பட்ஜெட் 2019: ஒட்டுமொத்தமாக ரூ. 6.50 லட்சம் வருமானம் வந்தால் வரி சலுகை - 3 கோடி பேருக்கு லட்டு கொடுத்த பியூஷ் கோயல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பியூஷ் கோயல் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பின்படி 6.50 லட்சம் வரை வருமான செலுத்த தேவையில்லை என்பது போல பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

இதுநாள் வரை தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருக்கும்போது வரி ஏதும் செலுத்த தேவையில்லை. இதுவே 2.5 லட்சம் முதல் 5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருக்கும்போது 20 சதவிகிதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே 10 லட்ச ரூபாய்க்கும் கூடுதலாக ஆண்டு வருமானம் இருக்கும்போது அதில் 30 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும்.

பட்ஜெட் 2019:  ஒட்டுமொத்தமாக ரூ. 6.50 லட்சம்  வருமானம் வந்தால் வரி சலுகை - 3 கோடி பேருக்கு லட்டு கொட

இந்த நிலையில் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். 5 முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான ஆண்டு வருமான உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரியும், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இருக்கும்போது 25 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துவது போல திருத்தங்கள் வேண்டும் என்று வணிகர்களும், தொழில் துறையினரும் மாத சம்பளம் வாங்குபவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல் மாத சந்தாதாரர்களுக்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பால் வார்த்தார். அவரது அறிவிப்பின் படி தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது.

 

வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு

நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு. வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இரண்டு வீட்டுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும். மாத வாடகை மூலம் வரும் வரிக்கான விலக்கு 1.80 லட்சத்தில் இருந்து 2.40 லட்சமாக உயர்வு. 2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை. ஒட்டுமொத்த வருமான வரிசலுகையால் 6.50 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.

மத்திய அரசின் வருவாயில் 70 சதவிகிதம் வரையிலும் தனி நபர் வரி செலுத்துவதில் இருந்துதான் கிடைக்கிறது. அதனை நாங்கள் இழக்க விரும்பவில்லை. எனவே தான் தனிநபர் வருமான வரி விலக்கு சதவிகிதத்தில் நாங்கள் கை வைக்கவில்லை. இருந்தாலும் வரும் நிதி ஆண்டில் இது குறித்து நாங்கள் திடமான முடிவெடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய, நடுத்தர வர்க்கத்தினரையும், மாத சம்பளதாரர்களையும் குறி வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 18,600 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு இருந்தாலும் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்பதால் இதனை விட்டுக்கொடுப்பதாகவும் பியூஷ்கோயல் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No tax for annual incomeazs up to Rs 6.50 laks says Finance Minister

TDS threshold on interest on bank and post office deposits raised from 10,000 to 40,000 rupees. TDS threshold on rental income raised from 1.8 lakh to 2.4 lakh rupees, said Piyush Goyal at interim budget 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X