பட்ஜெட் 2019: இந்த 10ம் இடம் பெற்றால் மெத்த மகிழ்ச்சி

10 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது,

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பட்ஜெட் 2019ல் இந்த 10 முக்கிய அம்சங்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட் என்று இதனை குறிப்பிட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தன்னுடைய கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.

பட்ஜெட் 2019: இந்த 10ம் இடம் பெற்றால் மெத்த மகிழ்ச்சி

வழக்கம்போல் தேர்தல் சமயத்தில்தான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதனால் தேர்தலை குறிவைத்து சில முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடம் காரணமாகவும் மேலும் சில அறிவிப்புகளை மத்திய அரசு தாமாக முன்வந்து அறிவிக்கும் என்றும் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக இன்று 10 அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் அதிருப்தியில் உள்ளதால், அவர்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது.

2. அடுத்ததாக உணவு மானியத்திற்கு ரூ. 1.8 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

3. விவசாயிகளுக்கு கடன் உதவி தொகை மறுக்கப்பட்டு வந்து, தற்கொலைகளும் தொடர்ந்தன. அதனால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பண உதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர போவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. அதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

4. வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்பது நடுத்தர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளதால், இது சம்பந்தமான பரிசீலனையும் இன்று இருக்கும் என தெரிகிறது. அதனால் மாத சம்பளதாரர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ரூ. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக வருமான வரிக்கான வரம்பை உயர்த்தப்படலாம்

5 பட்ஜெட் என்றாலே அதிக எதிர்பார்ப்புள்ள துறை ரயில்வே ஆகும். நாட்டிலேயே மிகப்பெரிய நெட்வொர்க் என்பதால், இன்று ரயில்வே பட்ஜெட்டும் அறிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் அதிகவே ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். அதாவது ரயில் தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்தடங்களில் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

6. அதேபோல, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

7. வருமான வரி உச்ச வரம்பில் விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்ச வரம்பான ரூ.இரண்டரை லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதால் இதற்கான விலக்கும் அளிக்கப்பட உள்ளது.

8. விவசாயிகளுக்கான திட்டங்களை பொறுத்தவரையில் 70 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதில் விவசாயிகளுக்கான பணத்தை அவர்களின் நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலான திட்டத்தையும் அமல்படுத்தபோவதாக கூறப்படுகிறது.

9. கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ. 1.3 லட்சம் கோடி வரை செலவு செய்வதற்கு மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

10. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜான திட்டம் கிழ் இலவசமாக வீடு கட்டித் தர நிதி அளிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை மத்திய அரசு கட்டித் தர உள்ளதாக கூறப்பட்டுள்ளதால்,11 லட்சம் கோடி இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பத்தும் இருந்தால் மக்களுக்கு மெத்த மகிழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Major things in Budget

10 major things may announced in Budget 2019 speech today. It seems that the announcements for the benefit of farmers will be released.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X