“ஜியோவால எல்லாம் போச்சுங்க” ஏர்டெல்லைத் தொடர்ந்து, ஐடியாவின் தலைவர் பிர்லா கதறல்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் 2016-க்குப் பிறகு ஜியோ தலைவிரித்து ஆடத் தொடங்கியது. நேத்து வந்த பய என்னயா பண்ணப் போறான் என அதிகம் கண்டு கொள்ளாத ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இப்போது ஜியோ வால் எல்லாமே போச்சு என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

சமீபத்தில் சுனில் மித்தல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஜியோவால் தான் எங்களுக்கும் டேட்டா மற்றும் கால் கட்டணங்களைக் குறைக்க வேண்டி இருந்தது. அதனால் எங்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது என வெளிப்படையாகச் சொனார்.

அதைனைத் தொடர்ந்து இப்போது வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தி தலைவர் குமாரமங்களம் பிர்லாவும் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

சுமை நிதிச் சுமை

சுமை நிதிச் சுமை

மார்ச் 2019-ல் இந்திய டெலிகாம் துறைக்கு இந்தியாவில் செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள் அலைக்கற்றைகளைத் தொடர்ந்து பயனப்டுத்திக் கொள்ள சில தவனைக் கட்டணங்களையும், மேலும் சில சேவைகளுக்கான கட்டணங்களையுன் செலுத்த வேண்டி இருக்கிறது. வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அப்படி வரும் மார்ச் 2019-ல் 6,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இந்த கட்டணங்களை ரத்து செய்யச் சொல்லி இண்திய டெலிகாம் துறையின் செயலர் அருணா சுந்தரராஜனைச் சந்தித்து பேசி இருக்கிறார். அதோடு ஜியோ இந்திய டெலிகாம் சந்தையோடு இணையாத ரீதியிலேயே செயல்பட்டு வருகிறது. அவர்கள் செய்த அதிரடி நடவடிக்கைகளால் தான் இன்று நாங்கள் உங்களிடம் எங்கள் தவணைகளை ரத்து செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் சொன்னாராம்.

கடிதம்
 

கடிதம்

Cellular Operators Association of India (COAI) என்கிற இந்தியாவின் டெலிகாம் அமைப்பும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனொஜ் சின்ஹாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் "ஜிஎஸ்டி மூலம் தங்களுக்கு திரும்ப வர வேண்டிய 35,000 கோடி ரூபாய் பாக்கியை, டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களாக எடுத்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிதிச் சுமை

நிதிச் சுமை

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் 4,973 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தைக் காட்டியது. அதே போல இந்த டிசம்பர் காலாண்டிலும் சுமார் 4500 கோடி நஷ்டம் கணக்கு காட்ட இருக்கிறது. இப்படித் தான் மொத்த இந்திய டெலிகாம் துறையும் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்தியாவின் டெலிகாம் சேவை நிறுவனங்களைக் காப்பாற்ற எதையாவது பார்த்து செய்யச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது ஏர்டெல் மற்றும் வொடாஃபோன் ஐடியா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vodafone idea company chairman kumaramangalam birla requested government to waive their payments

vodafone idea company chairman kumaramangalam birla requested government to waive their payments and further the indian telecom sector requested to take payments from their gst input refund
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X