யார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சந்தா கோச்சார் - பெயரை கூறினாலே தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரபலமானவர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புரில் பிறந்த இவர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவருக்கு 2015 -ம் ஆண்டின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் கொடுத்து பெருமை படுத்தியது டைம் இதழ். 2010 ஆம் ஆண்டிலேயே இந்திய அரசின் பத்ம பூசண் விருதையும் பெற்றிருந்தார்.

உலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டால் அதில் இவரது பெயர் தவறாது இடம் பெறும் அளவுக்கு ஆளுமை மிக்கவராக வலம்வந்தார். அமெரிக்காவின் ஃபார்ச்சூன் இதழ் உட்பட புகழ் பெற்ற இதழ்களின் பட்டியலில் அடிக்கடி இடம்பெற்று வந்த இவரது பெயர் இப்போது அனைத்து நாளிதழ்களிலும் நெகட்டிவாக இடம் பெருமளவுக்கு இவரது பெயர் ரிப்பெயராகி விட்டது என்பதுதான் வேதனை. அப்படி என்ன செய்தார் சந்தா கோச்சார்.

யார் இந்த சந்தா கொச்சார்?

செளரப் தூத், தீபக் கோச்சார், வேனுகோபால் தூத் ஆகியோர் ஒன்றிணைந்து நியு பவர் ரெனிவபில்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பொறுப்பேற்கின்றனர். இதில் வேணுகோபால் தூத் அடுத்த மாதமே அதாவது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதமே பதவி விலகியதோடு தன்னிடம் இருந்த 20 லட்சம் பங்குகளை தீபக் கோச்சாரிடம் கொடுத்து விடுகிறார். அதே ஆண்டு மே மாதம் தீபக் கோச்சார் தனது பங்குகள் மற்றும் வேணுகோபால் தூத் தனக்கு வழங்கிய பங்குகள் அனைத்தையும் தனக்கு சொந்தமான சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்திடம் கைமாற்றி விடுகிறார்.

இந்த மே மாதத்தில் இருந்துதான் கதை தொடங்குகிறது. இந்த காலத்தில் அதாவது 2009-ம் ஆண்டு மே மாதம் ஐ சி ஐ சி ஐ வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் தலைவராகவும் பொறுப்பேற்கிறார். அப்போது வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் கடன் கேட்டு ஐ சி ஐ சி ஐ வங்கியை அணுகுகிறது. இதன் தலைவர் வேணுகோபால் தூத். இதனால் உடனடியாக ஐ சி ஐ சி ஐ வங்கியிலிருந்து 300 கோடி ரூபாய் கடன் கிடைக்கிறது. இப்படியாக 2011 வரை ஐ சி ஐ சி ஐ வங்கியிலிருந்து வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு 3250 கோடிகள் கடனாக கிடைக்கிறது. இப்படி கடனாக பெற்ற தொகையை வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தீபக் கோச்சாரின் நியு பவர் ரெனிவபில்ஸ் நிறுவனத்துக்கு சுப்ரீம் எனர்ஜி நிறுவனம் மூலமாக பல முறை கைமாற்றி விடுகிறது இதில் சுப்ரீம் எனர்ஜி நிறுவனமும் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கொச்சாரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக வங்கிப் பணத்தை தனது கணவரின் நிறுவனத்தில் முதலீடு செய்த வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் வாரி வழங்கி அதன் மூலமாக தனது கணவரின் நிறுவனத்திற்கு முறைகேடாக நிதி பரிமாற்றம் செய்ய துணை போயுள்ளார் உலகின் சிறந்த பெண் நிர்வாகிகளில் ஒருவரான சந்தா கோச்சார்.

இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி அமைப்புக்கு தனியாக பெண் தொழில்முனைவோர் பிரிவு ஒன்று உள்ளது. அதன் சார்பில் சிறந்த பெண் சாதனையாளர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதில் கடந்த ஆண்டு பெண் சாதனையாளர் விருதில் ஒன்று ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சருக்கு அளிக்கப்படுவதாக முடிவாகியிருந்தது. இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குவதாக இருந்தது. அனால் அப்போது இவர்மீது சந்தேக வலை விழுந்ததால் இவராகவே தான் விழாவுக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

இப்படியாக கடன்களை வாரி இறைத்ததன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் பலரும் பயன் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இவர் இந்த மோசடிகளுக்கு உதவியாக இருந்ததும் பலன் அடைந்ததும் தெரிய வந்ததால் இவர் தனது பதவியை கடந்த வருடம் அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார்.

இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் சி பி ஐ சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முதல் தகவல் அறிக்கையில் சந்தா கோச்சாரின் பெயர் இடம் பெற்றதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து சந்தா கோச்சாரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறச் செய்த சி பி ஐ அதிகாரி சுதான்ஷு தார் மிஸ்ரா தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இப்போது மோஹித் குப்தாவிடம் என்பவரிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is the Chanda Kochhar? What happens in the enquiry on this case?

CBI officer who dealt with Chanda Kochhar has got transfer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X