13,000 கோடி ரூபாய் கடனை அடைக்க சொத்துக்களை விற்கும் Zee Entertainment..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: Zee Entertainment நிறுவனம் உடனடியாக 13,000 கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வரும் மார்ச் 31, 2019-க்குள் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

 

இந்த கடனை அடைக்க பல வழிகளிலும் தங்களால் முடிந்தவைகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் சேனல்களில் இருந்து அவ்வளவு பெரிய லாபம் வராத நிலையில் தங்கள் சொத்துக்களை விற்று வரும் பணத்தில் 13000 கோடி ரூபாய் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Zee Entertainment-இடம் நிறைய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இருக்கின்ற போதிலும் தலைவர் சுபாஷ் சந்திர கோயங்கா தான் வைத்திருக்கும் பங்குகளை விற்று வரும் காசில் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஜன்தன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களையும் MUDRA பயனாளர்களாக காட்டும் பாஜக..!

யார் வாங்குகிறார்கள்.

யார் வாங்குகிறார்கள்.

ஜப்பானிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான சோனி Zee Entertainment நிறுவனத்தின் 20 சதவிகித பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இப்போது பேச்சு வார்த்தை இன்னும் மும்முரமாகி Zee Entertainment நிறுவன பங்குகளின் மதிப்பீடு வரை பேச்சு நடந்து கொண்டிருக்கிறதாம். சுமார் 20 - 25 சதவிகித Zee Entertainment பங்குகளை வாங்க இருக்கிறதாம் சோனி.

சுபாத் சந்திரா கருத்து

சுபாத் சந்திரா கருத்து

தற்போது சுபாஷ் சந்திராவிடம் சுமார் 41 சதவிகித Zee Entertainment பங்குகள் இருக்கின்றன. இதில் வெறும் 20 சதவிகித பங்குகளை விற்றுவிட்டு மீதமுள்ள 21 சதவிகித பங்குகளை தானே வைத்துக் கொள்ள விரும்புகிறார். ஆனால் சோனியோ வாங்கினால் 25% பங்குகளை வாங்கி Zee Entertainment நிறுவனத்தின் ப்ரொமோட்டார்களில் ஒருவராகி விட வேண்டும் என கணக்கு போடுகிறது.

30% கூடுதல் விலை
 

30% கூடுதல் விலை

தற்போது Zee Entertainment பங்குகள் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் 450 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. சுமார் 30 - 35 % கூடுதல் விலை வைத்து 585 - 610 ரூபாய்க்கு விற்று தன் 13,000 கோடி ரூபாயை திரட்ட நினைக்கிறார் சுபாஷ் சந்திரா. இந்த பங்குகளை விற்று சுமார் 13,000 கோடி ரூபாய் வரை வருமாம். இந்த பணத்தை வைத்து தன் கடன்களை அடைக்கப் போகிறாராம் Zee Entertainment நிறுவனத்தின் தலைவர் சுபாத் சந்திர கோயங்கா.

கணக்கு போடும் சோனி

கணக்கு போடும் சோனி

Zee Entertainment நிறுவனத்துக்கு 66 டிவி சேனல்கள் இருக்கின்றன. 171 நாடுகளில் இவர்கள் சேனல்கள் ஒளிபரப்பாகிறது. சோனியொ வெறும் 29 சேனல்களை மட்டுமே ஒளிபரப்புகிறது. ஆக எப்படி பார்த்தாலும் சோனிக்கு கொஞ்சம் நல்ல பிசினஸாக படுகிறதாம். கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்லை 20% பங்குகளை மட்டும் வாங்கிவிடலாமா எனவும் யோசித்து வருகிறார்களாம்.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்

இன்றைக்கு இந்தியர்கள் அதிகம் பார்க்கத் தொடங்கி இருக்கும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் துறையிலும் Zee Entertainment கால் பதித்திருக்கிறது. Zee5 என்பது தான் Zee Entertainment-ன் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன். இந்த செயலி அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸார் போன்றவர்களோடு போட்டி போடுகிறது. சோனியும் தன் பங்குக்கு சோனி லைவ் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷனை நடத்தி வருகிறார்கள்.

Zee Entertainment தரப்பு

Zee Entertainment தரப்பு

எங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சொத்துக்களை விற்க முயல்வது உண்மை தான். கடனை திருப்பிச் செலுத்த ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொள்ள முயன்றதும் உண்மை தான். ஆனால் இப்போது சோனியோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். அதோடு வங்கிகளிடம் 30 ஏப்ரல் 2019க்கு வரை கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசத்தையும் கேட்டு வாங்கி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sony is going to by 20 percent share of Zee entertainment

sony is going to by 20 percent stake of Zee entertainment
Story first published: Thursday, March 14, 2019, 15:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X