“என்னோட வியாபாரத்துல 90% சரிஞ்சிருச்சுங்க” கண்ணீரில் Paytm நிறுவனர்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த டிசம்பர் 2018-ல் (Ministry of Commerce and Industry) மத்திய வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை வகுக்கும் துறை (Department of Industrial Policy and Promotion) இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு சில கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்தது.

 

அமேஸான், ஃப்ளீப்கார்ட் போன்ற இ காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் துணை நிறுவனங்கள், தாய் நிறுவனத்தின் (Parent company) பொருட்களையோ, அதன் (Group company) குழும நிறுவனத்தின் பொருட்களையோ, இ காமர்ஸ் நிறுவனங்கள், முதலீடு செய்திருக்கும் நிறுவன (Invested Company) பொருட்களையோ தன் இ காமர்ஸ் நிறுவனத்தின் வழியாக விற்கத் தடை.

ஒரு நிறுவனத்தின் பொருட்களை தன்னிடம் மட்டுமே விற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு நிறுவனத்துக்கு சார்பாக கேஷ் பேக், உடனடி டெலிவரி, இலவச டெலிவரி, அதிரடி விலை குறைப்பு போன்றவைகளை இனி செய்யக் கூடாது.

எந்த ஒரு நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 25%-க்கு மேல் ஒரே இ காமர்ஸ் நிறுவனத்திடம் விற்கக் கூடாது. அப்படி விற்றால் அந்த நிறுவனத்தை இ காமர்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துவதாகவே கருதப்படும்.

பிப்ரவரி 01, 2019 முதல்

பிப்ரவரி 01, 2019 முதல்

இந்த விதிகள் பிப்ரவரி 01, 2019 முதல் அமலுக்கு வந்துவிட்டதால் வழக்கம் போல தங்கள் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரே நாளில் 100 ரூபாய்க்கு வர்த்தமாகிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது 70 - 75 ரூபாய் தான் வியாபாரமாகிறதாம். ஃப்ளிப்கார்ட் கூட மேலே சொன்ன விதிகளால் அதிகம் பாதிக்கப்படவில்லை ஆனால் அமேஸான் தான் முதலீடு செய்திருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகிறதாம்.

இவர்களுமா..?

இவர்களுமா..?

இந்தியாவில் கொண்டு வரப்பட்ட புதிய கொள்கை முடிவுகளுக்குப் பின் அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் எப்படி வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கிறதோ அதே போல் பேடிஎம் மால் நிறுவனமும் தேங்கி நிற்கிறது. காரணம் புதிய இந்திய இ காம்ர்ஸ் கொள்கை முடிவுகளின் படி கேஷ் பேக் ஆஃபர்களை குறைத்தது தான். சுமார் 80% கேஷ் பேக்குகளை குறைத்துவிட்டதாகச் சொல்கிறா பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா.

பேச்சு வார்த்தை நடக்கிறது.
 

பேச்சு வார்த்தை நடக்கிறது.

அமேஸான் & ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைப் போல நாங்கள் அதிகம் எலெக்ட்ரானிக் பொருட்களையோ அல்லது துணை நிறுவனங்களின் பொருட்களையோ விற்பனை செய்யவில்லை. ஆனால் கேஷ்பேக் இருந்ததால் தான் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இப்போது கேஷ் பேக் கொடுக்க முடியாததால் மக்களும் எங்கள் வலைதளத்தில் வந்து வாங்குவதும் குறைந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டும் பழைய படி பேடிஎம் மாலைக் கொண்டு வர பேசி வருகிறோம் எனிறா பேடிஎம் நிறுவனர்.

கை கோர்க்கும் பேடிஎம்

கை கோர்க்கும் பேடிஎம்

பேடிஎம் இந்தியாவின் மிகப் பெரிய FMCG - Fast Moving Consumer Good நிறுவனங்களான பார்லி, ஐடிசி, மாண்டலேS, ஹிந்துஸ்தான் யுனிலிவர், நெஸ்லே, டாபர் போன்ற பெரு நிறுவனங்களோடு தன் வியாபாரத்தை அதிகரித்துக் கொள்ள புதிய டீல்களைப் போட பேசி வருகிறதாம். கடந்த சில வாரங்களில் பேடிஎம் மால் மூலம் விற்பனை ஆகி வந்த மொத்த மளிகை சாமான்களில் 90% விற்பனை சரிந்திருக்கிறதாம். எல்லாவற்றுக்கும் காரணம் கேஷ்பேக் தான் என வருத்தப்படுகிறார் நிறுவனர் விஜய் சேகர் சர்மா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

paytm lost its 90 percent sales in groceries due to ban on cash back

paytm lost its 90 percent sales in groceries due to ban on cash back
Story first published: Wednesday, February 6, 2019, 16:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X