இவர்கள், மோடியின் இடைக்கால பட்ஜெட்டைப் புகழ்வது ஏன்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரி 01-ம் தேதி பியுஷ் கோயல் முதல்முறையாகவும், பாஜக கடைசியாகவும் தன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த இடைக்கால பட்ஜெட்டிலேயே சாதாரண ஆண்டு பட்ஜெட் போல அள்ளித் தெளித்திருப்பது மக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், எதிர் கட்சிகளுக்கு அதென்ன எல்லாத்தையும் மாபு மீறி செய்வது என கொந்தளித்திருக்கிறார்கள்.

 

இதில் மக்களுக்கு தற்போதும் அதிகம் அறிமுகமாகி வரும் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு புது சலுகைகளோஒ அல்லது கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட சில பாதகமான விதிகளையோ அறிவிக்கவும் இல்லை, மாற்றமும் செய்யவில்லை. இதனால் முன்னனி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறார்களாம். அட அந்த 80சி வரம்பையாவது அதிகரித்திருக்கலாம் எனவும் மியூசுவல் ஃபண்டு நிறுவனங்கள் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும் நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு (LTCG - Long Term Capital Gain) அளிக்கப்படும் சலுகை திரும்பப் பெறப்படும் என்றே இன்னும் எதிர்பார்க்கிறார்களாம். இந்த இடைக்கால பட்ஜெட்டில், அதைப் பற்றி பியூஷ் கோயல் எதுவும் பேசவே இல்லை.

அந்த ஐந்து லட்சம்

அந்த ஐந்து லட்சம்

எல்டிசிஜி குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்காததில் ஏமாற்றமடைந்த இத்துறையினர், சம்பளதாரர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் எனௌம் அறிவிப்பின் மூலம் தங்கள் மியூச்சுவல் ஃபண்டு துறையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர்.

நுகர்வுக்கு ஓகே..!

நுகர்வுக்கு ஓகே..!

இந்த இடைக்கால பர்ஜெட்டைப் பார்க்கும்போது நுகர்வு அடிப்படையில் இந்த பட்ஜெட் சரியான பட்ஜெட் என ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர் ஜினேஷ் கோபானி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அதிக அளவில் சலுகைகளும், ரியல் எஸ்டேட் துறையினருக்கு மறைமுக சலுகைகள் பலவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நிதி மேலாளர்கள் பாராட்டு
 

நிதி மேலாளர்கள் பாராட்டு

சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடு நிலையோடு யோசித்து தயார் செய்யப்பட்ட பட்ஜெட் என கோட்டக் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் நிதிப் பிரிவின் தலைமை முதலீட்டு அதிகாரி (CIO - Cheif Investment Officer) லட்சுமி தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற மேக்ரோ பொருளாதார எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதைப் பொறுத்து தான் மத்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை வெளியிடும். அதையே கட்டுக்குள் வைக்க பெரிய முயற்சிகளை எடுத்து வருகிறது மத்திய அரசு என பாராட்டுகிறார் லட்சுமி.

மறு அறிமுகம், முதலீட்டாளர்கள் வருத்தம்

மறு அறிமுகம், முதலீட்டாளர்கள் வருத்தம்

அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பை மீண்டும் அறிமுகம் செய்தார். அதன் படி ஒரு நிதி ஆண்டில், பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக நீண்ட கால மூலதன ஆதாயம் பெற்றால். பெறும் தொகைக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். இதனால் விரி அறிவித்த முதல் ஆண்டிலேயே அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கிடைக்கும் எனவும் மதிப்பிட்டார்கள். இந்த நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்புகள் மூலம் அரசுக்கு, வரும் ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் எனவும் சொல்லி இருந்தார்கள். எப்படியாவது இந்த வரியை மத்திய அரசு விலக்கி விட வேண்டும் அல்லது விலக்க வைக்க வேண்டும் என்பது தான் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதல் வேலை. அதற்குத் தான் பட்ஜெட்டைப் பாராட்டித் தள்ளுகிறார்கள் இந்த நிதி மேலாளர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mutual fund companies are not happy with this interim budget

mutual fund companies are not happy with this interim budget because government didnt revoke the long term capital gain from the shares and mutual funds investments
Story first published: Monday, February 4, 2019, 11:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X