11000 பேரை வீட்டுக்கு அனுப்பும் வோக்ஸ்வேகன் 2000 புதிய ஊழியர்கள் நியமனம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிராங்க்ஃபர்ட்: ஆட்டோ மொபைல் துறையில் பேட்டரி கார்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதால் அதற்கு தயாராகும் வகையில் 11000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துவிட்டு அதற்கு பதிலாக 2000 புதிய ஊழியர்களை புதிதாக நியமிக்க ஃபோக்ஸ்கேன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பின்படி சுமார் 11 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.46,310 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் மிச்சம் செய்ய முடியும்.

எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பேட்டரி கார்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கணித்துள்ளதால் தான் பேட்டரி கார்கள் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2000 புதிய பணிகளை உருவாக்க முடிவெடுத்துள்ளது.

ஒரே தேசம், ஓரடுக்கு வரி... காங்கிரஸ் ஆட்சியில் எளிமையான ஜிஎஸ்டி வரி - ராகுல்காந்தி

கார் விற்பனையில் சாதனை

கார் விற்பனையில் சாதனை

கார் உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்து சாதனை நிறுவனமாகும்.

1,85,000 கார்கள் ஏற்றுமதி

1,85,000 கார்கள் ஏற்றுமதி

ஃபோக்ஸ்வேகன் இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்கள் சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 185000 கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

ரூ.500 கோடி அபராதம்
 

ரூ.500 கோடி அபராதம்

கார்களை ஏற்றுமதி செய்வதில் சாதனை செய்திருந்தாலும், சோதனையாக ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த டீசல் ரக கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான கருவி பொருத்தப்பட்டுள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக தண்டனையா தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்தது.

 1 கோடி கார்கள்

1 கோடி கார்கள்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்ததால், உலகம் முழுவதும் உள்ள சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திரும்பப் பெறவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்நிறுவனம் மாற்றி யோசிக்க தொடங்கியுள்ளது.

7000 ஊழியர்கள் நீக்கம்

7000 ஊழியர்கள் நீக்கம்

தற்போது தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் ரக கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டு எலக்ட்ரிக் ரக கார்களை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் ரக கார்களின் உற்பத்தியை நிறுத்துவதால் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 5000 முதல் 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் சுமார் 11000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.46,310 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் மிச்சம் செய்ய முடியும்

பேட்டரி கார்

பேட்டரி கார்

ஊழியர்களை குறைப்பு செய்தாலும், வருங்காலத்தில் பேட்டரி ரக கார்கள் தான் முக்கிய ரோலாக ஆட்டோ மொபையில் துறையில் இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் கணித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.1,49,136 கோடி வரைக்கும் அதற்காக செலவிட தயாராகியுள்ளது.

 விற்பனையை அதிகரிக்க முடிவு

விற்பனையை அதிகரிக்க முடிவு

இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கார் தயாரிப்பில் மாற்றங்களை விரைவாக கொண்டு வருவோம். இந்த ஆண்டுக்குள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலக ஆடடோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வேகனின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.

புதிதாக 2000 ஊழியர்கள்

புதிதாக 2000 ஊழியர்கள்

எலக்ட்ரானிக் கார்களை தயாரிக்கும் பணியில் 2000 புதிய பணிகளை உருவாக்க முடியும். இதில் தொழில்நுட்ப மற்றும் சாஃப்ட்வேர் ஊழியர்களும் அடங்குவார்கள். இவ்வாறு பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்கள் வரும் 2025ஆம் ஆண்டு வரையிலும் பணியில் இருப்பார்கள். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரிக் துறையில் காலடி பதிப்போம் என்று ஃபோக்ஸ்வேகனின் தலைமை அதிகாரி ரால்ஃப் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Volkswagen to cut 7000 jobs before 2023

German Car maker Volkswagen said it would cut up to 7000 jobs by 2023, as it seeks to accelerate its transition to electric vehicle. Volkswagen will be boosting the pace of its transformation taking an important steps this year to strengthen competitiveness on as a sustained basis-the company said,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X