“டென்னிஸ் விளையாட வெளிநாடு போகணும்” கார்த்தி சிதம்பரம், “10 கோடி கட்டிட்டுப் போங்க” நீதிமன்றம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்தி சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் பல்வேறு வழக்குகளில் சிக்கி வழக்கி நடத்திக் கொண்டிருக்கிறார். ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் Foreign Investment Promotion Board (FIPB) விதிகளை மீறியதற்காகவும், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் இரண்டு பெரிய வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

வெளிநாட்டுக்கு அனுமதி

வெளிநாட்டுக்கு அனுமதி

"Totus Tennis Ltd என்கிற நிறுவனம் நடத்தும் பல்வேறு டென்னில் போட்டிகளில் பங்கேற்க பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி என அடுத்த சில மாதங்கள் பயணிக்க வேண்டும். அதற்கு அனுமதி கொடுங்கள்" என உச்ச நீதிமன்றத்திடமே கேட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

கடுப்பான நீதிபதி

கடுப்பான நீதிபதி

"கோர்ட் மற்றும் சட்டத்தோடு விளையாடாதீர்கள். நீங்கள் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் விசாரனைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அப்படி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகலை எடுக்கும்" என எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்.

டென்னிஸ் ஓகே
 

டென்னிஸ் ஓகே

"உச்ச நீதிமன்ற பதிவாலரிடம் 10 கோடி ரூபாய் பிணைத் தொகையைச் செலுத்தி விட்டு நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்கலாம். ஆனால் 2019 மார்ச் 5,6,7,12 ஆகிய தேதிகளுக்கு அமலாக்கத் துறையினரின் விசாரனைக்கு ஒழுங்காக வந்து ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும்" என கார்த்தி சிதம்பரத்தின் ஆசைக்கு ஓகே சொல்லி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கக்கூடாது என அமலாக்கத் துறை இயக்குநரகம் தன்னால் முடிந்த வரை போராடி இருக்கிறது. கார்த்தி சிதம்பரம் இப்படி வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர் மீதான வழக்குகள் மற்றும் விசாரணைகள் பிசுபிசுத்துவிடும் என வாதிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை நீதிபதிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு முந்தைய அனுமதிகளை உச்ச நீதிமன்ற காரணம் காட்டுகிறது.

முன்பொரு முறை

முன்பொரு முறை

கடந்த செப்டம்பர் 2018 காலத்திலும் கார்த்தி சிதம்பரம் ஊழல் வழக்குகளில் சிக்கி இருந்த போது கூட இங்கிலாந்து சென்று ஒழுங்காகத் திரும்பினார். அதையும் கருத்தில் கொண்டு தான் நீதி மன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடு செல்ல இந்த முறை அனுமதி வழங்கி இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

karthi chidambaram is going to foreign country with supreme courts permission

karthi chidambaram is going to foreign country with supreme courts permission
Story first published: Wednesday, January 30, 2019, 13:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X