மின்னனு வாக்குபதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு 2600 கோடி ரூபாய் வருவாயா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆகட்டும், எதிரில் கேள்வி கேட்கும் காங்கிரஸ் கட்சி ஆகட்டும் இருவருமே, ஏன் மொத்த இந்திய அரசியல் வாதிகளும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தை (Electronic Voting Machine)-ஐ ஹேக் செய்யலாம். நமக்குப் பிடித்தவர்களை வெற்றிப் பெற வைக்கலாம் என பல்வேறு வாதங்களை மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக வைக்கிறார்கள்.

 

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

ஆனால் இங்கு மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் நிறுவனம் தொடங்கி கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருவாய் அதிகரிக்கும் என நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கும் அளவுக்கு.

நிறுவனம் 1

நிறுவனம் 1

Electronics Corporation of India Limited (ECIL) என்கிற அரசு நிறுவனம் தான் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிக அளவில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த நிறுவனம் பெங்களூரூவில் தான் ஆலைகளை அமைத்து தன் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறதாம். புதிய ஆர்டர்களுக்காக, புதிய உற்பத்தி இயந்திரங்களும் ஆலையில் நிறுவப்பட்டிருக்கிறதாம்.

நிறுவனம் 2
 

நிறுவனம் 2

இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் என்கிற அரசு நிறுவனத்துக்கும் இந்திய தேர்தல் ஆணையம் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கான ஆர்டர்களைக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா தேர்தலுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டதாம்.

வருவாய் கணக்கு

வருவாய் கணக்கு

புதிய மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி ரக மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு நிறைய ஆர்டர் வருகிறதாம். அதோடு பழைய மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றுவதற்கான புதிய எம்3 ரக மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்துக்கு நிறைய ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறதாம். எனவே இந்த ஆண்டு Electronics Corporation of India Limited (ECIL) நிறுவனத்தின் வருவாய் 2,400 கோடி ரூபாயைத் தாண்டும் என அதிகாரிகள் சொல்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: evm revenue
English summary

electronic voting machines producers ecil and bel are going to see a historical high revenue

Electronics Corporation of India Limited (ECIL)
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X