவாய் இழப்பு

ஜிஎஸ்டி வருவாய் இழப்பு

2018 - 19 நிதி ஆண்டுக்கு 13.48 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டிய இலக்காக நிர்ணயித்திருந்தது அரசு. ஆனால் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான 9 மாதங்களில் மாதத்துக்கு 97,000 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிந்திருக்கிறதாம். இப்படியே அடுத்த மூன்று மாதங்கள் வசூலித்தால் கூட அதிகபட்சம் 12 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். மீதமுள்ள 1.5 லட்சம் கோடி ரூபாயை என்ன செய்வது என வரித் துறை அதிகாரிகள் பதறி வருகிறார்களாம்.

அதிகரிக்கும் நிதி பற்றாக்குறை

அதிகரிக்கும் நிதி பற்றாக்குறை

2018 - 19 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதமாக இருக்கும், நிச்சயம் கட்டுப்படுத்துவோம் எனச் சொல்லி வந்த நிதி அமைச்சகம் இப்போது வாய் திறக்காமல் இருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்திலேயே சொன்ன அளவை விட 15 சதவிகிதம் நிதிப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.

வரி வசூல் குறைவு

வரி வசூல் குறைவு

ஜிஎஸ்டி வரி வசூல் குறைவு, டெலிகாம் துறையினருக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான நஷ்டம், போன்றவைகள் அரசுக்கு கிடைக்க வேண்டிய நேரடி வருவாய் சரிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆர்பிஐ அரசுக்கு வழக்கமாக கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையைத் தராதது போன்ற சின்ன காராங்கள் அரசின் மறைமுக வருவய்கள் குறைந்ததற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆறுதல்

ஆறுதல்

மறைமுக வரி வருவாய்களாக சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, ஆக்ட்ராய் டியூட்டி போன்றைகளை மொத்தமாகப் பார்த்தால் நவம்பர் வரையான காலங்களில் வெறும் 59.4% மட்டுமே வசூலித்திருக்கிறார்களாம். ஆனால் சுங்க வரி (Customs duty) மட்டும் தனக்கு நிர்ணயித்திருக்கும் இலக்கை விட கொஞ்சம் கூடுதலாக வசூலித்திருக்கிறார்களாம்.

பொருளாதார பாதிப்பு

பொருளாதார பாதிப்பு

ஜிஎஸ்டி அறிமுகத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, விவசாயிகளுக்கு கொடுக்கும் கடன் தள்ளுபடி, மக்களுக்கு வழங்கும் இலவச மற்றும் வட்டியில்லாக் கடன் திட்டங்கள் போன்றைவைகள் இந்திய பட்ஜெட்டின் நிதிப் பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்திவிடும் என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் ரெல்லி பயமுறுத்தி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax deficit fiscal deficit
English summary

central government is short in tax revenue collection

central government is short in tax revenue collection
Story first published: Monday, January 28, 2019, 15:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X