ஆயுஷ்மான் பாரத் திட்டம்… 10 லட்சம் பேருக்கு பயன்.. கோயல் பெருமிதம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயனடைந்தவர்கள் 10 லட்சம் பேர்… பட்ஜெட் தாக்கலின் போது கோயல் பெருமிதம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி:உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். 16வது லோக்சபாவின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது.

ஒப்புதல் அளிப்பு, தாக்கல்

ஒப்புதல் அளிப்பு, தாக்கல்

முன்னதாக, 2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

எதிர்த்த காங்கிரஸ்

எதிர்த்த காங்கிரஸ்

பியூஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்தவுடனேயே காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் அருண்ஜேட்லி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி தமது பட்ஜெட் உரையை பியூஷ் கோயல் தொடங்கினார். தமது உரையில் பல முக்கிய அம்சங்களையும், அறிவிப்பு ளையும் விரிவாக பட்டியலிட்டார்.

எதிர்த்த காங்கிரஸ்

எதிர்த்த காங்கிரஸ்

பியூஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்தவுடனேயே காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் அருண்ஜேட்லி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி தமது பட்ஜெட் உரையை பியூஷ் கோயல் தொடங்கினார். தமது உரையில் பல முக்கிய அம்சங்களையும், அறிவிப்பு ளையும் விரிவாக பட்டியலிட்டார்.

ஆயுஷ்மான் பாரத்

அவற்றில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து அவர் பேசியதுதான். தமது உரையில் இது குறித்து கோயல் மேலும் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேர் இதுவரை பலன் அடைந்து உள்ளனர். 22வது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது.

சொன்னதை செய்த அரசு

சொன்னதை செய்த அரசு

சொன்னதை செய்யும் அரசாக மத்திய பாஜக அரசு திகழ்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 5.45 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பு முறை அகற்றப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் மலம் கழிக்கும் முறை நாட்டில் இருந்து ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்டது. சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வேளாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் மேம்பட்ட நிலை எட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs. 3,000 crores saving by poor families in ayushman bharat programme says minister pyush goyal

Ayushman Bharat the world's largest healthcare programme was launched to provide medical care to almost 50 crore people, resulting in 3,000 crore savings by poor families says minister pyush goyal while presenting interim budget 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X