மின்சாரம் இல்லாததால் 15 பேர் மரணம், வெனிசுலாவில் நடக்கும் கோரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கராகஸ்: நல்ல கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் தற்போது கடுமையானபொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

 

கச்சா எண்ணெய்க்கு போதுமான நல்ல விலை கிடைக்காதது, விலை வாசி விண்னைத் தொட்ட நிலை, தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழல் போன்ற காரணங்களால் அந்நாட்டு பொருளாதாரமே முற்றிலும் சிதைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியது. மின்சாரம் இல்லாத ஒவ்வொரு நிமிடத்தையும் அரசு அதிகாரிகள் துப்பாக்கி முனையில் புரட்சியாளர்களை அடக்கி வருகிறார்களாம்.

2050 கோடி ரூபாய் கடன் வாங்கிய ஜெட் ஏர்வேஸ்..! குதூகலத்தில் நிர்வாகம்

பதிலடி

பதிலடி

அரசு கலவரத்தை அடக்குவது ஒரு புறம் இருக்கு மறு பக்கம் வியாபாரிகள், பள்ளி மற்றும்ம் கல்லூரி செல்லும் மாணவர்கள் கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் தங்கள் வீட்டில் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பு வலுப்பு

எதிர்ப்பு வலுப்பு

மற்றொரு புறம் அதிபர் நிகோலஸ் மதுரோ மீதான சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு வலுபெற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் இந்த மின் இணைப்பு துண்டிப்பின் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டுகிறார்.

மின் இணைப்பு இல்லை

மின் இணைப்பு இல்லை

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் இன்னலை அனுபவித்து வருகிறார்கள்.

டயாலிசிஸ்
 

டயாலிசிஸ்

மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டயாலிசிஸ் சிகிச்சை பெறமுடியாமல் 2 நாட்களில் 15-க்கு மேற்பட்ட நோயாளிகள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், மின் வினியோகம் கூடிய விரைவில் சீரடையவில்லை, இதே நிலை நீடித்தால் அவர்கள் உயிர் இழப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார உரிமை குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 dead in Venezuela due to power cut

15 dead in Venezuela due to power cut
Story first published: Monday, March 11, 2019, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X