ரூ.35.74 கோடியாக அதிகரித்த திமுகவின் வருமானம் - ரூ.12.72 கோடியாக குறைந்த அதிமுக வருமானம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: திமுகவின் ஆண்டு வருமானம் 2016-17ஆம் ஆண்டில் ரூ.3.78 கோடியாக இருந்த நிலையில், 2017-18ஆம் நிதியாண்டில் அது ரூ.35.74 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 845.71% அதிகமாகும். அதிமுகவின் ஆண்டு வருமானம் ரூ.12.72 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 74 சதவிகிதம் குறைவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்கள் வருமான விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கும். மாநில கட்சிகள் சாா்பில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட கட்சிகளின் வருவாய் தொடா்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. கட்சியில் சோ்வதற்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பப் படிவத்தை புதுப்பித்தல் மற்றும் கட்சி சாா்பில் முதலீடு செய்யப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் நன்கொடை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வருவாய் கணக்கிடப்படுகிறது.

முன்பை போல இப்போது வரி கட்டாமல் தொழில் செய்ய இயலாது இதே நிலை தான் அரசியல் கட்சிகளுக்கும் இதுவரை மிகவும் குறைவான தொகையை கணக்கு காட்டி வந்த நிலையில் , இப்போது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பயந்து ஒரு அளவிற்கு உண்மையான வருமானத்தை அனைத்து கட்சிகளும் காட்ட துவங்கியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக பணத்தை பெற கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதனுடன் பணத்தை காசோலை மற்றும் வங்கி கணக்கின் மூலம் பெரும் பணத்தை பெறமுடியும் எனவே கணக்கிற்குள் வந்துவிடுவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வருமானத்தை முறையாக கணக்கு காட்டி விடுகின்றனர்.

பாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்களில் நாடு முழுவதும் 3.32 லட்சம் வேலை மட்டுமே.. தமிழ்நாட்டில் 18210 பாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்களில் நாடு முழுவதும் 3.32 லட்சம் வேலை மட்டுமே.. தமிழ்நாட்டில் 18210

அரசியல் கட்சிகளின் வருமானம்

அரசியல் கட்சிகளின் வருமானம்

ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனும் என்ஜிஓ, மாநில அரசியல் கட்சிகளின் வருமான விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் 37 மாநில கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.237.27 கோடியாகும். இவற்றில் முதல் மூன்று இடங்களில் உள்ள கட்சிகளின் (சமாஜ்வாதி, திமுக, டிஆர்எஸ்) மொத்த வருமானம் 110.21 கோடி ஆகும்.

சமாஜ்வாதி கட்சி செலவு

சமாஜ்வாதி கட்சி செலவு

அதேசமயம் 2017-18 ஆம் நிதியாண்டில் கட்சிகள் செய்துள்ள செலவில் சமாஜ்வாதி கட்சி தான் முதலிடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 207-18-ஆம் நிதியாண்டில் மொத்தமாக செலவு செய்துள்ள தொகை ரூ.34.53 கோடி ஆகும்.

 

 

ரூ.47.19 கோடி வருமானம்

ரூ.47.19 கோடி வருமானம்

மாநில கட்சிகளின் வருமான பட்டியல்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.47.19 கோடியாக இருந்தது. கட்சிகள் செய்துள்ள செலவுகள் பட்டியலில் சமாஜ்வாதி கட்சிதான் முதலில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 207-18ஆம் நிதியாண்டில் மொத்தமாக செலவு செய்துள்ள தொகை ரூ.34.53 கோடி ஆகும். இதற்கு அடுத்தப்படியாக திமுகதான் உள்ளது. திமுக செலவு செய்துள்ள தொகை ரூ.27.47 கோடி ஆகும்.

ரூ.35.748 கோடி வருமானம்

ரூ.35.748 கோடி வருமானம்

கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக ரூ.35.748 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் திமுகவின் வருமானம் வெறும் 3.78 கோடியாக இருந்த நிலையில் அதுவே 2017-18ஆம் நிதியாண்டில் 35.74 கோடியாக உயர்ந்துள்ளது. இது 845.71 சதவிகித உயர்வு ஆகும். ஆட்சியில் இல்லாத திமுகவிற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் எழுந்துந்துள்ளது.

அதிமுக வருமானம் சரிவு

அதிமுக வருமானம் சரிவு

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிமுகவிற்கு வருமானம் கரைபுரண்டு வரும். கட்சிக்கு ஆட்களை சேர்ப்பது நிதியை பெருக்குவது என பல வழிகளில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் கட்சி பிரிந்தது. பின்னர் இணைந்தது. இதனால் கட்சிக்கு நிதி வருவாய் குறைந்து வருகின்றது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.12.72 கோடி வருமானம் பெற்றது தெரியவந்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் அதிமுக பெற்ற வருமானம் ரூபாய் 48.78 கோடியாக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் அதிமுகவின் வருமானம் 74 சதவிகிதம் சரிவு கண்டுள்ளது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dmk aiadmk திமுக
English summary

DMK Richest Party in Tamil Nadu in 2018

The report analysed the income and expenditure of 37 regional political parties for the financial year 2017-18. According to the ADR analysis, the total income of these parties for 2017-18 was Rs 237.27crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X