திருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி..? 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த பிப்ரவரி 08 2019-ம் தேதி தொடங்கி, மார்ச் 09, 2019 வரையான 30 நாட்களில் 157 திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறாராம். இதற்காக இந்தியா முழுமைக்கும் சுமார் 30 முறை பயணத்திருக்கிறாராம்.

2014-ம் ஆண்டின் முடிவில் குறிப்பாக தேர்தலுக்கு முன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இப்படி மோடி போல ஓடோடி எல்லாம் திட்டங்களை திறந்து வைக்கவில்லையாம்.

தேர்தல் நேரம் வந்தால் சின்ராச கையில புடிக்க முடியாது என்பது போல ஓடோடி மக்களுக்கு பயண் தரும் திட்டங்களைத் தொடங்கி வருகிறார் மோடி. இந்த வேகத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே காட்டி இருந்தால் இன்னும் எத்தனையோ திட்டங்களைத் தொடங்கி இருக்கலாமே..? என்கிறார்கள் நெட்டிசன்கள். சரி மோடிஜி தொடங்கிய திட்டங்களைப் பார்ப்போம்.

ஜனவரி - பிப்ரவரி காலங்களில்

ஜனவரி - பிப்ரவரி காலங்களில்

ஜனவரி 08 2019 தொடங்கி பிப்ரவரி 7 2019 வரையான காலங்களில் மோடி தலைமையிலான் ஆரசு 57 திட்டங்களைத் தொடங்கி இருக்கிறது. ஆனால் அடுத்த மாதத்தில் சுமார் 3 மடங்கு அதிக எண்ணிக்கையிலான திட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்.

தேர்தல் விதிமுறைகள்

தேர்தல் விதிமுறைகள்

தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டால் எந்த ஒரு கட்சியும், அரசின் எந்த பெரிய திட்டங்களையும் அறிவிக்க முடியாது. அதையும் மீறி அறிவிப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது எனவே தான் மோடிஜி கடந்த 30 நாட்களில் (பிப்ரவரி 08 முதல் மார்ச் 9 வரை) பறந்து பறந்து பல மாநிலங்களிலும் முகத்தைக் காட்டி இருக்கிறார்.

என்ன திட்டங்கள்

என்ன திட்டங்கள்

கடந்த 30 நாட்களில் "நெசுஞ்சாலைத் திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள் திட்டம், மருத்துவமனைகள், பள்ளிகள், கேஸ் பைப்லைன் திட்டங்கள், புதிய விமான நிலையங்கள், சாக்கடை நீர் மேலாண்மைத் திட்டம், மின் உற்பத்தி மையங்கள்" என சின்னதும் பெரிதுமாக பல துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார் மோடி.

சின்ன திட்டங்கள்

சின்ன திட்டங்கள்

இந்த 157 திட்டங்களில் சுமார் 140 திட்டங்கள் எல்லாம் மாநில முதல்வர் கூட வந்து திறக்கும் அளவுக்கு பெரிய திட்டங்கள் கிடையாது. அந்த ஊரின் மாவட்ட ஆட்சித் தலைவரே திட்டத்தை தொடங்கிவிடலாம். அந்த அளவுக்குச் சின்ன திட்டங்களைக் கூட மோடி தவற விடாமல் விமானம் ஏறி வந்து திட்டங்களைத் தொடங்கி வைத்து, கூட்டணிக் கட்சிகளோடு பேசி ஓட்டு கேட்டிருக்கிறார்.

சின்ன திட்டங்கள்

சின்ன திட்டங்கள்

சென்னை மெட்ரோவின் ஒரு பகுதியை மட்டும் திறப்பது, கர்நாடகத்தின் சிக்கஜூர் - மாயகொண்டா பிரிவில் கூடுதல் ரயில் பாதையை அமைக்கும் திட்டம், விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையான நெடுஞ்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவது, கரைப்பேட்டை முதல் வாலாஜா வரையான நெடுஞ்ச்சாலைகளை ஆறு வழிப்பாதையாக மாற்றுவது போன்ற தக்குநூண்டு திட்டங்களைக் கூட வான்டடாக மோடியே வந்து திறந்து வைத்திருக்கிறார்.

இன்னும் கீழே

இன்னும் கீழே

மேலே சொன்ன திட்டங்களாவது பரவாயில்லை ஓரளவுக்கு முதலமைச்சர் வந்து திறக்கும் திட்டங்களாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காஸியாபாத் நகராட்சி அலுவலகத்தால் திறக்கப்பட வேண்டிய கோ சாலாவுக்கு மோடியே வந்து அடிக்கல் நாட்டியது, 37 கிலோ மீட்டர் சாக்கடை நீர் மேலாண்மைப் பாதை போன்றவைகள் எல்லாம் திறக்க ஏன் மோடியே வர வேண்டும் எனக் கேட்டால் ஓட்டு வங்கி என்கிறார்கள்.

நம்ம காசுதான..?

நம்ம காசுதான..?

நம் பணத்திலேயே விமானம் ஏறி நம் வரிப் பனத்திலேயே கட்டப் பட வேண்டிய அல்லது கட்டும் திட்டங்களை திறந்து நம்மிடம் ஓட்டு வாங்கும் மோடிஜி ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

prime minister narendra modi had opened 157 plans and schemes in the last 30 days

prime minister narendra modi had opened 157 plans and schemes in the last 30 days
Story first published: Sunday, March 10, 2019, 14:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X