ஒரு வாக்காளருக்கு தேர்தல் ஆணையம் செய்யும் செலவு 60 பைசா டூ 50 ரூபாய்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் அள்ளி இரைத்து ஆட்சிக்கு வருவது நமக்குத் தெரியும்.

 

ஆனால் ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் எவ்வளவு செலவு செய்கிறது எனத் தெரியுமா..?

ஒரு வாக்காளருக்கு எவ்வளவு செலவு செய்து ஒரு மக்களவைத் தேர்தலை நடத்துகிறது எனத் தெரியுமா..?

மக்களின் கவலைகளை புறக்கணித்தால் முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சி வெடிக்கும் - ரகுராம் ராஜன்

1952

1952

தேர்தல் தேதி: 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை

மொத்த சீட்டுக்கள்: 489 சீட்டுக்கள்

போட்டியிட்ட வேட்பாளர்கள்: 1849

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 10.45 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 17.42 கோடி

ஒரு வாக்காளருக்கு செய்த செலவு: 60 பைசா

சுருக்கம்: காங்கிரஸ் 364 / 489 பெற்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. நேரு பிரதமரானார்.

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு அடுத்த படியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது சுயேட்சைகள் தான் 37 இடங்களில் வென்றார்கள்.

அவர்களுக்குப் பிறகு தான் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வென்றது.

இந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வென்றது.

1957
 

1957

தேர்தல் தேதி: 24 பிப்ரவரி 1957 - 14 மார்ச் 1957

மொத்த சீட்டுக்கள்: 494 சீட்டுக்கள்

போட்டியிட்ட வேட்பாளர்கள்:

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 5.9 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 19.37 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவு: 30 பைசா

சுருக்கம்: காங்கிரஸ் 371 / 494 வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைத்தது. மீண்டும் நேருவே பிரதமரானார்.

இந்த தேர்தலிலும் காங்கிரஸுக்கு அடுத்த படியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது சுயேட்சைகள் தான். 1952 தேர்தலை விட 4 இடங்களில் கூடுதல் வெற்றி. மொத்தம் 41 இடங்களில் வென்றார்கள். இந்திய மக்களவைத் தேர்தல் சரித்திரத்திலேயே சுயேட்சைகள் அதிகம் வென்றது இந்த தேர்தலில் தான்.

கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களில் வென்றது.

இந்த தேர்தலில் பாஜக (பாரதிய ஜன சங்) 4 இடங்களில் வென்றது.

1962

1962

தேர்தல் தேதி: 19 பிப்ரவரி 1962 - 25 பிப்ரவரி 1962

மொத்த சீட்டுக்கள்: 494 சீட்டுக்கள்

போட்டியிட்ட வேட்பாளர்கள்:

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 7.32 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 21.63 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவு: 30 பைசா

சுருக்கம்: மீண்டும் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை. 361 / 494 காங்கிரஸ். நேரு பிரதமர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு 29 இடங்கள், பாஜக (பாரதிய ஜன சங்) 14 இடங்களில் வெற்றி பெற்றார்கள். இந்த முறை சுயேட்சைகளுக்கு 20 இடங்களில் மட்டுமே வெற்றி. தமிழகத்தில் இருந்து திமுக 7 சீட்டுகளில் வென்று பாராளுமன்ற செல்ல வைத்த தேர்தல் இது.

1967

1967

தேர்தல் தேதி: 17 பிப்ரவரி 1967 - 21 மார்ச் 1967

மொத்த சீட்டுக்கள்: 520 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 10.80 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 25.02 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 40 பைசா

சுருக்கம்: 283 / 520 சீட்டுக்கள் மட்டுமே காங்கிரஸுக்கு வெற்றி. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைத்தது காங்கிரஸுக்கு. முத்ல முறையாக இந்திரா காந்தி தேர்தலில் நின்று பிரதமரானார். ராஜாஜி தலைமையிலான சுவதந்த்ரா கட்சிக்கு 44, பாஜக (பாரதிய ஜன சங்) - 35 இடங்களிலும், திமுக - 25 இடங்களில் வென்ற அடுத்த மூன்று இடங்களைப் பிடித்தது.

1971

1971

தேர்தல் தேதி: 01 மார்ச் 1971 - 10 மார்ச் 1971

மொத்த சீட்டுக்கள்: 518 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 11.61 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 27.42 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 42 பைசா

சுருக்கம்: காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு காங்கிரஸ் (R) காங்கிரஸ் (O) என பிரிந்து தேர்தலைச் சந்தித்தார்கள். காங்கிரஸ் (R) 352 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதன் பின் தான் காங்கிரஸ் ஒரே கட்சியாக இணைந்தது. இந்திரா காந்தி பிரதமரானார்.

கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 25 இடங்களிலும், கம்யூனிஸ்ட் 23 இடங்களிலும், திமுக 23 இடங்களிலும், பாஜக (பாரதிய ஜன சங்) 22 இடங்களிலும் வென்றார்கள்.

இந்த தேர்தலில் ரேபரேலி சோசலிஸ்ட் கட்சியில் இருந்த ராஜ் நாராயனை எதிர்த்து போட்டி இட்ட இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என அறிவித்தது அலஹாபாத் உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக இந்திரா காந்தி இந்திய அரசியல் சரித்திரப் புகழ் எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார்.

1977

1977

தேர்தல் தேதி: 16 மார்ச் 1977 - 20 மார்ச் 1977

மொத்த சீட்டுக்கள்: 542 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 23.04 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 32.11 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 72 பைசா

சுருக்கம்: இந்திய தேர்தல் சரித்திரத்தில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி அமைத்தது இந்த முறைதான். காங்கிரஸ் 153 / 542 பெற்றது. காங்கிரஸ். அதிமுக, கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சேர்த்தும் 188 இடங்களில் மட்டுமே வென்றது. ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

காங்கிரஸின் கோட்டையான ரேபரேலீயில் எந்த ராஜ் நாராயணனை வீழ்த்தி 1971-ல் பிரதமரானாரோ அதே தொகுதியில் அதே ராஜ் நாராயணனிடம் தோற்றார் இந்திரா காந்தி. முதல் முறை ரே பரேலியில் காங்கிரஸ் அல்லாத கட்சி வென்றது. எம்ஜிஆர் தனியாக அதிமுக தொடங்கி சந்தித்த முதல் மக்களவைத் தேர்தல் இது.

1980

1980

தேர்தல் தேதி: 03 ஜனவரி 1980 - 06 ஜனவரி 1980

மொத்த சீட்டுக்கள்: 542 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 54.77 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 35.62 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 154 பைசா

சுருக்கம்: மீண்டும் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை. 353 / 542. காங்கிரஸைத் தொடர்ந்து ஜனதா தளம் 41 இடங்களிலும், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 37 இடங்களிலும் வென்றன. மீண்டும் இந்திரா பிரதமரானார்.

இந்த மக்களவை ஆட்சிக் காலம் முடியும் முன்பே ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தி சீக்கிய வழிபாட்டு தளங்களில் ஒளிந்து கொண்டிருந்த பிந்த்ரன் வாலேவைச் சுட்டுக் கொள்கிறார் இந்திரா காந்தி. அதற்கு பலி தீர்க்கும் விதத்தில் இந்திரா காந்தியின் சீக்கிய மெய்க் காவலர்களே அவரைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

1984

1984

தேர்தல் தேதி: 24 டிசம்பர் 1984 - 28 டிசம்பர் 1984

மொத்த சீட்டுக்கள்: 541 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 81.51 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 40.03 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 200 பைசா

சுருக்கம்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக 400 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ். அது இந்த 1984 தேர்தலில் நடந்தது 541-ல் 404-ல் வெற்றி. ராஜிவ் காந்தி பிரதமரானார். இந்திரா காந்தியின் மரண அலை மொத்தமும் வாக்குகளாக மாறியது.

என் டி ராம்மாராவ் இந்த தேர்தலில் அதிக சீட்டுகள் வென்றார். 30 சீட்டுக்கள்.

1989

1989

தேர்தல் தேதி: 22 நவம்பர் 1989 - 28 நவம்பர் 1989

மொத்த சீட்டுக்கள்: 545 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 154.22 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 49.89 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 301 பைசா

சுருக்கம்: ராஜிவ் காந்தியின் 1984 - 89 வரையான ஆட்சிக் காலத்தில் வெளியான ஊழல் குற்றட்டாச்சுகளால் எதிர் கட்சி வலுவடைந்தது. ராஜிவ் காந்தி அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த விபி சிங்கே எதிர் கட்சிக்கு தலைமை தாங்கி ஜனதா தளம் தொடங்கினார். பிரதமரும் ஆனார்.

முதல் தொங்கு பாராளூமன்றம் அமைத்து ஆட்சி செய்தவர் இவர் தான். பாபர் மசூதிக்குள் ராமர் வந்த கதையைச் சொல்லி பாஜக 85 இடங்களில் வென்றதும் இதுவே முதல் முறை. இதற்கு முன் நடந்த மக்களவைத் தேர்தல்களில் 50 சீட்டுக்களைக் கூட தாண்டாத பாஜக முதல் முறை இந்தியாவையே மதத்தில் பெயரால் ஆளலாம் என முடிவுக்கு வந்தது. பாஜக ராமர் கோவிலை கெட்டியாக பிடிக்க இந்த வெற்றியின் சுவையும் ஒரு காரணம்.

1991

1991

தேர்தல் தேதி: 20 மே 1991 - 28 மே 1991

மொத்த சீட்டுக்கள்: 545 சீட்டுக்கள்

தேர்தல் ஆணையம் செலவு செய்த நிதி: 359.10 கோடி ரூபாய்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 41.15 கோடி பேர்

ஒரு வாக்காளருக்கு செய்த செலவுகள்: 700 பைசா (7 ரூபாய்)

சுருக்கம்: விபி சிங்கின் ஆட்சிக்கு சரியான ஆதரவு இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. உடனே மக்களவைத் தேர்தலும் நடந்தது. ராஜிவ் காந்தி மரணம் அலை கொஞ்சம் வேலை செய்தது. மீண்டும் காங்கிரஸ் அதிக சீட்டுக்களை வென்றது ஆனால் தனிப் பெரும்பான்மை பெற வில்லை. 243 / 545 சீட்டுகள் வென்றார்கள்.

காங்கிரஸ்ஸோடு இடது சாரிக்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நரசிம்ம ராவை பிரதமராக்கினர். மீண்டும் ராமர் கோவிலைக் கட்டுவேன் எனச் சொல்லி 120 இடங்களில் வென்றது பாஜக.

1996

1996

11-வது பாராளுமன்ற தேர்தல் 1996-ஆம் ஆண்டில் நடக்கும்போது மொத்த செலவு ரூ.597.34 கோடியாகும். மொத்த வாக்காளர்கள் 59,25,72,288 ஆக இருந்தது. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.10 ஆக இருந்தது. வாஜ்பாய், தேவ கெளடா, குஜ்ரால் என 3 பிரதமர்களைக் கொண்டு வந்த தேர்தல்.

இந்த தேர்தலில் பாஜக 161 சீட்டுக்களை வென்று மீண்டும் தன்னை இந்திய அரசியலில் வலு படுத்திக் கொண்டது. காரனம் பாபர் மசூதி இடிப்பு. ஹிந்து மாநிலங்களில் ஓட்டுக்களை அள்ளிக் கொடுத்தது.

1998

1998

12-வது பாராளுமன்ற தேர்தல் 1998-ஆம் ஆண்டு நடக்கும்போது மொத்த செலவு ரூ.666.22 கோடியாக இருந்தது. மொத்த வாக்காளர்கள் 60,58,80,192 ஆக இருந்தது. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.11 ஆக இருந்தது. இந்த தேர்தலில் பாஜக 182 சீட்டுக்களை வென்று மீண்டும் தன்னை இந்திய அரசியலில் இன்னும் அழுத்தமாக வலு படுத்திக் கொண்டது.

அதிமுகவின் ஆதரவில் மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். ஒரு கட்டத்தில் மத்திக்கும் மாநிலத்துக்கும் கசப்பு ஏற்பட ஆதரவை வாபஸ் வாங்கி வாஜ்பாயை காலி செய்தார் ஜெயலலிதா.

1999

1999

13-வது பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டே 1999-ல் நடைபெற்றது. இதற்கான செலவு ரூ.947.68 கோடி ரூபாயாகும். மொத்த வாக்காளர்கள் 61,95,36,847 ஆக இருந்தது. சராசரியாக வாக்காளருக்கு ஆகும் செலவு ரூ.15 ஆக இருந்தது.

இந்த தேர்தலே 1998 தேர்தலில் அழுத்தமான ஆட்சி அமைக்காத அரசினால் ஏற்பட்ட பிரச்னை. மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் பட்டு பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது.

இந்த முறை திமுக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு 6 வருடங்கள் நிலையாக பிரதமராக அதவி வகித்தார் வாஜ்பாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

election commission is spending rs 46 for each voter in lok shaba election

election commission is spending rs 46 for each voter in lok shaba election
Story first published: Wednesday, March 13, 2019, 16:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X