பட்ஜெட் 2019: தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படுமா? - நகை வணிகர்கள் எதிர்பார்ப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தங்கம் இறக்குமதிக்கான வரியை 10 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டுமென நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பட்டை தீட்டிய வைரங்கள் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவிகிதத்தில் இருந்து 2.5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 


உலக அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தங்கத்திற்கான இறக்குமதி குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் நகை, உற்பத்தி விற்பனையாளர்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப்போட்டு வருகின்றனர்.


தமிழகத்தில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் தங்கத்தின் விலை குறைவு என்பதால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதித்ததால் தங்கம் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.

தங்கம் இறக்குமதி வரி

தங்கம் இறக்குமதி வரி

2012ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளிலிருந்து 10 கிலோ வரை தங்கம் கொண்டுவரலாம் என்றும், அதற்கான இறக்குமதி வரி 5 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் 2012ம் ஆண்டுக்குப் பிறகு அதிக பட்சமாக ஒரு கிலோ தங்கம் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறக்குமதி வரியும் 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

தங்கத்திற்கு 3% ஜிஎஸ்டி

தங்கத்திற்கு 3% ஜிஎஸ்டி

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இறக்குமதி தங்கத்தின் மீது 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் வெளிநாடுகளிலிருந்து ஒரு கிலோ தங்கம் கொண்டுவந்தால் அவர் 13 சதவிகிதம் வரி கட்ட நேரிடும். எனினும், கடந்த 3 ஆண்டுகளைவிட தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தங்கத்தின் தேவை அதிகரிக்கும்
 

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் தங்கத்தில் 80 சதவிகிதம் நகைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.

தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் அது இந்தியாவின் தங்க தேவைக்கு ஊக்கமளிக்கும் என்பது நகை விற்பனையாளர்களின் நம்பிக்கை. 2013ஆம் ஆண்டு தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 10 சதவிகித வரியை 4 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பது இந்திய தங்க நகை விற்பனையாளர் சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

 இறக்குமதி வரி குறையுமா

இறக்குமதி வரி குறையுமா

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்றாக தங்க நகை உற்பத்தி துறை உள்ளது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து இத்துறை மீளவில்லை. இதற்கிடையில், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைக்காமல் வைத்துள்ளது. இதனால் தங்கம் கடத்தலும் அதிகமாகி வருகிறது. இடைக்கால பட்ஜெட்டில் வரி குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.

தங்கம் கடத்தலை தடுக்கும் வழி

தங்கம் கடத்தலை தடுக்கும் வழி

நகை தேவைக்காக தங்கம் அதிக அளவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதே போல தங்க கடத்தலும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2015ம்ஆண்டு 119 டன் தங்கம் இந்தியாவுக்கு கடத்தப்பட்டுள்ளது. 2016ல் 200 டன்தங்கம் கடத்தப்பட்டுள்ளது. ஆனால் பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு தங்கம் கடத்தல் குறைந்தது. இதன்பிறகு பணப்புழக்கத்துக்கு பிறகு 100 டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

நகை உற்பத்தியாளர் கவுன்சில் கடிதம்

நகை உற்பத்தியாளர் கவுன்சில் கடிதம்

இதுகுறித்து அகில இந்திய நவரத்தினம் மற்றும் தங்க நகை உற்பத்தியாளர் கவுன்சில் தலைவர் அனந்த பத்மநாபன் நிதியமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருந்தபோது 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. தங்கத்துக்கு இறக்குமதி வரியை அதிகமாக வைத்துள்ளதால், கள்ளச்சந்தையில் இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. தங்கம் கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த வரி விதிப்பின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே இறக்கமதி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும்.

நகை வாங்க உச்சவரம்பு

நகை வாங்க உச்சவரம்பு

ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் நகை வாங்கவோர் பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என்ற விதி தற்போது அமலில் உள்ளது. இந்த உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். 50 சதவிகித மக்கள் கூட பான் கார்டு வைத்திருக்கவில்லை. எனவே ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பலர் பான் எண் வைத்திருப்பதில்லை. இருந்தாலும் அதனை சமர்ப்பிக்க விரும்புவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: Gems and jewellery sector seeks import duty cut to 4%

Global consumption inched up 4 per cent, according to the annual report from the World Gold Council. The gems and jewellery sector, which is still reeling under the impacts of note-ban and GST implementation, has sought a reduction in gold import duty to 4 percent and bringing down the levy on cut and polished diamonds and cut cut and polished gemstones to 2.5 percent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X