மேலும் சர்க்கரை ஆலைகளுக்கு வங்கி வட்டிச் சலுகைகள்..! கடுப்பாகும் ஆஸ்திரேலியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை ஆலைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க மத்திய அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துக் கொள்ளத் தயாராக் இல்லை.

ஆகவே வங்கிகள் தக்கள் சாதாரண வட்டி விகிதத்திலேயே சர்க்கரை ஆலைகளுக்கு கடன் வழங்கும். ஆனால் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் ஒரு பகுதியை அரசே சர்க்கரை ஆலைகள் சார்பாக கொடுக்கும். மீத வட்டித் தொகையை மட்டும் சர்க்கரை ஆலைகள் செலுத்தினால் போதும்

உதாரணத்துக்கு: தமிழகத்தில் இருக்கும் பென்னாடம் சர்க்கரை ஆலை 100 கோடி ரூபாயை 10% வட்டிக்கு ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்துவதாக கடன் வாங்குகிறது. இதில் மத்திய அரசு வட்டிச் சலுகையாக 4% அறிவித்திருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆக 100 கோடி ரூபாய்க்கு 6 கோடி ரூபாயை பென்னாடம் சர்க்கரை ஆலை செலுத்தும், மீதமுள்ள 4 கோடி ரூபாய் வட்டியை மத்திய அரசு பென்னாடம் சர்க்கரை ஆலை சார்பாக செலுத்தும்

இனி பெட்ரோல் விலை விண்ணைத் தொடும்..! காரணம் மக்களவைத் தேர்தல்..! இனி பெட்ரோல் விலை விண்ணைத் தொடும்..! காரணம் மக்களவைத் தேர்தல்..!

வட்டி பிரச்னை

வட்டி பிரச்னை

மேலே சொன்ன படி சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய வட்டித் தொகைக்காக 2,790 கோடி ரூபாயை கூடுதலாக ஒதுக்கி இருக்கிறது மோடி அரசு. ஏற்கனவே மத்திய அரசின் பொருளாதார விவகார கேபினெட் கமிட்டி ஜூன் 2018-ல் 1,332 கோடி ரூபாயை ஒதுக்கி இருந்தது. இப்போது மேலும் 2,790 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. ஆக மொத்தம் சர்க்கரை ஆலைகளின் வட்டிக்கு மட்டும் 4,122 கோடி ரூபாயை ஒதுக்கி சர்வதேச பகைகளை சம்பாதித்திருக்கிறது இந்தியா.

மொத்த கடன் தொகை

மொத்த கடன் தொகை

இந்தியாவில் இயங்கும் சர்க்கரை ஆலைகளுக்கு 12,900 கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க இந்திய வங்கிகள் முன் வந்திருக்கிறார்கள். ஏன் சர்க்கரை ஆலைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் எனக் கேட்டால் எத்தனால் உற்பத்தியை அதிகரித்தான் எனச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. ஆனால் சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் இந்தியா மீது வழக்கு தொடுத்திருக்கிறது.

புகார் ஏன்
 

புகார் ஏன்

World Trade Organisation-ல் ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் இந்தியா மீது ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு சொல்லியும் இந்தியா தன் நாட்டில் இயங்கும் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியத் தொகை, வட்டி குறைப்பு போன்றவைகளை நிறுத்தவில்லை.

சர்வதேச விலைச் சரிவு

சர்வதேச விலைச் சரிவு

இதனால் தான் இந்திய சர்க்கரை விலை குறைவாகவும், ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலின் சர்க்கரை விலை அதிகமாகவும் விற்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய மற்றும் பிரேசில் சர்க்கரைகளுக்கான டிமாண்ட் கடுமையாக சரிந்துவிட்டதாம். எனவே இந்திய கரும்பு விவசாயிகளுக்கு இந்திய அரசு கொடுக்கும் மானியங்களை நிறுத்தக் கோரி வழக்கு உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organisation) வழக்கு தொடுத்திருக்கிறது.

ஆஸ்திரேலிய பொருளாதாரம்

ஆஸ்திரேலிய பொருளாதாரம்

சர்க்கரையை நம்பி ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஆஸ்திரேலிய மக்களின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கிறது. அந்த மக்களின் வேலை வாய்ப்புகள் எல்லாமே சர்க்கரை விலையைப் பொறுத்து தான் அமையும். ஆக இந்த ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் ஒரு பகுதியினரைக் காக்கவும், வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் நாங்கள் இந்தியா மீது புகார் கொடுத்திருக்கிறோம் என்கிறார் ஆஸ்திரேலிய வர்த்தக துறை அமைச்சர் மார்க்.

சமத்துவம் இல்லை

சமத்துவம் இல்லை

அதோடு "இந்திய விவசாயிகள் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பிரச்னை இல்லை, ஆனால் அரசு சர்க்கரை மில்களுக்கும், விவசாயிகளுக்கும் மானியம் கொடுத்து செயற்கையாக குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வைப்பது தான் பிரச்னை" எனவும் ஆஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் மார்க் விளக்கி இருக்கிறார். உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து இந்தியா மானியத்தை ரத்து செய்யச் சொல்லியோ அல்லது கொடுக்கும் மானியத்தை வேறு வகைகளில் கொடுக்கும் படியோ சொல்லும் என ஆஸ்திரேலியாவும் பிரேசிலும் எதிர்பார்க்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian sanctioned rupees 4122 crore interest subvention for sugar mills australia filed a case in WTO

indian sanctioned rupees 4122 crore interest subvention for sugar mills australia filed a case in wto
Story first published: Thursday, March 7, 2019, 16:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X