மின்கட்டணத்தை முன் கூட்டியே கட்டினால் 3.5 சதவிகித வட்டி - மின்சாரவாரியம் முடிவு

மாதாந்திர மின்சாரக் கணக்கு எடுப்பதற்கு முன்னரே உத்தேசமாக தங்களின் மின் கட்டணத்தை கூடுதலாக செலுத்தினால் அதற்கு உண்டான லாபத்தை கணக்கிட்டு 3.5 சதவிகித வட்டியாக வழங்க தமிழக மின்சார வாரியம் முடிவெடுத்துள்ள

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மின்சாரக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டால் அதற்காக 3.5 சதவிகித வட்டி வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

 

இது வரும் நிதி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. உங்களை நீங்களே கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழக மின்சார வாரியமான TANGEDGO தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக மக்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடைமுறை

நடைமுறை

பொதுவாக மின் கட்டண கணக்கு எடுக்கப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. 20 நாட்களை கடந்தும் மின் கட்டணம் கட்டத் தவறும்போது, மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு விடும். சந்தாதாரர்கள் அபராதத்துடன் மின்கட்டணத்தை கட்டிய பின்பே மின்சார வாரியம் மீண்டும் மின் இணைப்பு வழங்கும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை.

செலுத்துதல்

செலுத்துதல்

மின் இணைப்பு பெற்றுள்ள அனைவருமே, குறிப்பிட்ட கெடு தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த முடிவதில்லை. சிலர் மட்டுமே கெடு வரையிலும் பொறுத்திருந்து தங்களின் மின் கட்டணத்தை பொறுமையாக செலுத்துகின்றனர்.

கெடு
 

கெடு

இறுதி கெடு தேதியன்று பெரும்பாலும் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால், மின் கட்டணம் செலுத்த முடியாமல் போவதுண்டு இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலைகூட ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காகவே பெரும்பாலானோர் முன்கூட்டியே தங்களின் மின் கட்டணத்தை கட்டிவிடுவதுண்டு.

 கூட்டி செலுத்துதல்

கூட்டி செலுத்துதல்

பெரும்பாலான சந்தாதாரர்கள் இணையதளத்திலேயே தங்களின் மின் கட்டணத்தை கட்டிவிடுகின்றனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வெளியூர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட, தங்களின் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி விடுகின்றனர். இதனால், மின் இணைப்பு துண்டிப்பு நெருக்கடியில் இருந்து தப்பி விடுகின்றனர்.

மிச்சம்

மிச்சம்

பெரும்பாலான சந்தாதாரர்கள் முன்கூட்டியே தங்களின் மின் கட்டணத்தை கட்டிவிடுதால், மின்சார வாரியத்திற்கு நேரமும் மிச்சமாகிறது. கூடவே லாபமும் கிடைக்கறது. இதனை உணர்ந்தே தற்போது மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வட்டி

வட்டி

மாதாந்திர மின்சாரக் கணக்கு எடுப்பதற்கு முன்னரே உத்தேசமாக தங்களின் மின் கட்டணத்தை கூடுதலாக செலுத்திவிட்டால், அவர்கள் பயன்பெறும் வகையில், அதற்கு உண்டான லாபத்தை கணக்கிட்டு 3.5 சதவிகித வட்டியாக வழங்க தமிழக மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது, வரும் 2019-20ஆம் நிநியாண்டில் இருந்து இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்பிடவில்லை

குறிப்பிடவில்லை

கூடுதலாக மின் கட்டணத்தை இணையத்தில் செலுத்துவதா அல்லது மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று தான் செலுத்த வேண்டுமா என்பதை மின்சார வாரியம் தெளிவாக குறிப்பிடவில்லை. காரணம் இணையத்தில் முன்கூட்டியே செலுத்தினால் அந்த விபரத்தை மின் கட்டண கணக்கு எடுக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

கூடுதல் டெபாசிட்

கூடுதல் டெபாசிட்

ற்போது முன்கூட்டியே மின் கட்டணத்தை செலுத்தினால் அது முன்கூட்டி செலுத்திய இருப்பாகவே (Additional Deposit) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இது பற்றிய தெளிவான விவரத்தை மின்சார வாரியம் அளிக்க வேண்டியது அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TANGEDOG announced interest 3.5% interest for advance payment

TANGEDGO announced to give 3.5% interest should be paid for electricity bill payment in advance. This will effect from next financial year 2019-20. The Electricity Regulatory Authority announced.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X