தமிழக பட்ஜெட் 2019: கழுத்தை நெரிக்கும் கடன்.. கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் என்னதான் கழுத்தை நெரிக்கும் கடன் இருந்தாலும் அத்திக்கடவு- அவினாசி திட்டம், விவசாயிகளுக்கான பயிர் கடன் திட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக பட்ஜெட்டின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் துவங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.

8-ஆம் தேதி முதல்வர் எடப்பாடியின் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றினார்.

அவர் கூறுகையில், மும்முறை என்னை முதல்வராக்கியவர் ஜெயலலிதா. எனது குல தெய்வம் ஜெயலலிதா. அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது வாழ்த்துகள். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை வரும் 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ. 44176 கோடியாக இருக்கும்.

செலவீனங்கள் அதிகரிப்பு

செலவீனங்கள் அதிகரிப்பு

2019-2020-இல் தமிழக அரசின் செலவினங்கள் ரூ. 2,08,671 ஆக இருக்கும். புதிய நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ. 1,97,721 கோடியாக இருக்கும். தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையாக ரூ.10,950 கோடியாக இருக்கும். தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும். தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

மின்சார பஸ்கள்

மின்சார பஸ்கள்

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம். விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம். சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அப்துல் கலாம் பெயரில் கல்லூரி
 

அப்துல் கலாம் பெயரில் கல்லூரி

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு. சென்னையில் 2000 கோடி செலவில் மல்டி பார்க்கிங் கட்டடம் அமைக்கப்படும். கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படுகிறது.

சமூக பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு

சமூக பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு

நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காவல்துறைக்கு நிதி

காவல்துறைக்கு நிதி

காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நவீனமயமாக்கும் திட்டம் உட்பட காவல்துறைக்கு ரூ.8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு 2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு 10,550.85 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அத்திக்கடவு அவிநாசி

அத்திக்கடவு அவிநாசி

மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆற்றங்கரை மக்கள்

ஆற்றங்கரை மக்கள்

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு 4647.50 கோடியில் திட்டம் செயல்படும். உலக வங்கி நிதி உதவியுடன், 2வது கட்ட திட்டப் பணிகள் 1171 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக சாலை மேம்பாடு 459.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும். உலக வங்கி கடன் உதவியுடன் 2685.19 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

மெட்ரோ ரயில் திட்டம்

மெட்ரோ ரயில் திட்டம்

ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுகிறது. நடப்பு பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றார் ஓபிஎஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN Government produces Budget for the financial year 2019-2020

Tamil Nadu Budget 2019: O.Panneer Selvam is going to produce TN Budget today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X