வாட்ஸப் போட்டிக்கு நீங்கள் தயாரா, பரிசுத் தொகை 1,75,00,000..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் வாட்ஸப் தன் பிசினஸை அமெரிக்காவில் தொடங்கியது. இன்று உலகில் மொத்தம் 130 கோடி பேரால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அப்ளிகேஷனாக உருவெடுத்திருக்கிறது.

 

வளைத்துப் போட்ட ஃபேஸ்புக்

வளைத்துப் போட்ட ஃபேஸ்புக்

2009-ம் ஆண்டு தொடங்கி வெறும் ஐந்தே ஆண்டுகளில் அசாத்திய வளர்ச்சிக் காட்டுவதைப் பார்த்த சக அப்ளிகேஷன்களில் ஒன்றான ஃபேஸ்புக் கைகளைக் குலுக்கி டீல் பேசியது. ஒருவழியாகப் பேசி பிப்ரவரி 2014-ல் 19 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அன்றில் இருந்து வாட்ஸப் ஃபேஸ்புக்கின் ஒரு அங்கம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று பல்வேறு விஷயங்களுக்கு வாட்ஸப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய வணிகர்கள்

இந்திய வணிகர்கள்

இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 50 லட்சம் பேர் வாட்ஸப்பை தங்கள் பிசினஸுக்குப் பயன்படுத்துகிறார்களாம். வாட்ஸப்பை பயன்படுத்தும் சிறு குறு தொழில் முனைவோர்களில் 84 சதவிகிதம் பேர் வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வாட்ஸப் பெரிய அளவில் உதவுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே போல் 80 சதவிகித சிறு குறு பிசினஸ் செய்பவர்கள், வாட்ஸப் தனியாக தங்கள் பிசினஸை வளர்க்கிறது எனச் சொல்லி இருக்கிறார்கள். இத அறிந்த வாட்ஸப் இப்போது இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு புதிய போட்டியை அறிவித்திருக்கிறது.

ஜெயிச்சா என்ன தருவீங்க
 

ஜெயிச்சா என்ன தருவீங்க

இந்தியாவின் இருக்கும் இளைய தலைமுறை பிசினஸ் மேன்களை உற்சாகப்படுத்த "Startup India-WhatsApp Grand Challenge" என்றொரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இந்த போட்டியில் வெல்லும் டாப் ஐந்து பேருக்கு பரிசாக சுமார் 1,75,00,000 ரூபாய் கொடுக்கப்படுமாம். வரும் மார்ச் 10, 2019-க்குள் இந்த போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமாம்.

எதைக் காட்ட வேண்டும்

எதைக் காட்ட வேண்டும்

நல்ல பிசினஸ் ஐடியா, அதை சரியாக செயல்படுத்தும் ஒரு பிசினஸ் மாடல், பெரிய அளவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவது, அன்றாட பிரச்னைகளுக்கு விடை சொல்லும் பிசினஸ் தீர்வுகளை வைத்திருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

பிறகு என்ன இது உங்களுக்கான வாய்ப்பாக இருந்தால் விண்ணப்பித்துத் தான் பாருங்களேன்..? வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

whatsapp is going to organize a competition for India startups

whatsapp announced a start up competition for india and the price money is rupees 1,75,00,000.
Story first published: Thursday, January 31, 2019, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X