மீண்டு எழும் அமேஸான்..! எப்படி களம் இறங்கினார்கள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர் 2018-ல் இந்தியாவின் இருக்கும் இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பின் ஏகப்பட்ட பொருட்களை அமேஸானில் விற்க முடியவில்லை.

 

குறிப்பாக Cloudtail and Appario நிறுவனத்தோடு அமேஸானுக்கு ஒப்பந்தங்கள் வேறு இருக்கின்றன. எனவே இவர்களின் பொருட்களை ஒவ்வொரு காலாண்டுக்குக்கும் இவ்வளவு விற்க வேண்டும் என தீர்மானித்து இருப்பார்கள். இப்போது அதை எல்லாம் எப்படி விற்கிறது.

ஆறு புதிய இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் விற்று வருகிறது. A to Z Supermart, Sabharwal Super Market, Sigma Online என சில பல நிறுவனங்கள் மூலம் தன் வழக்கமான விற்பனையைச் செய்யத் தொடங்கி இருக்கிறது.

நீக்க வேண்டிய பொருட்கள்

நீக்க வேண்டிய பொருட்கள்

அமேஸான் எக்கோ தொடங்கி ஸ்மார்ட் போன்கள் வரை பல்வேறு எலெக்ட்ரானிக் ஐட்டங்களை இனி அமேஸானில் விற்க முடியாது. ஆனால் அமேஸானின் பெரிய வருவாய் மூலமே அந்த எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் தானாம். இவைகளுக்கு அடுத்து ஆடைகளாம்.

டெலிவரி பிரச்னை

டெலிவரி பிரச்னை

எப்போதும் 1 - 2 நாட்களில் டெலிவரி கொடுக்கும் பொருட்கள் இப்போது புதிய நபர்களால் 4 - 5 நாட்களாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் அமேஸானுக்கு வழக்கமாக வரும் விற்பனையில் 20 - 25 சதவிகிதம் குறைவாகவே வந்து கொண்டு இருக்கிறதாம்.

சேமிப்புக் கிடங்குகள் பிரச்னை

சேமிப்புக் கிடங்குகள் பிரச்னை

அமேஸானின் புதிய விற்பனையாளர்களாக வளர்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு அளவுக்கு மீறி ஆர்டர்கள் கிடைத்திருப்பதால், அமேஸானின் பொருட்களை சேமித்து வைக்க போதுமான சேமிப்புக் கிடங்குகள் இல்லையாம்.

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்
 

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்

ஷியோமி போன்ற மிகப் பெரிய ஸ்மார்ட் போன் நிறுவனமும் அமேஸானின் தடையால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் விற்கப்படும் ஷியாமி ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவைகள் ஆன்லைனில் தான் விற்கப்படுகிறதாம்.

மீண்டும் கடைகளுக்கு

மீண்டும் கடைகளுக்கு

இப்போது இந்த பிரச்னையை சமாளிக்க ஷியாமி போன்ற ஸ்மார்ட்போன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆன்லைன் வருவதற்கு முன்னால் எப்படி கடைகளுக்கு பேசி போனை விற்பார்களோ அப்படி மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்களாம்.

தப்பித்த ஃப்ளிப்கார்ட்

தப்பித்த ஃப்ளிப்கார்ட்

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட் தன் வால்மார்ட் நிறுவன பொருட்களை பெரிய அளவில் இன்னும் இந்தியாவில் விற்கத் தொடங்கவில்லை. அதனாலேயே ஃப்ளிப்கார்ட்டுக்கு பெரிய அடி விழவில்லையாம். எல்லா ஆன்லைன் நிறுவனங்கள் அடிவாங்கியது போல எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் விற்க முடியாதது தான் வருத்தமாக இருக்கிறதாம். அதனால் தான் அவர்களுக்கு ஒரு 20 சதவிகித விற்பனை குறைந்திருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

amazon and flipkart is struggling to retain their indian e commerce space

amazon and flipkart is struggling to retain their indian e commerce space
Story first published: Monday, February 4, 2019, 14:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X