சென்னை: தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இறங்கத் தொடங்கியுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.20 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.20 காசுகளாகவும் உள்ளது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக ஏறாது என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கி விட்டனர். கடைசி கட்டத் தேர்தல் நாளான மே மாதம் 19ஆம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் விலையில் அநேகமாக எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.
தேர்தல் நடக்கும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை ஏறாது என்பது சமீப கால உண்மையாகும். பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினால் அது மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விலையில் கைவைத்து எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க துணியாது என வாகன ஓட்டிகள் நம்புகின்றனர்.
எண்ணெய் விலை நிர்ணயம்
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆண்டபோது பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பொதுத்துறை நிறவனங்களிடம் ஒப்படைத்து விட்டு விலகிக் கொண்டது. பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக ஏட்டிக்கு போட்டியாக, சர்வதேச சந்தையைப் போல தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது.
தினசரி விலை மாற்றம்
பொதுத்துறை நிறுவனங்கள் வசம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமை வந்தவுடன், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் சம்பவம் நடந்தால் தேர்தல் நடந்த முடியும் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது.
லோக்சபா தேர்தல்
மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், அதுவரைக்கும் ஏறாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை மளமளவென ஏற ஆரம்பித்துவிடும்.அதுபோலவே கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக சுமார் 25 நாட்கள் வரையிலும் பெட்ரோல், டீசல் விலை ஏற மாட்டேன் என்று அடம்பிடித்து நின்றுவிட்டது. தேர்தல் நடந்து முடிந்தவுடன் மீண்டும் பழைய கதையாகிவிட்டது. அதுபோலவே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 4 மாநில சட்டசபை தேர்தலுக்காகவும் பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஏறத் தொடங்கியது.
பெட்ரோல் டீசல் விலை ஏறாது
தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சமீப நாட்களாக ஏறிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை ஏற வழி இல்லாமல் முட்டுச் சந்தில் நின்றது போல நின்றுவிட்டு மீண்டும் திரும்பி இறங்க யோசித்துக்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலின் கடைசி கட்டமாக மே மாதம் 19ஆம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் ஏறாது, இறங்கினாலும் 0.05 பைசா அல்லது 0.10 பைசா என்றுதான் குறையும். அது வரையிலும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சற்று நிம்மதிதான்.
அதிரடி மாற்றம் இல்லை
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் அதிரடியான மாற்றங்கள் எதுவும் இல்லை. சென்னையில், பெட்ரோல் லிட்டர் ரூ. 75. 20 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ. 71.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications