தம்பி ஒரு 3000 கோடி ரூபாய் இருக்கா..? நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியுஷ் கோயல் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் தனி நபருக்கு வருமான வரி விலக்கு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் திட்டம், அமைப்பு சாராத அல்லது ஒழுங்குபடுத்தப்படாத பணியாளர்களுக்கு Employees' Pension Scheme (EPS) திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ரூபாய் பென்ஷன் இந்த மூன்று மட்டுமே தான் பட்ஜெட்டாக இருந்தது.

 

இப்போது வரை ஒட்டு மொத்த பட்ஜெட்டும் இந்த 3 விஷயத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் தனி நபருக்கான ஐந்து லட்சம் ரூபாய் நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்த பின் தான் செல்லு படியாகும். அதோடு அரசு கருவூலத்தில் இருந்து காசை வாரிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6,000 ரூபாய் திட்டத்துக்கு ஆண்டுக்கு 75,000 ரூபாயும், அமைப்புசாரா பணியாளர்களுக்கான மாதாந்திர பென்ஷன் திட்டத்துக்கு ஆண்டுகு 30,000 க்கோடி ரூபாயும் அரசு தன் கைக்காசைப் போட்டு செய்ய வேண்டி இருக்கிறது. இதற்குத்தான் நிதி அமைச்சகம் பல்வேறு அமைச்சகங்களுக்கு 3000 கோடி ரூபாய் கேட்டு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது.

கோரிக்கை

கோரிக்கை

பாஜக யோசித்து தான் அமைப்புசாரா பணியாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 3,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. வர்த்தக சங்கங்கள் எல்லாம் பல முறை மத்திஅ நிதி அமைச்சகத்துக்கும், தொழிலாளர் அமைச்சகத்துக்கும் தங்கள் மாதாந்திர பென்ஷன் தொகையை 1,000 ரூபாயில் இருந்து மாதம் 3,000 முதல் 7,500 ரூபாய்க்குள் எதையாவது ஒரு தொகை நிர்ணயிக்கச் சொல்லி வலியுறுத்தி வந்தது. ஆக மக்கள் கேட்டதைத் தான் கொடுத்திருக்கிறது பாஜக் அரசு.

தொழிலாளர் அமைச்சகம்

தொழிலாளர் அமைச்சகம்

முதல் கட்டமாக தம்பி நீங்க ஒரு 3000 கோடி ரூபாயை எடுத்துக் கொடுக்க முடியுமா..? என மத்திய நிதி அமைச்சகம், மத்திய தொழிலாளர் அமைச்சகத்துக்கு எழுதி இருக்கிறது. பின் குறிப்பு தொழிலாளர் அமைச்சகத்தின் நிதியில் இருந்து இந்த 3000 கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும்.

பிஎஃப் அலுவலகம்
 

பிஎஃப் அலுவலகம்

தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எஃப்.ஓ அலுவலகத்துக்கும் இந்த 3,000 கோடி ரூபாயை கொடுக்க முடியுமா எனக் கேட்டிருந்தது. ஆனால் மறுத்துவிட்டது பிஎஃப் அலுவலகம். காரனம் இங்கு இருப்பது எல்லாமே மக்கள் பணம் தான். ஆக ஏதாவது ஒரு பிரச்னை வந்தால் நாளை அவர்கள் பணத்தை வட்டியோடு கொடுத்தே ஆக வேண்டும். எனவே எங்களால் இந்த திட்டத்தை ஏற்க முடியாது எனச் சொல்லி விட்டது.

நமக்கும் உண்டு

நமக்கும் உண்டு

Employees' Pension Scheme (EPS) 1995-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்போது Employees' Provident Fund Organisation (EPFO)-ன் பிஎஃப் திட்டங்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும் அனைவருமே Employees' Pension Scheme (EPS) திட்டத்துக்கு தகுதியானவர்கள் தான். ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவிகிதம் பிடிக்கிறார்களா. அதில் 3.67 % பிஎஃப் திட்டத்துக்கும், 8.33 % இந்த Employees' Pension Scheme (EPS) திட்டத்துக்கும், 0.5 சதவிகிதம் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கும், மீதத் தொகை பிஎஃப் அலுவலக செலவீனங்களாகவும் போகிறது.

ஆக நமக்கும் 58 வயதுக்கு மேல் இந்த Employees' Pension Scheme (EPS) திட்டத்தின் கீழ் நமக்கும் மாதம் 3,000 ரூபாய் பென்ஷனாக வரும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

finance ministry is writing letters to various ministry to undertake the Employees’ Pension Scheme

finance ministry is writing letters to various ministry to undertake the Employees’ Pension Scheme
Story first published: Thursday, February 7, 2019, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X