சத்யா நாதெல்லாவின் நான்கு வருட சாதனைப் பொதுக் கூட்டம்..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்றால் நமக்கு பில் கேட்ஸ் தான் முதலில் நினைவுக்கு வருவார். உலகின் மிகப் பெரிய பணக்காரராக அதிக முறை ஃபோர்ப்ஸ் நிறுவனப் பட்டியலில் இடம் பிடித்ததும் இவர் தான். அதனாலேயே பணக்காரர் என்றால் பில் கேட்ஸ் என நமக்கு பதிந்துவிட்டது.

 

பில்கேட்ஸுக்கு அடையாளம் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை இப்போது வழிநடத்துபவர் இந்தியாவின் சத்யா நாதெல்லா.

நேற்றோடு பிப்ரவரி 04, 2019 சத்யா நாதெல்லா மைரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி யேற்று நான்கு வருடங்களாகிவிட்டது. இந்த நான்கு வருடங்களில் எதை எல்லாம் சாதித்திருக்கிறார். எதில் எல்லாம் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்..? பார்ப்போம்

நிதி நிலை அறிக்கைகள்

நிதி நிலை அறிக்கைகள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வருவாய் 86.73 பில்லியன் டாலரில் இருந்து 110.18 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. ஆங்கிலத்தில் Ebitda என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவதுEarning before Interest Tax Depreciation and Amortisation எனச் சொல்வார்கள். ஒரு நிறுவனத்துக்கு வந்த மொத்த வருவாயில் எல்லாம் செலவுகள் போக, வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்ட்ச் செலவுகள், அரசுவ் அரிச் செலவுகள் மற்றும் தேய்மானச் செலவுகளை சேர்க்காமல் எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது எனப் பார்பார்கள். அப்படி மைரோசாஃப்டின் Ebitda 32.3 பில்லியனில் இருந்து 44.83 பில்லியனாக அதிகரித்திருக்கிறது.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்

மைஃப்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகளை சந்தையில் விற்றால் இன்று 851 பில்லியன் டாலர் கிடைக்கும். சத்யா நாதெல்லா பொறுப்பேற்கும் முன் மைஃபோசாஃப்டின் சந்தை மதிப்பு வெறும் 350 பில்லியன் டாலர் தான். ஆனால் நான்கு வருடத்தில் சுமார் 500 பில்லியன் டாலருக்கு சந்தை மதிப்பை அதிகரித்திருக்கிறார் சத்யா நாதெல்லா.

க்ளவுட் சேவைகள்
 

க்ளவுட் சேவைகள்

சத்யா நாதெல்லாவின் கவனம் பெரும்பாலும் க்ளவுட் கம்யூட்டிங்கிலேயே இருந்திருக்கிறது, இருக்கிறது. அதனால் தான் அசூர் (Azure) உலகின் இரண்டாவது பெரிய க்ளவு கம்யூட்டிங் நிறுவனமாக இருக்கிறது. முதலிடத்தில் அமேஸான்.

பிரச்னைகள்

பிரச்னைகள்

இன்றைய தேதிக்கு சாதிப்பதை விட சமாதானமாக இருப்பது பெரிய விஷயம். ஆனால் அதை அசால்டாக செய்து கொண்டிருக்கிறார் சத்யா. கடந்த நான்கு வருடங்களில் கூகுள், ஃபேஸ்புக், அமேஸான், ஆப்பிள் என நீதிமன்றங்களில் பெரிய வழக்குகளில் சிக்காத நிறுவனங்களே இல்லை. ஆனால் மைக்ரோசாஃப்ட் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிதானமாக தன் வளர்ச்சியைப் பார்த்திருக்கிறது என்றால் அதற்கு சத்யா நாதெல்லாவின் வழிகாட்டலும் முடிவுகளும் முக்கியம் தானே..?

அடிகள்

அடிகள்

மைக்ரோசாஃப்ட் ஊத்தி முழுகிய ஸ்மார்ட் போன் திட்டங்கள், புதிய டேப்லட்டுகள் என எல்லாமே ஃப்ளாப் தான். மைக்ரோசாஃப்டின் ரசிகர்களைத் தாண்டி யாருமே அதைப் பயன்படுத்தவில்லை. எனப்து தான் உண்மை. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மைக்ரோசாஃப்சை கூலாக சேவைகள் பக்கம் திருப்பி கல்லாகட்டியதில் நிற்கிறார் சத்யா நாதெல்லா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

satya nadella completed four year term as ceo of microsoft

satya nadella take chair as ceo of microsoft on 2014 and completed four year term as ceo on feb 04th 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X