2,100 கோடி நஷ்டத்தில் இயங்கும் Paytm, ரூ. 7,000 கோடி சொத்துக்களைக் கொடுத்து 400 கோடி கடன் பெற்றதா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைலிலேயே ரிசார்ஜ் செய்து கொள்ளும் பழக்கத்தை இந்தியர்களுக்கு மத்தியில் அதிகரிக்க Paytm ஒரு அழுத்தமான காரணம் தான்.

 

கேஷ் பேக்-களை அள்ளி எறிவது, ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க ஓடுவது, அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற பெரு நிறுவனங்களால் கொடுக்க முடியத தள்ளுபடிகளைக் கொடுப்பது போன்ற அதிரடிகளுகு சொந்தக்காரர்கள் இந்த Paytm நிறுவனத்தினர்.

இந்த Paytm கடந்த சில வருடங்களாகவும், வர இருக்கும் அடுத்த சில வருடங்களிலும் நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் என ஒரு ஆய்வறிக்கை Paytm நிறுவனத்தைக் குறிவைத்துச் சொல்லி இருக்கிறது

நஷ்டக் கணக்கு

நஷ்டக் கணக்கு

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் என்பது தான் Paytm நிறுவனத்தின் தாய் நிறுவனம். இந்த ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இந்த 2018 - 19 நிதி ஆண்டில் சுமார் 870 கோடி ரூபாயும், 2019 - 20 நிதி ஆண்டில் சுமார் 2100 கோடி ரூபாய் வரையும் நஷ்டமடையும் என கணித்திருக்கிறார்கள்.

கணித்த நிறுவனம்

கணித்த நிறுவனம்

கார்ப்பரேட் ப்ரொஃபெஸனல்ஸ் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் (Corporate Professionals Capital Pvt. Ltd) தான் Paytm நிறுவனத்துக்காக இந்த கணிப்புகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் ரக நிறுவனமாம்.

எப்படிக் கணித்திருக்கிறார்கள்.
 

எப்படிக் கணித்திருக்கிறார்கள்.

Paytm நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் பிசினஸ் மற்றங்கள், அந்த மாற்றங்களுக்கு ஆகும் செலவுகள், செலவினால் கிடைக்கும் சொத்துக்கள், மற்றும் லாப நஷ்டங்களை எல்லாம் கணக்கில் எடுத்து அடுத்த ஏழு ஆண்டில் Paytm எந்த நிலைய்ல் இருக்கும் என கணித்திருக்கிறார்களாம்..!

எப்போது லாபம்

எப்போது லாபம்

வரும் 2021 மார்ச் மாதத்தில் தான் Paytm சுமார் 200 கோடி ரூபாய் வரை லாபம் பார்க வாய்ப்பிருப்பதாகவும் கணித்திருக்கிறார்கள். 2020 - 21 நிதி ஆண்டில் டொடங்கி ஐந்து வருடத்தில் சுமார் 8500 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டும் நிறுவனமாக Paytm உருவாகும் என அதன் பிரமாண்ட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் கணித்திருக்கிறார்கள்.

விரிவாக்கத்தால் நஷ்டம்

விரிவாக்கத்தால் நஷ்டம்

அமேஸான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், பிக் பாஸ்கெட் போன்ற இந்தியாவின் முன்னனி இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு இணையாக களம் இறங்கி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட பணத்தை டெக்னாலஜிக்காகவும், ஆஃபர்களுக்காகவும் வாரி இறைத்தது தான் நஷ்டத்துக்கு கரணம் என்கிறது அந்த அறிக்கை. கடந்த 10 வருடத்தில் சுமார் 25 துணை நிறுவனங்களைட் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இதில் 8 நிறுவனங்கள் முழுக்கமுழுக்க நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறதாம்.

இனி

இனி

டிசம்பர் 2018 இந்திய வணிக மற்றும் தொழிற்சாலைத் துறை கொண்டு வந்த புதிய சட்டங்கள் படி இந்தியவில் இனி எந்த இ காமர்ஸ் நிறுவனங்களும் கேஷ்பேக்குகள் மற்றும் அதிரடி ஆஃபர்களில் ஈடுபடக் கூடாது. அதனால் இனி Paytm நிறுவனத்தின் பெருவாரியாக பணம் மிச்சமாகுமாம். அதோடு ஆஃப்லைன் பிசினஸ் மாடல்களையும் தயார் செய்து வருகிறார்களாம். அதற்கும் தனியாக நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்களாம்.

புதிய தலைமை

புதிய தலைமை

இந்தியாவின் மளிகை சாமான் சந்தையை Paytm முழுமையாக கைப்பற்ற பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் இருந்து ரகு சக்க்ரவர்த்தையை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். இவர் பிக் பாஸ்கெட்டில் செய்த விஷயங்களை இன்னும் மேம்படுத்தி Paytm-ல் செய்ய இருக்கிறார்களாம். அதனால் அடுத்த சில வருடங்களில் இந்திய மளிகைக் கடையாக Paytm மாறும் என நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறது அவர்களின் அறிக்கை.

நிதி

நிதி

சமீபத்தில் தான் ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனம், உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை பிசினஸ் மேனான வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷேர் ஹதவே நிறுவனத்திடம் இருந்து சுமார் 356 மில்லியன் டாலருக்கு தன் பங்குகளை விற்று பணம் திரட்டியது. இது போல மேலும் நிறுவன பங்குகளை விற்று முதலைத் திரட்டவும் திட்டம் வைத்திருக்கிறார்களாம். 2019 - 20 நிதியாண்டில் சும் ஆர் 1400 கோடி ரூபாயை இப்படித் திரட்ட இருக்கிறார்கள். இந்த 2018 - 19-ல் 582.12 கோடி ரூபாயை திரட்டியும் இருக்கிறார்களாம்.

எங்கே..?

எங்கே..?

இன்று வரை இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் Paytm டாப்5 -க்குள் இருந்து வருகிறதாம். ஆனால் Paytm மால் மூலமாக இந்திய இ காமர்ஸ் தளத்தைப் பிடிக்க செய்யும் முதலீடுகள் தான் நஷ்டமாக திரும்பிக் கொண்டிருக்கிறதாம். சுருக்கமாக Paytm இ காமர்ஸ் சேவை பெரிய அளவில் காசை எரித்துக் கொண்டிருக்கிறது.

Paytm மால்

Paytm மால்

இந்த Paytm மால் தான், Paytm குழும நிறுவனத்தின் இந்திய இ காமர்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வருகிறத்ஹு. இந்த ஒரு நிறுவன்ஹ்தின் மூலம் மட்டும் சுமார் 1,787 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் கொண்டு வரும் லாபத்தையும் இந்த இ காமர்ஸ் நிறுவனம் சுவாஹா செய்துவிடுகிறதாம்.

சுருக்கமாக

சுருக்கமாக

ஒருபக்கம் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் நஷ்டம், மறு பக்கம் ஒவ்வொரு வருடமும் Paytm நிறுவனத்துக்கு வரும் பண வரத்து குறைந்து வருவது தான் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

வங்கிக் கடன்

வங்கிக் கடன்

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தன்னிடம் இருக்கும் 7,085 கொடி ரூபாய் சொத்துக்களை ஐசிஐசிஐ வங்கியிடம் அடமானம் வைத்து நடப்பு மூலதனமாக (Working Capital) சுமார் 400 கோடி ரூபாய் கடன் பெற்று இருக்கிறார்களாம். ஆக ஒட்டு மொத்தத்தில் Paytm ஒரு பக்கம் பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறது. மறு பக்கம் தன் வியாபாரத்தைத் தக்க வைத்து லாபம் ஈட்ட போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் ஐசிஐசிஐ வங்கி வேறு 400 கொடி கடன் கொடுத்திருக்கிறது.

இலக்கு

இலக்கு

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று வரும் பணம், ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து வாங்கிய 400 கோடி ரூபாய் கடன் மூலம், தன் பணப் பிரச்னைகளைத் தீர்த்து, இந்திய இ காமர்ஸ் வெளியை தனதாக்கி, ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய் லாபம் பார்க்க காத்திருக்கிறது Paytm. நடக்குமா..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

paytm is in loss and it needs more capital to infuse it in its business

paytm is in loss and it needs more capital to infuse it in its business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X