சமூக வலைதளங்களில் சம்பளத்துக்காக கதறும் BSNL ஊழியர்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL தன் 1.76 லட்சம் ஊழியர்களுக்கு நாடு முழுக்க சம்பளம் தரவில்லை.

BSNL வரலாற்றிலேயே தன் ஊழியர்களுக்கு கூட சம்பளம் தர பணம் இல்லாமல் தவிப்பது இதுவே முதல் முறை.

சில தினங்களுக்கு முன் தான் BSNL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூடிய விரைவில் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு விடும் எனச் சொன்னார்.

சம்பளம் எப்படி வரும்

சம்பளம் எப்படி வரும்

ஒவ்வொரு பிராந்தியத்திலும் கிடைக்கும் வருவாயை முதலில் சம்பளம் கொடுக்கவே பயன்படுத்தப் படும் எனவும் உறுதி அளித்தார். ஆனால் இன்று வரை BSNL ஊழியர்களுக்கு சம்பளம் அவர்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்ததாகத் தெரியவில்லை.

பினு பாண்டே

பினு பாண்டே

பினு பாண்டே. காஸியாபாத்தி BSNL அலுவலகத்தில் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர் ஒருவர் தான் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார்.ஒருவர் 6-ம் வகுப்பும், ஒருவர் 12-ம் வகுப்பும் படிக்கிறார்கள். தன்னால் பால் காரன் தொடங்கி வீட்டு வேலை செய்பவர்கள் வரை யாருக்கு காசு கொடுக்க முடியவில்லை என வருத்தப்பட்டு அழுகிறார். இனி அவர் மொழியில் இருந்து.

கதறல்
 

கதறல்

"இன்று தேதி 15 ஆகிவிட்டது இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களுக்கு சம்பளம் தானே எல்லாம். ஒரு நாள் இரண்டு நாள் சம்பளம் தாமதமாக வந்தாலே செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம். இந்த நேரம் பார்த்து 14 நாட்களுக்கு மேல் சம்பளம் தாமதமானால் எப்படி என் குடும்பத்தை நடத்துவது. என் குழந்தைகளுக்கு உணவு வழங்கக் கூட பண்ம இல்லை" என கதறி அழுகிறார்.

அதிகாரிகள் என்றால் ஓகே

அதிகாரிகள் என்றால் ஓகே

"அவ்வளவு ஏன் குழந்தைகளுக்கான பள்ளி போக்குவரத்துச் செலவுகளைக் கூட என்னால் கொடுக்க முடியவில்லை. இதுவே BSNL உயர் அதிகாரிகளாக இருந்தால் பிரச்னை இல்லை சார். அவர்களுக்கு போக வர அலுவலக வாகனங்கள் இருக்கின்றன. அதை வைத்தாவது கொஞ்சம் சமாளிக்கலாம்" என மனம் விட்டு அழுதிருக்கிறார்.

வைரல்

வைரல்

இந்த வீடியோவைக் காண இங்கே க்ளிக்குங்கள்:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bsnl employee binu pandey is crying for not getting her salary

bsnl employee binu pandey is crying for not getting her salary
Story first published: Friday, March 15, 2019, 15:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X