பாஜக தான் ஆர்பிஐ-க்கு சொல்லி வாராக் கடன்களை வசூலித்தது? பொய் சொன்ன பியுஷ் கோயல், ஆதாரம் இதோ..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2008 - 2014 ஆண்டுகளில் தான் வங்கிக் கடன்கள் பெரிய அளவில் அதிகரித்தது. எங்கள் அரசு தான் ஆர்பிஐ இடம் சொல்லி கடன் வழங்குதல், கடனை மறு சீரமைத்தல், கடனைத் திருப்பி வசூலித்தல் போன்ற வேலைகளை செய்தோம், செய்ய வைத்தோம். என்று தன் உரையில் பேசி இருக்கிறார் பியுஸ் கோயல்.

 

ஆனால் உண்மையில் ரகுராம் ராஜனே தன் வாயத் திறந்து என் வேலைகளை முடிக்க இன்னும் ஒரு சில வருடங்கள் தேவை என மறைமுகமாக தன் பணிக்காலத்தை நீட்டிக்கச் சொன்னார். பதிலளிக்கவில்லை.

பாஜக தான் ஆர்பிஐ-க்கு சொல்லி வாராக் கடன்களை வசூலித்தது? பொய் சொன்ன பியுஷ் கோயல், ஆதாரம் இதோ..?

வட்டி விகிதங்களை குறைக்கச் சொன்னார்கள், ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் இருவருமே கேட்கவில்லை.

பாஜகவின் மோசமான, மக்களை வாட்டி எடுத்த பணமதிப்பிழப்புக்கு ஒழுங்காக முட்டு கொடுக்கவில்லை என மொத்த பாஜகவும் கோபப்பட்டது. அதோடு உர்ஜித் பணமதிப்பிழபினால் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை எனச் சொன்னதற்கும் கூப்பிட்டு கடித்தது பாஜக.

ஆர்பிஐ-ன் ரிசர்வ்களை தொடர்ந்து அரசுக்கு கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் உர்ஜித் படேல் இருந்த போதே டிமானிட்டைசேஷன் காரணமாக ஆர்பிஐ லாபம் குறைந்திருக்கிறது. எனவே தர முடியாது என தெளிவாகச் சொல்லிவிட்டார் இருந்தாலும் விடுவதாகத் தெரியவில்லை. இன்னும் நச்சரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

வாராக் கடன்களுக்காக ஆர்பிஐ தலியில் அடித்துக் கொண்டு ஒவ்வொரு வேலையாகச் செய்தது. அதில் "ரூ.2,000 கோடிக்கு மேல் வாராக் கடன் வைத்திருக்கும் நிறுவனங்களின் மீது, கடன் சீரமைப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தும் 180 நாட்களுக்குள் கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒத்து வராவிட்டால், அந்த நிறுவனத்தை நொடிந்த நிறுவனம் என வங்கிகள் பட்டியல் இட வேண்டும். Insolvency & Bankruptcy Code-ன் கீழ் வாரக் கடன் உள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" நிறைந்த அன்பும் ப்ரியங்களுடன் உர்ஜித் படேல்... என 2018 பிப்ரவரி 12-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கு பகீர் கிளப்பினார்.

 

KSK Energy, Avantha Group, GMR Energy and Jaiprakash Power Ventures போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதே தில்லாக தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT -National Company Law Tribunal)- வழக்கு தொடுத்தார் உர்ஜித். எவ்வளவு தொகையை மீட்கத் தெரியுமா...? 1.5 லட்சம் கோடி ரூபாய். இந்த NCLT தான் நிறுவன கடன் சார்ந்த பிரச்னைகளை கையாளும் அமைப்பு, இங்கு வரும் தீர்ப்பு சரிப்பட்டு வரவில்லை என்றால் நீதி மன்றங்களுக்குப் போகலாம்.

மேலே சொன்ன தனியார் கார்ப்பரேட்டுகள் Independent Power Producers Association of India என்கிற பெயரில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா...? கார்ப்பரேட்டுகள் சார்பாக அரசு நிலைப்பாடு இருந்தது தான். அங்கும் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆர்பிஐ தன் இஷ்டத்துக்கு விசாரிக்க உத்தரவிடுமாறு நீதி மன்றத்திடம் கேட்டார் உர்ஜித். அரசோ கம்பெனிகளுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றது.

ஆர்பிஐ நடவடிக்கைகளில் இருந்து கம்பெனிகளுக்கு தற்காலிக ஓய்வு அளிக்க முடியாது. இதை குறித்து ஒரு உயர் மட்டக் குழு அமைத்து 2 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். மின் அமைச்சகம் ஆர்பிஐ கவர்னரோடு கலந்தாலோசித்து, ஆர்பிஐயில் இருந்து ஒரு உயர் அதிகாரியை அந்த உயர் மட்டக் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Insolvency & Bankruptcy Code-ன் கீழ் நிறுவனங்கள் மீது ஆர்பிஐ நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை என்றது நீதி மன்றம்.

ஆக ஆர்பிஐக்கு எதிராகவும், நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு வக்காளத்து வாங்கியது. உர்ஜித்தோ தனி ஒருவனாக நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை கடுமை ஆக்கினார். கார்ப்பரேட் நிறுவனங்கள் விடாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வரும் ஜனவரி 2019-ல் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது. அப்படி வந்தால் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் NCLT-ல் வழக்கு பதியப்பட்டு கடன் தொகைகள் மீட்கப்படும் அல்லது நிறுவனங்களின் சொத்துக்களை விற்று வங்கிக் கடன் தொகை எடுத்துக் கொள்ளப்படும். இத்தனை விடாப் பிடியாக விரட்டி கடனை வசூலிக்க வங்கிகளுக்கு வழி செய்து கொடுத்த உர்ஜித் சாருக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். ஆனா பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அப்பட்டமாக புழுகுகிறீர்களே கோயல் சார். தப்புங்க. தப்பு.

இதை எல்லாம் விட ஆர்பிஐ சட்டம் பிரிவு 7-ஐ ஏவி ஆர்பிஐ அமைப்பு தன் வீட்டு எடுப்பாட்கள் போல மாற்றப் பார்த்தது இதே பாஜக அரசு தானே. மிக சுருக்கமாக "மத்திய அரசின் சொல் பேச்சைக் கேட்டு ஆர்பிஐ நடக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு மத்திய இயக்குநர்கள் குழு வைத்து, ஆர்பிஐ செய்ய வேண்டியவைகளை அரசு மேற்கொள்ளலாம்." என்பது தான் ஆர்பிஐ சட்டம் பிரிவு 7. இந்த சட்டப் பிரிவை இதுவரை இந்தியாவில் யாருமே பயன்படுத்திய தில்லை. இந்த சட்டப் பிரிவின் கீழ் சொல்லப்படும் அறிவுரைகள் ஆர்பிஐ கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். கிட்டதட்ட ஆர்பிஐ என்கிற தனி அமைப்பைப் கூட அரசுக்கு கூஜா தூக்கும் சொம்பு அமைப்பாக மாற்றிவிடும். ஆனால் பாஜக பயன்படுத்தியது என்பது தான் வேதனை.

Promp Corrective Action என்பது தான் PCA வின் விரிவாக்கம். வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தில் பட்டியலிடப் படுவார்கள். PCA-வில் பட்டியலிடப்படும் வங்கிகள் பெரிய தொகை டெபாசிட்டுகளை வாங்கக் கூடாது. அதே போல் இருக்கும் டெபாசிட்டுகளைக் கூட மறு டெபாசிட்டுகளாக (Renew) செய்யக் கூடாது. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய சேவைகளை வழங்கவோ, கூடுதல் கட்டணங்களை வசூலிக்ககவோ, மற்ற வங்கிகளிடம் கடன் வாங்கவோ, புதிய கிளைகளை திறக்கவோ கூடாது.

மிக முக்கியமாக PCA திட்டத்தின் கீழ் இருக்கும் வங்கிகள் ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. குறிப்பாக கார்ப்பரேட்டுக்கு பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. இப்படி இந்தியாவின் 11 பொதுத் துறை மற்றும் அரசு வங்கிகள் இந்த PCA திட்டத்தின் கீழ் பட்டியலிடப் பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை பலவீனமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விட்டால் இந்திய வங்கிகள் மொத்தமாக திவால் ஆகிவிடும் என தில்லாக சொல்லி PCA திட்டத்தை ஒழுங்காக பயன்படுத்தியவர் உர்ஜித் படேல்.

"எப்பா உர்ஜித், நீங்க சொன்ன PCA திட்டத்தால மொத்த இந்தியாவும் ஸ்தம்பிச்சி இருக்கு. PCA திட்டத்த வாபஸ் வாங்குங்க" என நிதி அமைச்சகம் அழுத்தம் கொடுத்தது. "என் காலத்தில் இந்திய வங்கிகள் திவால் ஆவதை நான் விரும்பவில்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து PCA திட்ட உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் உர்ஜித் படேல்.

நவம்பர் 19, 2018-க்கு முன், இந்திய ஊடக வரலாற்றில் RBI Board Meeting-க்கு இத்தனை கவனம் கொடுத்திருக்கமாட்டார்கள் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க இந்த கூட்டத்தில் என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா..? இந்த கூட்டத்தில் தான் RBI Board பெரிதா..? அல்லது RBI Governor..? பெரியவரா என்கிற சண்டை உருவானது. இப்போது RBI Board சொன்னால் ஆர்பிஐ கவர்னர் கேட்டே ஆக வேண்டும் தானே என மத்திய பாஜக அரசு கிடிக்கிப்பிடி போட்டது.

RBI Board-ல் மொத்தம் 21 இயக்குநர் பதவிகள் அல்லது இடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு ஆர்பிஐ கவர்னர், நான்கு துணை கவர்னர்கள், ஆர்பிஐ-ன் பிராந்திய குழுக்களில் இருந்து வரும் நான்கு உறுப்பினர்கள் என ஆர்பிஐ சார்பில் மட்டும் (1+4+4 = 9) இயக்குநர்கள் வருவார்கள். அது போக இரண்டு பேர் நிதி அமைச்சகத்தின் நாமினிக்களாக இருப்பார்கள். மீதமுள்ள 10 பேரும் அரசினால் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் தான். இந்த 10 பேரை நியமிக்கும் முன்பு நிதி அமைச்சகம், ஆர்பிஐ கவர்னரிடம் ஒரு வார்த்தை கேட்டு தான் நியமிப்பார்கள். சில நேரங்களில் தன்னுடைய இயக்குநர் குழுவுக்கான 10 பேரை ஆர்பிஐயே முன் மொழியும். அதில் இருந்து தான் அரசு தேர்ந்தெடுக்கும். ஆனால் உர்ஜித்திடம் குருமூர்த்தி, சதீஷ் குலாத்தி, மனீஷ் சபர்வால், சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி போன்ற ஆர்.எஸ்.எஸ் சொம்புகளை நியமிக்கும் போது ஒரு வார்த்தைக் கூட கேட்ககாமல் ஒரு சபை நாகரீகம் கூட இல்லாமல் அவமானப்படுத்தினார்கள்.

இத்தனையும் செய்துவிட்டு, அதுவும் இரண்டு வருடத்தில் மட்டும் செய்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் பியுஷ் கோயல் ஆர்பிஐ-க்கு நாங்கள் தான் வழிகாட்டினோம், எங்கள் அறிவுரைகள் படிதான் இந்திய வங்கிகளின் நிதி நிலை கட்டுப்பாடோடு இருக்கிறது என புழுகுவது எல்லாம்.... உங்களால் மட்டும் தான் முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

piyush goyals cruel lie in his budget speech

piyush goyals cruel lie in his budget speech
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X