உலகையே கண்காணிக்கத் துடிக்கும் China..! தன் இடம் பறிபோகும் வேகத்தில் கதறும் அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: நேற்றோடு Internet கண்டு பிடித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது Internet-ஐப் பயன்படுத்தி இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். யாருடைய Internet இது என நம்மை நாமே கேட்டால் என்ன பதில் வரும்..? நம் நெட்வொர்க்கினுடையது என நாம் சொல்கிறோம்.

 

ஆனால் china அப்படிச் சொல்ல வில்லை. நம் நெட்வொர்க்கில் இருந்து நாம் இணையத்தில் தேடும் டேட்டா எப்படியோ கூகுள், யாஹூ, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என எல்லாவற்றிலும் ஒரு அமெரிக்கன் டச் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆகவே அது அமெரிக்கர்களின் Internet என்கிறார்கள்.

ஆக அமெரிக்கா உலக Internet-ஐ ஆளக் கூடாது, என அமைதியாக போர்க் கொடி தூக்கி இருக்கிறது china. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் இந்த இணையத் தகவல்கள் கடந்து வரும் விதம்.

இந்தியாவில் Pilot வேலைக்கு ஆள் இல்லை..! தடுமாறும் விமான நிறுவனங்கள்..!

இப்படித் தான் விவரங்கள் கடக்கிறது

இப்படித் தான் விவரங்கள் கடக்கிறது

உலகின் 99 சதவிகித Internet விவரங்கள் கடலுக்கு அடியில் இருக்கும் ஃபபர் ஆப்டிக் (Fibre Optic) கேபிள்கள் வழியாகத் தான் கடந்து வருகிறது. இன்றைய தேதிக்கு சுமார் 380 ஃபபர் ஆப்டிக் கேபிள்கள் தான் உலகை Internet-ல் இணைத்திருக்கின்றன. உலகில் அண்டார்டிக் பெருங்கடல் தவிர மற்ற நான்கு பெருங்கடலுக்கடியிலும் இந்த ஃபபர் ஆப்டிக் கேபிள்கள் வழியாக தரவுகள் பறந்து கொண்டே தான் இருக்கின்றன.

Front End நிறுவனங்கள்
 

Front End நிறுவனங்கள்

இப்போது உலகின் மிகப் பெரிய சர்ச் என்ஜின் எது என்றால்... கூகுளைச் சொல்வோம். சரி தான். கூகுளுக்கு தான் முதலிடம். ஆக யார் எந்த தரவைத் தேட வேண்டும் என்றாலும் கூகுளுக்கு வருவார்கள். ஆக கூகுள் வலைப் பக்கத்துக்கு போக வேண்டும் என்றால் கூட அமெரிக்க சர்வர்களில் இருந்து தான் தரவுகள் நமக்கு வந்தாக வேண்டும். இப்படி கூகுள் வழியாக நாம் தேடும் எல்லா விஷயங்களுமே அமெரிக்க சர்வர் வழியாகத் தேடுவதாகத் தான் சீனா பார்க்கிறாது. நான் ஒரு விஷயத்தை தேடுகிறேன் என்றால் என் தேடுதல் - கூகுல் சர்வர் - நான் தேடிய வலைதள விவரம் இப்படித் தான் தேடப் படுகிறது. ஒரு விஷயத்தை அனுப்புகிறேன் என்றால் நான் அனுப்பும் செய்தி - கூகுள் சர்வர் - சென்று சேர வேண்டிய நபர் என எல்லாவற்றிலும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் front end அப்ளிகேஷன்களாக இருந்து தரவுகளை வேவு பார்க்கின்றன என சீனா சொல்கிறது.

கேபிள்களுமா..?

கேபிள்களுமா..?

சரி தேடும் சர்ச் இன்ஜின் தான் அமெரிக்க நிறுவனம் என்றால், அது கடந்து வரும் கேபிள்களும் அமெரிக்க நிறுவனங்களுடையது தான். ஆக ஃபபர் ஆப்டிக் கேபிள் வியாபாரத்திலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்கு ஒரு உதாரணம் சப்காம் (Sunbcom) என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக ஒரு டெலிகாம் நிறுவனம் அல்லது Internet சார்ந்த நிறுவனம் இந்த கேபில் நிறுவனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் தான் அவர்களின் சேவையை முழுமையாக கொடுக்க முடியும். எனவே ஃபேஸ்புக், கூக்குள் தொடங்கி சாதாரண டெலிகாம் ஆப்பரேட்டர்கள் வரை இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தான் தங்களில் Internet வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள்.

போட்டிக்கு வரும் சீனா

போட்டிக்கு வரும் சீனா

இப்போது சீனாவின் ஹுவாய் (Huawei) நிறுவனமும் கடலுக்கடியிலோ, தரைக்கு அடியிலோ கேபிள்களைப் பதிக்க நானும் வருகிறேன் என அனைத்து நாடுகளோடும் பேசி வருகிறது. சீனாவின் BRI - Belt and Road Initiative பற்றி படித்திருப்பீர்கள். அந்த திட்டத்தில் டேட்டா ஹைவே என்பதையும் சேர்த்திருக்கிறது சீனா.

சீனாவின் டேட்டா ஹைவே

சீனாவின் டேட்டா ஹைவே

முதல் கட்டமாக பாகிஸ்தானின் கதார் (Gwadar) துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என செய்சில்ஸ் (Seychelles) வரை தன் கேபிள்களை ஹுவாய் மூலம் பதிக்க திட்டமிட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டது சீனா. அதோடு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளும், ஆஸ்திரேலியாவுக்குள்ளும் கூட இந்த Internet கேபிள் பிசினஸ் தொடர்பாக பேசி வருகிறது சீனா.

பதறும் அமெரிக்கா

பதறும் அமெரிக்கா

சீனர்களை உள்ளே விட்டால் அவர்கள் உலகத்தையே கண்காணிக்கத் தொடங்கிவிடுவார்கள் என பதறுகிறது அமெரிக்கா. இது சாத்தியமா என்றால் அதற்கு சாட்சியமாக எட்வர்ட் ஸ்நோடென் வந்து நிற்கிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து எல்லா உலக நாடுகளையும் அனுமதி இல்லாமல் கண்காணித்து வருகிறது என உலகுக்குச் சொன்ன மனிதர் இப்படி கேபிள்கள் வழியாக கடந்து செல்லும் டேட்டாக்களை ஹேக் செய்து தான் கண்டுபிடித்து உலகுக்குச் சொனனார்.

5 ஜி பெயரில் புகும் சீனா

5 ஜி பெயரில் புகும் சீனா

இப்போது இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் அடுத்த தலைமுறை அலைக்கற்றைக்காக காத்திருக்கிறார்கள். அந்த 5ஜி சேவையை மேம்படுத்தும் பணிகளில் சீன நிறுவனங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிடம் பேசி வருகிறது அமெரிக்கா.

எதிர்க்கும் சீனா

எதிர்க்கும் சீனா

ஆக யார் கேபிள் போட்டாலும் அவர்களால் ஒரு நாட்டில் இருந்து போகும் விவரங்களையோ அல்லது வரும் விவரங்களையோ கண்காணிக்க முடியும் எனும் போது உளவுத் துறையின் வேலை பாதியாக குறைந்து விடுகிறது தானே. ஆகவே இந்த வசதியே அமெரிக்கா மட்டுமே அனுபவிக்க விரும்புகிறது. ஆனால் சீனாவோ நான் கேபிள் போட்டு சேவை செய்தால் உனக்கு என்ன..? என அமெரிக்காவை மதிக்காமல் 5ஜி பெயரில் உலகின் முக்கியமான நாடுகளில் கேபிள் போட துடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

china wants to rule the world internet in next few years by laying fibre optics

china wants to rule the world internet in next few years by laying fibre optics
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X