அதிரடி.. பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாஜக.. தேர்தல் நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத மூவ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது.

 

மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன அறிவிப்பு

என்ன அறிவிப்பு

இந்த பட்ஜெட் அறிவிப்பில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் மொத்த வருமானம் 6.25 லட்சம் வரை வருடத்திற்கு பெறுபவர்கள் எந்த விதமான வருமான வரியும் செலுத்த தேவையில்லை. இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பல நாள் எதிர்பார்ப்பு

பல நாள் எதிர்பார்ப்பு

வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்பட வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த அளவிற்கு உயர்வு கொண்டு வரப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. இது மத்திய அரசு நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக பார்க்கப்படுகிறது.

பலர்
 

பலர்

இந்த புதிய திட்டம் மூலம் 3 கோடி பேர் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதே சமயம் மறைமுகமாக 6 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. முக்கியமாக தனியார் துறையில்

பணி புரியும் பணியாளர்கள் பலர் இதனால் பெரிய அளவில் பலன் பெற வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் நேரம்

தேர்தல் நேரம்

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகை தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. பல கோடி வாக்குகளை இதனால் பாஜக புதிதாக பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே 10% இடஒதுக்கீடு மூலம் பாஜக புதிய வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: New Individual tax for workers may give BJP more number of votes

FM Piyush Goyal: Individuals with gross income up to 6.5 lakh rupees will not need to pay any tax if they make investments in provident funds and prescribed equities
Story first published: Friday, February 1, 2019, 13:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X