ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் அறிவித்துள்ளார். கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தாலும் இலவசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மேலும் மேலும் கடன் வாங்கப்படுகிறது.

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019

2019-2020 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதால் உயர்வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்ல ஒரு நல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ஆண்டில் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.

இலவச திட்டங்களுக்கு நிதி:

  • தமிழக அரசு எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் ஓட்டுக்களை கவர தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிக்கிறது. இதற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு
  • விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர். நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • மாணவர்களுக்கு புத்தகப் பைகள் காலணிகள் நோட்டு புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் இதற்காக 2019 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் 1,656.90கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு. முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ. 460.25 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2018-2019 நிதி ஆண்டில் டாஸ்க்மாக் வருவாய் 7262.33 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தகவல்.2,698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன
  • 2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் செலவினங்கள் ரூ.2,08,671 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    Tamil Nadu Budget 2019-20: TN freebies and welfare schemes drain state treasury

    Tamil Nadu government has built itself a reputation for welfare schemes. From subsidised food to free laptops to induction stoves, name it and chances are that it is a freebie. These schemes have sent the state's Financial deficit soaring to over Rs 44,176 crore,revenue deficit 10,950 crore but this has not stopped the government from continuing with money-intensive schemes.
    Company Search
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X