ஆபிசில் டிடிஎஸ் அதிகம் பிடிக்கிறாங்களா? - ஐடி ரிட்டன் தாக்கல் செய்து பணத்தை திரும்ப பெறலாம்

அலுவலகத்தில் வேலை பார்க்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வது பற்றி ஆதாரங்களின் ரசீதுகளை சமர்ப்பிக்காமல் வரிப் பிடித்தம் செய்யப்பட்டால் ஜூன் 1 முதல் 31ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்து, முதலீட்டு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குபவர்கள் ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படுகிறது. வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க வருமான வரிச் சேமிப்பு திட்ட முதலீட்டு விவரங்கள், வீட்டு வாடகை ரசீது, பிள்ளைகளின் பள்ளி படிப்புக் கட்டணம் போன்ற ஆவணங்கள் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். வேலை பார்க்கும் நிறுவனத்தில் யாரெல்லாம் இந்த முதலீட்டு ஆதாரங்களை நிறுவனத்தில் சமர்ப்பிக்கவில்லையோ அவர்களது மார்ச் மாதம் சம்பளத்தில் வரி பிடித்த செய்யப்படும்.

வரி பிடித்தம் செய்யப்பட்டால் கவலை வேண்டாம், உங்கள் பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க ஜூன் 1 முதல் 31ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்து, முதலீட்டு விவரங்களைச் சமர்ப்பித்து வரி தொகையைத் திரும்பப் பெறலாம்.

ஊழியர் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் ஒருவருக்கு சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்யப்படாது. இதுவே 2.50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளத்திற்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 192-ன் கீழ் நிறுவனங்கள் நிதி ஆண்டு இறுதி அல்லது ஒவ்வொரு மாதமும் வரிப் பிடித்தம் செய்ய வேண்டும்.

வருமான வரி பிடித்தம்

வருமான வரி பிடித்தம்

ஊழியர்களின் சம்பளத்திலிருந்து இப்படி வரியை பிடித்தம் செய்வதைத் தவிர்கவே வருமான வரிச் சேமிப்பு திட்ட முதலீட்டு விவரங்கள், வீட்டு வாடகை ரசீது, பிள்ளைகளின் பள்ளி படிப்புக் கட்டணம் போன்ற ஆவணங்கள் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் உள்ள செலவுகளுக்கு எல்லாம் வரி விலக்கு இருப்பின் அந்தத் தொகைக்கான வரியை நிறுவனம் பிடித்தம் செய்யப்படாது.

ஊழியர்களின் சம்பளம்

ஊழியர்களின் சம்பளம்

ஊழியர்களிடம் பல நிறுவனங்கள் சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்க முதலீட்டு ஆதாரங்களை (Investment Proof Submission) கேட்பார்கள். ஆனால் அது குறித்துச் சரியான புரிதல் இல்லாத பல ஊழியர்கள் முதலீட்டு ஆதாரங்களைக் கடைசித் தேதி வரையிலும் சமர்ப்பிக்காமல் விட்டு விடுகின்றனர். ரெல்லாம் இந்த முதலீட்டு ஆதாரங்களை, நிறுவனத்தில் சமர்ப்பிக்கவில்லையோ அவர்களது மார்ச் மாதம் சம்பளத்தில் வரி பிடித்த செய்யப்படும். ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரியை அவரின் பான் நம்பர் மூலம் வருமான வரித் துறையிடம் செலுத்தப்பட்டுவிடும்.

சம்பளத்தில் வரிப்பிடித்தம்

சம்பளத்தில் வரிப்பிடித்தம்

வரி விலக்கு உள்ள திட்டங்களில் செய்துள்ள சேமிப்புகள் குறித்த விவரங்களை நிறுவனத்தில் சமர்ப்பிக்கும் போது சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்யப்படாது. ஊழியர்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு அது குறித்த விவரங்களை வேலை பார்க்கும் நிறுவனம் வருமான வரித் துறையிடம் அளித்துவிட்டு, சம்பளத்திலிருந்து வரிப் பிடித்தம் செய்யாமல் விடுவார்கள்.

முதலீட்டு ஆதாரங்கள் ஆவணங்கள்

முதலீட்டு ஆதாரங்கள் ஆவணங்கள்

காப்பீட்டு ஆவணங்கள் / ரசீதுகள், வீட்டு வாடகை ரசீது (ஆண்டு வாடகை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் வீட்டு உரிமையாளரின் பான் நம்பர். குழந்தைகளின் கல்வி கட்டண பில் தொகை ரசீது. வீட்டு கடன் விபரங்கள். வரிச் சேமிப்புத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பங்கு சந்தை இணைக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள், சிறு சேமிப்புத் திட்டங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

 வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரி கணக்கு தாக்கல்

முதலீடு. செலவு குறித்த ஆவணங்களை கடைசி தேதி வரைக்கும் அலுவலகத்தில் சமர்ப்பிக்காமல் விட்டால் வரிப் பிடித்தம் செய்யப்படும். அந்த பணத்தை ஜூன் 1 முதல் 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, முதலீட்டு விவரங்களைச் சமர்ப்பித்து வரி தொகையைத் திரும்பப் பெறலாம். இப்படிச் செய்யும் போது முதலீடு மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்களை 6 ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டும். பொரும்பாலனவற்றை வரிப் பிடித்தங்களை வருமான வரி தாக்கல் செய்து திரும்பப் பெற முடியும். ஆனால் மருத்துவச் செலவுகளுக்காக உள்ள 15,000 ரூபாய் வரி விலக்கை மட்டும் திரும்பப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Missed the deadline to submit proof of tax saving investments

Missed the deadline to submit proof of tax-saving investments? You can still avail Section 80C, other benefits.Generally the deadline ends by December or January in most of the offices because the remaining taxes are deducted at source (TDS) from the salaries of January, February and March.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X