மீண்டும் அமெரிக்காவுக்கு ஆப்படிக்குமா இந்தியா..? தடை அதை உடை, புது சரித்திரம் படை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பெரிய அளவில் ஈரான் நாட்டு கச்சா எண்ணெய்யைத் தான் நம்பி இருக்கிறது.

 

சமீபத்தில் தான் ஈரானே முன் வந்து எங்களுக்கு டாலரில் காசு கொடுக்க வேண்டாம், இந்திய ரூபாயில் எங்களுக்கான காசை வாங்கிக் கொள்கிறோம் என்றது.

அப்படி அதிகப்படியான இந்தியா ரூபாய் வேண்டாம் என்றால் எங்களுக்குத் தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறோம் என்றது.

வெனிசுலா வருகை

வெனிசுலா வருகை

ஈரான் நாட்டைத் தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய்க்கான காசை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு அமெரிக்க டாலர் சுமை கொஞ்சம் குறையும். அப்படிஒருவேளை தனக்கு இந்திய ரூபாய் வேண்டாம் என்றால் பழங்காலத்து பண்டமாற்று முறைப்படி (Barter System) கச்சா எண்ணெயை விற்று விட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

எண்ணெய் வளம்

எண்ணெய் வளம்

உலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்து உலகப் புகழ் பெற்ற ஹூகோ சாவேஸ் 2013-ல் காலமானார். அவருக்குப் பின் அதிபராக பதவி ஏற்ற நிகோலஸ் மதுரோ மீது விமர்சனங்கள் எழுந்தன.

விமர்சனம்
 

விமர்சனம்

2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். அப்போதும் அவர் மீதான விமர்சனங்கள் ஓய வில்லை. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து தான் மதுரோ வெற்றி பெற்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மத்திய அரசியல் நிலையற்ற தன்மை வேறு நிலவுவதால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாமல் திணறுகிறார்கள் ஆட்சியாளர்கள். மதுரோவுக்கு எதிரானவர்கள், தொடர்ந்து போராடுகிறார்கள்.

தனி அரசு

தனி அரசு

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, வெனிசுலா நாட்டின் எதிர்கட்சி தலைவரான கைடோ, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு ஒரு தனி அரசை நடத்தி வருகிறார். வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் உலக அரங்கில் வேண்டுகோள் வைத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளால் வெனிசுலாவில் குழப்பங்கள் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

இத்தனை குழப்பங்களுக்கு நடுவில் தான், அமெரிக்கா, வெனிசுலா மீது கடந்த மாதம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதில் வேடிக்கை என்ன என்றால், வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த நாடு அமெரிக்கா தான். இப்போது தங்களின் மிகப் பெரிய எண்ணெய் வாங்கும் நாடான அமெரிக்காவே தங்கள் மீது பொருளாதார தடை விதித்திருப்பதால் வெனிசுலா தவித்து நிற்கிறது.

இவர்களும்

இவர்களும்

அமெரிக்கா போலவே ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா மீது தடையை விதித்துள்ளன. இதனால் வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.

பண்டமாற்று முறை

பண்டமாற்று முறை

அமெரிக்காவின் தடை இருக்கின்ற போதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதை சர்வதேச அளவில் பெரிதாக பேசப்பட்டாலும் நாளடைவில் அமைதியானது அமெரிக்கா. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் எண்ணெய்க்கான காசை செலுத்தி வருகிறது இந்தியா. இதேபாணியில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா முன் வந்துள்ளது.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இதற்காக வெனிசுலா அரசின் எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ, இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் டாலருக்கு வேலையில்லாமல் இந்திய ரூபாய் மதிப்பிலேயே கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியாவுக்கு லாபம்

இந்தியாவுக்கு லாபம்

இதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு விவகாரத்திலும் இந்தியாவுக்கு சிக்கல் இல்லை. அதுபோலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெனிசுலாவுக்கும் கொஞ்சம் பொருளாதார ரீதியாக உதவி கிடைக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் இந்தியாவின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

in Venezuela case will India overcome Americas economic sanctions

will india disobey americas sanction again in venezuela case
Story first published: Wednesday, February 13, 2019, 18:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X