காதலர் தினத்தில் காதலர்கள் மகிழ்விக்கும் 2.5 கோடி ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓசூர்: உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒசூரில் இருந்து மட்டும் சுமார் 2.5 கோடி ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

காதலர் தினம் என்றாலே சாக்லேட்டுகள், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகள், டின்னர் டேட்டுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் நகரம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்ற நிலையில், விவசாயிகளும் இந்த வேலன்டைன்ஸ் டேக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒசூரில் இருந்து மட்டும் சுமார் 2.5 கோடி ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் விளையும் ரோஜா மலர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், மலேசியா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் காதலர் தினம் அன்று ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

ரோஜா மலர்கள்

ரோஜா மலர்கள்

2000 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச்சின் விலை ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 50 வரை விலை போகும். காதலர் தினத்தன்று மட்டும் ஒரு பஞ்ச்சின் விலை ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட 1 கோடி மலர்கள் அதிகமாக இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.5 கோடி வர்த்தகம்

ரூ.5 கோடி வர்த்தகம்

காதலர் தின விழாவையொட்டி ஓசூரில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே 5 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஒரு பூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ரோஜா விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது,'' என்றனர்.

காதலர்கள் ஆர்வம்
 

காதலர்கள் ஆர்வம்

காதலர்தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிப்ட் ஷாப் களில் விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. குறிப்பாக கண்ணாடியிலான பரிசு பொருட்கள், ‘காதல் மீட்டர்' எனப்படும் பரிசு பொருட்கள், மின்ஒளியில் ஜொலிக்கும் இதய வடிவிலான பரிசு பொருட்கள், கரடி பொம்மைகள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

வாழ்த்து அட்டைகள் விற்பனை

வாழ்த்து அட்டைகள் விற்பனை

புதிதாக வந்துள்ள இந்த பரிசு பொருட்களை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். வாழ்த்து அட்டைகள் பல்வேறு விதமான வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இசை ஒலிக்கும் வாழ்த்து அட்டைகள், மின்னொளியில் மிளிரும் வாழ்த்து அட்டைகள் போன்ற வாழ்த்து அட்டைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். காதலர் தின விற்பனை கடைகளில் களைகட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Valentines Day 2019 2.5 Crore Roses Exported From Hosur

Valentines Day 2019 2.5 Crore Roses Exported From Hosur in TamilNadu.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X